சனி, 15 ஏப்ரல், 2017

ஏப்ரல் 16 ( April 16 )

ஏப்ரல் 16 ( April 16 )

ஏப்ரல் 16 ( April 16 ) கிரிகோரியன் ஆண்டின் 106 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 107 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 259 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1346 - தென்கிழக்கு ஐரோப்பாவின் பெரும்பகுதியை உள்ளடக்கிய சேர்பியப் பேரரசு டுசான் சில்னி என்பவனால் உருவாக்கப்பட்டது.
1444 - இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் இடையில் ஐந்து ஆண்டுகள் போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டது.
1582 - ஸ்பானிய ஆக்கிரமிப்பாளன் ஹெர்னாண்டோ டி லேர்மா என்பவன்
ஆர்ஜெண்டீனாவின் சால்ட்டா என்ற குடியேற்றத் திட்டத்தை கண்டுபிடித்தான்.
1853 - இந்தியாவின் முதலாவது பயணிகள் தொடருந்து சேவை பம்பாயில் ஆரம்பிக்கப்பட்டது.
1876 - பல்கேரியாவில் ஒட்டோமான் பேரரசுக்கெதிராக புரட்சி வெடித்தது.
1885 - இலங்கையில் அஞ்சல் அலுவலக சேமிப்புத் திட்ட முறை அறிமுகமானது.
1912 - ஹரியெட் குயிம்பி என்னும் பெண்
ஆங்கிலக் கால்வாயைவிமானத்தில் கடந்த முதல் பெண் ஆனார்.
1917 - நாடு கடந்த நிலையில்
பின்லாந்தில் இருந்த விளாடிமிர் லெனின் சென் பீட்டர்ஸ்பேர்க் திரும்பினார்.
1919 - அம்ரித்சர் படுகொலையைக் கண்டித்து மகாத்மா காந்தி ஒரு நாள் உண்ணாநோன்பு இருந்தார்.
1925 - பல்கேரியாவின் தலைநகர்
சோஃபியாவில் சென் நெடெலியா ஆலயத்தில் கம்யூனிஸ்டுகள் தாக்கியதில் 150 பேர் கொல்லப்பட்டு 500 பேர் படுகாயமடைந்தனர்.
1945 - இரண்டாம் உலகப் போர் :
செம்படையினர் ஜெர்மனியப் படைகளுக்கெதிரான தமது கடைசிப் போரை பெர்லினைச் சுற்றி ஆரம்பித்தனர்.
1945 - இரண்டாம் உலகப் போர் : அகதிகளை ஏற்றிச் சென்ற கோயா என்ற ஜெர்மனியின் கப்பல் ஒன்று சோவியத் நீர்மூழ்கியால் தாக்கப்பட்டு மூழ்கியதில் 7,000 பேர் கொல்லப்பட்டனர்.
1947 - ஐக்கிய அமெரிக்கா , டெக்சாசில் துறைமுகத்தில் நிற சரக்குக் கப்பல் ஒன்று வெடித்ததில் டெக்சாஸ் நகரம் தீப்பிடித்தது. 600 பேர் இதில் கொல்லப்பட்டனர்.
1947 - சோவியத் - ஐக்கிய அமெரிக்கா இடையேயான உறவுகளை பனிப்போர் என
அமெரிக்க பொருளாதார ஆலோசகர்
பேர்னார்ட் பரெக் என்பவர் முதன் முதலாக வர்ணித்தார்.
1966 - முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூரில் ஆரம்பமானது.
1972 - நாசாவின் அப்போலோ 16 விண்ணுக்கு ஏவப்பட்டது.
2007 - ஐக்கிய அமெரிக்காவின்
வேர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் கொரிய மாணவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில்
தமிழகப் பேராசிரியர் லோகநாதன் உட்பட 33 பேர் கொல்லப்பட்டு 29 பேர் காயமடைந்தனர்.

பிறப்புகள்

1660 – ஹேன்ஸ் ஸ்லோன், ஐரிய-ஆங்கிலேய மருத்துவர் (இ. 1753 )
1813 – சுவாதித் திருநாள் ராம வர்மா , திருவிதாங்கூர் சமத்தான மன்னர் (இ. 1846]])
1848 – கந்துகூரி வீரேசலிங்கம் , இந்திய எழுத்தாளர், செயற்பாட்டாளர் (இ. 1919 )
1851 – பொன்னம்பலம் இராமநாதன் , இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. 1930 )
1867 – ரைட் சகோதரர்கள் , அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர் (இ. 1912 )
1886 – பி.ஸ்ரீ. , தமிழகப் பேச்சாளர், எழுத்தாளர், பதிப்பாசிரியர், வரலாற்று ஆசிரியர் (இ. 1981 )
1889 – சார்லி சாப்ளின், ஆங்கிலேய நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் (இ. 1977 )
1896 – ராமச்சந்திர தீட்சிதர் , தமிழக இந்தியவியலாளர், திராவிடவியலாளர் (இ.
1953 )
1906 – கனஞ்சம் பட்டி சிதம்பர அருணாச்சல ஞானகிரி , தமிழக பன்மொழி ஆய்வாளர்
1922 – அநுத்தமா , தமிழக எழுத்தாளர் (இ.
2010 )
1927 – திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்
1935 – சுபத்திரன் , ஈழத்து முற்போக்கு இலக்கியக் கவிஞர் (இ. 1979 )
1940 – இராயப்பு யோசப் , இலங்கை கத்தோலிக்க ஆயர்
1951 – ம. சூ. நாராயணா , இந்திய நடிகர், இயக்குனர் (இ. 2015 )
1953 – நிழல்கள் ரவி , தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
1957 – பெரியசாமி சந்திரசேகரன், இலங்கை மலையக அரசியல்வாதி, தொழிற்சங்கவாதி
1961 – ஜார்பம் காம்லின் , அருணாச்சலப் பிரதேசத்தின் 7வது முதலமைச்சர் (இ. 2014 )
1963 – சலீம் மாலிக் , பாக்கித்தானியத் துடுப்பாளர்
1969 – சௌம்யா, தமிழக கருநாடக இசைப் பாடகி
1971 – செலெனா, அமெரிக்கப் பாடகி, நடிகை (இ. 1995 )
1978 – லாரா தத்தா , இந்திய நடிகை
1986 – பவுல் டி ரெஸ்டா , இசுக்கொட்டிய வாகன ஓட்ட வீரர்.

இறப்புகள்

1783 – கிறித்தியன் மேயர் , செக் வானியலாளர் (பி. 1719 )
1828 – பிரான்சிஸ்கோ கோயா , எசுப்பானிய-பிரான்சிய ஓவியர் (பி. 1746 )
1879 – பெர்னதெத் சுபீரு , பிரான்சியப் புனிதர் (பி. 1844 )
1888 – சிக்முந்த் வுரூபிளேவ்ஸ்கி , போலந்து இயற்பியலாளர், வேதியியலாளர் (பி. 1845 )
1958 – உரோசலிண்டு பிராங்குளின் , ஆங்கிலேய உயிரியற்பியலாளர் (பி. 1920 )
1970 – ரிச்சர்ட் நியூட்ரா , ஆத்திரிய-அமெரிக்கக் கட்டிடக்கலைஞர் (பி. 1892 )
1972 – யசுனாரி கவபட்டா , நோபல் பரிசு பெற்ற சப்பானிய எழுத்தாளர் (பி. 1899 )
2007 – கோ. வா. இலோகநாதன் , இந்திய-அமெரிக்கப் பொறியியலாளர், கல்வியாளர் (பி. 1954 )
2007 – சந்திரபோஸ் சுதாகரன் , இலங்கை ஊடகவியலாளர்
2010 – கோயம்புத்தூர் கிருஷ்ணாராவ் பிரகலாத் , இந்திய-அமெரிக்க மேலாண்மை வல்லுநர் (பி. 1941 )
2013 – சார்லஸ் புரூசன் , ஜிப்ரால்ட்டர் அரசியல்வாதி (பி. 1938 )
2013 – எல். கே. பி. லகுமையா , இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், காந்தியவாதி (பி. 1913 )

சிறப்பு நாள்

உலகக் குரல் நாள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக