ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

ஏப்ரல் 3 ( April 3 )

ஏப்ரல் 3 ( April 3 )

ஏப்ரல் 3 ( April 3 ) கிரிகோரியன் ஆண்டின் 93 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 94 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 272 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1865 - அமெரிக்க உள்நாட்டுப் போர் : கூட்டுப் படைகள் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் தலைநகர்
ரிச்மண்ட் நகரைக் கைப்பற்றினர்.
1885 - விசைப்பொறிகளின் வடிவமைப்புக்கான செருமனியக்
காப்புரிமத்தை காட்லீப் டைம்லர் பெற்றார்.
1917 - வெளிநாட்டில் தஞ்சமடைந்திருந்த
விளாடிமிர் லெனின் உருசியா திரும்பினார்.
1922 - ஜோசப் ஸ்டாலின் சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் முதற் பொதுச் செயலாளரானார்.
1933 - நாட்சி செருமனியில் யூதர்களின்
வணிக நிறுவனங்களைப் புறக்கணிக்கும் நடவடிக்கை வெற்றி பெறவில்லை.
1942 - இரண்டாம் உலகப் போர் : பட்டான் தீபகற்பத்தில் சப்பானியப் படையினர்
அமெரிக்க மற்றும் பிலிப்பீன்சு படையினர் மீது தாக்குதலை ஆரம்பித்தனர்.
1948 - தென் கொரியாவில் ஜேஜு என்ற இடத்தில் மனித உரிமை மீறல் மற்றும் உள்நாட்டுப் போர் ஆரம்பித்தது.
1958 - பிடெல் காஸ்ட்ரோவின் புரட்சி இராணுவம் ஹவானா மீது தாக்குதல் தொடுத்தது.
1966 – சோவியத்தின் லூனா 10 விண்கலம் சந்திரனின் சுற்றுவட்டத்தை அடைந்தது. பூமியை விட வேறொரு விண் பொருளைச் சுற்ற ஆரம்பித்த முதலாவது விண்கலம் இதுவாகும்.
1973 - உலகின் முதலாவது நகர்பேசி அழைப்பை நியூயோர்க் நகரில்
மோட்டோரோலா நிறுவனத்தின் மார்ட்டின் கூப்பர் என்பவர் பெல் ஆய்வுகூடத்தின் ஜொயெல் ஏங்கல் என்பருக்கு மேற்கொண்டார்.
1974 - 13 அமெரிக்க மாநிலங்களில் ஆரம்பித்த கடும் சூறாவளி காரணமாக 315 பேர் கொல்லப்பட்டனர். 5,500 பேர் வரையில் காயமடைந்தனர்.
1975 - பொபி ஃபிஷர் அனதோலி கார்ப்பொவ்வுடன் சதுரங்கப் போட்டியில் பங்குபற்ற மறுத்ததால் கார்ப்பொவ் உலக வெற்றிக்கிண்ணத்தைத் தனதாக்கிக் கொண்டார்.
1981 - உலகின் முதலாவது பெயரத்தகு கணினி "ஒஸ்போர்ன் 1" சான் பிரான்சிஸ்கோவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
1982 - போக்லாந்து தீவுகளை
ஆர்ஜெண்டீனாவிடம் இருந்து மீளப் பெறும் முகாமாக பிரித்தானியா தனது கடற்படையை அங்கு அனுப்பியது.
1996 - ஐக்கிய அமெரிக்காவின் வான்படை விமானம் ஒன்று குரோவாசியாவில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அமெரிக்க அரசின் வணிக செயலாளர் ரொன் பிரௌன் உட்பட 35 பேர் கொல்லப்பட்டனர்.
1997 - அல்ஜீரியாவில் தலித் என்ற கிராமத்தில் 52 பொதுமக்கள் ஆயுததாரிகளினால் படுகொலை செய்யப்பட்டனர்.

பிறப்புகள்

1781 – சுவாமிநாராயண், இந்திய மதகுரு (இ. 1830 )
1783 – வாசிங்டன் இர்விங் , அமெரிக்க எழுத்தாளர், வரலாற்றாளர் (இ. 1859 )
1841 – எர்மன் கார்ல் வோகல் , செருமானிய வானியற்பியலாளர் (இ. 1907 )
1903 – கமலாதேவி சட்டோபாத்யாய் , இந்திய சமூக சீர்திருத்தவாதி, பெண்ணியவாதி, விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1988 )
1904 – ராம்நாத் கோயங்கா , இந்தியப் பத்திரிகையாளர் (இ. 1991 )
1914 – சாம் மானேக்சா , இந்தியப் படைத்துறை உயர் தளபதி பி. 2008 )
1924 – மார்லன் பிராண்டோ , அமெரிக்க நடிகர் (இ. 2004 )
1934 – குட்டால் ,தாங்கிலேய முதனியியலாலர், மானிடவியலாளர்
1949 – ராம நாராயணன் , தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர் (இ. 2014 )
1950 – இந்திரஜித் குமாரசுவாமி , இலங்கைத் தமிழ் பொருளியலாளர், மத்திய வங்கி ஆளுநர்
1951 – பூ. செந்தூர் பாண்டியன், தமிழக அரசியல்வாதி (இ. 2015 )
1954 – க. கிருஷ்ணசாமி, இந்திய மருத்துவர், அரசியல்வாதி
1955 – அரிகரன், இந்தியப் பாடகர்
1956 – மோகன் ராமன் , இந்தியத் திரைப்பட, தொலைக்காட்சி நடிகர்
1961 – எடி மர்பி , அமெரிக்க நடிகர்
1962 – ஜெயபிரதா , இந்திய நடிகை, அரசியல்வாதி
1973 – பிரபுதேவா , தென்னிந்திய நடிகர், நடன அமைப்பாளர்
1982 – கோபி ஸ்மல்டேர்ஸ் , கனடிய நடிகை
1983 – சிரேயா ரெட்டி , தென்னிந்திய நடிகை
1986 – அமாண்டா பைன்ஸ் , அமெரிக்க நடிகை.

இறப்புகள்

1325 – ஹசரத் நிஜாமுதீன் , சூஃபி அறிஞர் (பி. 1238 )
1680 – சிவாஜி , மராட்டியப் பேரரசர் (இ.
1630 )
1897 – ஜொகான்னெஸ் பிராம்ஸ் , செருமானிய இசையமைப்பாளர் (பி. 1833 )
1981 – ஔவை துரைசாமி , தமிழகத் தமிழறிஞர் (பி. 1903 )
1991 – கிரஃகாம் கிரீன், ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1904 )
1992 – எஸ். எஸ். ராமசாமி , தமிழக அரசியல்வாதி (பி. 1918 )
2013 – ரூத் பிராவர் ஜாப்வாலா , செருமானிய-அமெரிக்க எழுத்தாளர் (பி.
1927 )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக