ஏப்ரல் 21 ( April 21 )
ஏப்ரல் 21 ( April 21 ) கிரிகோரியன் ஆண்டின் 111 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 112 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 254 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
கிமு 753 - ரொமூலஸ் மற்றும் ரேமுஸ் இருவரும் ரோம் நகரை அமைத்தனர்.
கிமு 43 - ரோமப் பேரரசு: ஆவுலஸ் ஹேர்ட்டியஸ் உடன் இடம்பெற்ற சமரில் மார்க் அந்தோனி மீண்டும் தோற்றான். ஆனால், ஹேர்ட்டியஸ் இச்சமரில் கொல்லப்பட்டான்.
1509 - ஏழாம் ஹென்றியின் இறப்புக்குப் பின்னர் அவனது மகன் எட்டாம் ஹென்றி
இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினான்.
1526 - பானிப்பட்டில் முதலாவது போர்
டில்லியின் சுல்தானுக்கும் தைமூர் வம்சத்தைச் சேர்ந்த பாபருக்கும் இடையில் இடம்பெற்றது. பாபர் இந்தியாவில்
முகலாயப் பேரரசை நிறுவினான்.
1792 - பிரேசில் நாட்டின் விடுதலைக்குப் போராடிய டைராடெண்டெஸ் தூக்கிலிடப்பட்டான்.
1863 - கடவுளின் தூதர் தாமே என
பகாவுல்லா பகிரங்கமாக அறிவித்தார். ரித்வான் தோட்டத்தில் செய்த இந்த அறிவிப்பு நாள் உலகம் முழுவதும் உள்ள
பஹாய்களால் ‘ரித்வான் முதல்’ நாள் என விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகின்றது.
1916 - இலங்கையில் அமெரிக்க மிசனறிகள் ஒன்றுகூடி முதன் முதலில் ஒரு திருச்சபையை ஆரம்பித்தனர்.
1822 - இலங்கையில் அமெரிக்கத் திருச்சபையின் குருக்களாக (pastor) முதற்தடவையாக உள்ளூரில் இருந்து தெரிவு செய்யப்பட்டனர். ஜோர்டன் லொட்ஜ், நத்தானியேல் நைல்ஸ், சார்ல்ஸ் ஹொட்ஜ், எபனேசர் போர்ட்டர் ஆகியோர் தெரிவானார்கள்.
1944 - பிரான்சில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது.
1945 - இரண்டாம் உலகப் போர் : பெர்லினில்
சோவியத் படைகள் ஜெர்மனியின் உயர் தலைமைப்பீடத்தைத் தாக்கினர்.
1960 - பிரசீலியா பிரேசிலின் தலைநகராக ஆக்கப்பட்டது.
1967 - கிரேக்கத்தில் பொதுத்தேர்தலுக்கு சில நாட்கள் இருக்கையில் இராணுவத் தளபதி ஜோர்ஜ் பப்படபவுலோஸ் ஆட்சியைக் கைப்பற்றி அடுத்த ஏழாண்டுகளுக்கு பதவியில் இருந்தார்.
1975 - வியட்நாம் போர் : தெற்கு வியட்நாம் அதிபர் நூயென் வான் டியூ
சாய்கோனை விட்டு வெளியேறினார்.
1987 - இலங்கையின் தலைநகர்
கொழும்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 106 பேர் கொல்லப்பட்டனார்.
1989 - பெய்ஜிங் நகரில் தியனன்மென் சதுக்கத்தில் கிட்டத்தட்ட 100,000 மாணவர்கள் சீர்திருத்தத் தலைவர் ஹீ யாபாங்கின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தத் திரண்டனர்.
1994 - சூரியக் குடும்பத்துக்கு வெளியே கோள்கள் இருப்பதை முதன் முதலில் வானியலாளர் அலெக்சாண்டர் வோல்ஸ்க்சான் அறிவித்தார்.
பிறப்புகள்.
1651 – யோசப் வாசு, இலங்கை கத்தோலிக்க மதகுரு, மதப்பரப்புனர், புனிதர் (இ. 1711 )
1864 – மக்ஸ் வெபர், செருமானிய பொருளியலாளர், சமூகவியலாளர் (இ.
1920 )
1917 – வசுமதி இராமசாமி , தமிழக எழுத்தாளர் (இ. 2004 )
1925 – வாண்டுமாமா, தமிழக எழுத்தாளர் (இ. 2014 )
1926 – இரண்டாம் எலிசபெத், ஐக்கிய இராச்சியத்தின் மகாராணி
1937 – ஆற்காடு வீராசாமி , தமிழக அரசியல்வாதி
1956 – மங்கள சமரவீர , இலங்கை அரசியல்வாதி
இறப்புகள்
1109 – கேடன்பரி நகரின் அன்சலேம் , இத்தாலிய-ஆங்கிலேய பேராயர், புனிதர் (பி. 1033 )
1142 – பியேர் அபேலார்டு , பிரான்சிய மெய்யியலாளர் (பி. 1079 )
1526 – இப்ராகிம் லோடி, தில்லி சுல்தானகத்தின் கடைசி ஆட்சியாளர்
1910 – மார்க் டுவெய்ன் , அமெரிக்க எழுத்தாளர் (பி. 1835 )
1938 – முகமது இக்பால் , இந்திய-பாக்கித்தானிய மெய்யியலாளர், கவிஞர் (பி. 1877 )
1946 – ஜான் மேனார்ட் கெயின்ஸ் , ஆங்கிலேயப் பொருளியலாளர், மெய்யியலாளர் (பி. 1883 )
1952 – ஸ்டாஃபோர்ட் கிரிப்ஸ், பிரித்தானிய அரசியல்வாதி (பி. 1889 )
1964 – பாரதிதாசன், புரட்சிக் கவிஞர், பாவேந்தர் (பி. 1891 )
1978 – டி. ஆர். மகாலிங்கம் , தென்னிந்தியத் திரைப்பட, நாடக நடிகர் (பி. 1923 )
2006 – முல்லையூரான் , ஈழத்துக் கவிஞர், எழுத்தாளர் (பி. 1955 )
2013 – சகுந்தலா தேவி , இந்தியக் கணிதவியலாளர் (பி. 1929 )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக