வியாழன், 27 ஏப்ரல், 2017

ஏப்ரல் 28 ( April 28 )

ஏப்ரல் 28 ( April 28 )

ஏப்ரல் 28 ( April 28 ) கிரிகோரியன் ஆண்டின் 118 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 119 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 247 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1192 - ஜெருசலேம் மன்னன் முதலாம் கொன்ராட் முடிசூடி இரண்டாம் நாள் கொலை செய்யப்பட்டான்.
1792 - பிரான்ஸ் ஆஸ்திரிய நெதர்லாந்தை முற்றுகையிட்டது.
1862 - அமெரிக்க உள்நாட்டுப் போர் :
ஐக்கிய அமெரிக்காவின் அட்மிரல் டேவிட் ஃபராகுட் கூட்டமைப்பிடம் இருந்து
லூசியானாவின் நியூ ஓர்லென்ஸ் நகரைக் கைப்பற்றினான்.
1876 - இந்தியாவின் அரசியாக
விக்டோரியா மகாராணி தெரிவு செய்யப்பட்டமை லண்டன் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டது.
1920 - அசர்பைஜான் சோவியத் ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டது.
1932 - மஞ்சள் காய்ச்சல் நோய்க்கான தடுப்பூசி முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது.
1945 - முசோலினியும் அவனது மனைவியும் இத்தாலிய எதிர்ப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1952 - இரண்டாம் உலகப் போரின் போது
ஐக்கிய அமெரிக்காவினால் கைப்பற்றப்பட்ட
ஜப்பானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறின.
1965 - டொமினிக்கன் குடியரசில் ஐக்கிய அமெரிக்க கடற்படையினர் தரையிறங்கினர்.
1978 - ஆப்கானிஸ்தான் அதிபர் முகமது டாவூட் கான் கம்யூனிச சார்புப் போராளிகளால் பதவியிறக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்.
1995 - பலாலியில் அவ்ரோ விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதற்கு அடுத்த நாள் இன்னுமொரு விமானம் வீழ்த்தப்பட்டது.
1996 - அவுஸ்திரேலியா ,
தாஸ்மேனியாவில் "மார்ட்டின் பிறையன்ட்" என்பவன் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 35 பேர் கொல்லப்பட்டு 37 பேர் காயமடைந்தனர்.
2000 - இலங்கை இராணுவத்தினருக்கெதிரான
விடுதலைப் புலிகளின் ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கை முடிவுக்கு வந்தது.
2001 - கோடீஸ்வரர் டென்னிஸ் டீட்டோ என்பவர் விண்வெளிக்குச் சென்ற முதல் உல்லாசப் பயணியானார்.
2005 - இலங்கையின் பிரபலமான ஊடகவியலாளர் தர்மரத்தினம் சிவராம்
கொழும்பில் கடத்தப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டார்.

பிறப்புகள்

1758 – ஜேம்ஸ் மன்ரோ, ஐக்கிய அமெரிக்காவின் 5வது அரசுத்தலைவர் (இ.
1831 )
1774 – பிரான்சிசு பெய்லி , ஆங்கிலேய வானியலாளர் (இ. 1844 )
1900 – ஜான் ஊர்த், டச்சு வானியலாளர் (இ. 1992 )
1906 – கியேடல் , செக்-அமெரிக்கக் கணிதவியலாளர், மெய்யியலாளர் (இ. 1978 )
1906 – பார்ட் போக் , டச்சு-அமெரிக்க வானியலாளர் (இ. 1983 )
1908 – ஆஸ்கர் ஷிண்ட்லர் , செக்-செருமானியத் தொழிலதிபர் (இ. 1974 )
1923 – இரா. செழியன், தமிழக அரசியல்வாதி, எழுத்தாளர்
1924 – கென்னத் கவுண்டா , சாம்பியாவின் 1வது அரசுத்தலைவர்
1926 – ஹார்ப்பர் லீ, அமெரிக்கப் புதின எழுத்தாளர் (இ. 2016 )
1926 – எஸ். ரி. அரசு , இலங்கை நாடகக் கலைஞர், நாடக இயக்குநர், ஒப்பனைக் கலைஞர், ஒளிப்பதிவாளர், சிற்பக் கலைஞர் (இ. 2016 )
1937 – சதாம் உசேன் , ஈராக்கின் 5வது
அரசுத்தலைவர் (இ. 2006 )
1987 – சமந்தா ருத் பிரபு , இந்தியத் திரைப்பட நடிகை

இறப்புகள்

1854 – நத்தானியேல் வாலிக் , தென்மார்க்கு மருத்துவர், தாவரவியலாளர் (பி. 1786 )
1918 – காவ்ரீலோ பிரின்சிப் , யூகோசுலாவிய தேசிய இயக்க உறுப்பினர், போசுனிய செர்பியர் (பி. 1894]])
1942 – உ. வே. சாமிநாதையர் , தமிழகத் தமிழறிஞர், தமிழ் சுவடி ஆய்வாளர், சேகரிப்பாளர், பதிப்பாளர் (பி. 1855 )
1945 – பெனிட்டோ முசோலினி , இத்தாலியின் 27வது பிரதமர் (பி. 1883 )
1955 – தி. வே. சுந்தரம் , இந்தியத் தொழிலதிபர் (பி. 1877 )
2000 – சாலினி இளந்திரையன் , தமிழக சொற்பொழிவாளர், எழுத்தாளார், இதழாளர், அரசியற் செயற்பாட்டாளர் (பி.
1933 )
2005 – தர்மரத்தினம் சிவராம் , இலங்கை ஊடகவியலாளர், எழுத்தாளர் (பி. 1959 )
2006 – நா. சோமகாந்தன் , ஈழத்து எழுத்தாளர் (பி. 1934 )
2007 – கார்ல் பிரீட்ரிக் வைசாக்கர் , செருமானிய இயற்பியலாளர், மெய்யியலாளர் (பி. 1912 )

சிறப்பு நாள்

வழக்கறிஞர் தினம் ( ஒடிசா, இந்தியா )
முஜாகிதீன் வெற்றி நாள் ( ஆப்கானித்தான் )
வேலையின் போது பாதுகாப்புக்கும் நலத்துக்குமான உலக நாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக