ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

ஏப்ரல் 2 ( April 2 )

ஏப்ரல் 2 ( April 2 )

ஏப்ரல் 2 ( April 2 ) கிரிகோரியன் ஆண்டின் 92 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 93 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 273 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

670 – இரண்டாவது சியா இமாம் அல் ஹசன் நஞ்சூட்டப்பட்டதை அடுத்து இறந்தார்.
1513 – எசுப்பானிய நாடுகாண் பய்டணி உவான் போன்சி டெ லெயோன்
புளோரிடாவை முதற்தடவையாகக் கண்டார்.
1755 – பிரித்தானியக் கடற்படைத்தளபதி வில்லியம் ஜேம்சு இந்தியாவின் மேற்ற்குக் கரையில் உள்ள மராத்தா கோட்டையைக் கைப்பற்றினார்.
1800 – லுடுவிக் வான் பேத்தோவன் தனது முதலாவது சிம்பொனியை
வியன்னாவில் அரங்கேற்றினார்.
1801 – பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள் : பிரித்தானியக் கடற்படை தென்மார்க்கு கடற்படைக் கப்பற்தொகுதியைக் கைப்பற்றியது.
1851 – நான்காம் இராமா தாய்லாந்தின் மன்னராக முடிசூடினார்.
1863 – அமெரிக்க உள்நாட்டுப் போர் :
வேர்ஜினியாவில் ரிச்மண்ட் நகரில் உணவுப் பற்றாக்குறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நூற்றுக்கும் அதிகமான பெண்கள் அமெரிக்கக் கூட்டமைப்புக்கெதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
1865 – அமெரிக்க உள்நாட்டுப் போர் :
அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு தலைவர் ஜெபர்சன் டேவிஸ் மற்றும் அவரது அமைச்சர்கள் கூட்டமைப்பின் தலைநகர்
ரிச்மண்ட்டை விட்டுப் புறப்பட்டனர்.
1900 – புவேர்ட்டோ ரிக்கோவுக்கு மட்டுப்படுத்தப்பட்ட சுயாட்சி வழங்கும் தீர்மானம் அமெர்க்க சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
1902 – உருசியப் பேரரசின் உட்துறை அமைச்சர் திமீத்ரி சிப்பியாகின் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் படுகொலை செய்யப்பட்டார்.
1902 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது முழுநேரத் திரையரங்கு
கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் திறக்கப்பட்டது.
1911 – ஆத்திரேலியாவில் முதலாவது தேசிய மக்கள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
1912 – டைட்டானிக் கப்பல் தனது முதலாவது கடற்பயண ஒத்திகையை ஆரம்பித்தது.
1917 – முதல் உலகப் போர் : அமெரிக்க அரசுத்தலைவர் ஊட்ரோ வில்சன்
செருமானியப் பேரரசு மீது போர்ப் பிரகடனத்தை அறிவிக்க சட்டமன்றத்தில் ஆணை கேட்டார்.
1921 – இன்றைய ஈரானை அமைப்பதற்கான கொரசான் இராணுவ அரசு நிறுவப்பட்டது.
1930 – செவ்தித்து பேரரசி மர்மமான முறையில் இறந்ததை அடுத்து முதலாம் ஹைலி செலாசி எத்தியோப்பியாவின் பேரரசராக அறிவிக்கப்பட்டார்.
1972 – 1950களில் கம்யூனிஸ்டாக அறிவிக்கப்பட்ட பின்னர் நடிகர் சார்லி சாப்ளின் முதற்தடவையாக அமெரிக்கா திரும்பினார்.
1975 – வியட்நாம் போர் : வட வியட்நாமியப் படையினரின் ஊடுருவலை அடுத்து பல்லாயிரக்கணக்கான ஏதிலிகள் குவாங்கு காய் மாகாணத்தை விட்டு வெளியேறினர்.
1982 – போக்லாந்து போர் : போக்லாந்து தீவுகள் மீது அர்கெந்தீனா போர் தொடுத்தது.
1983 – யாழ்ப்பாணம் அரச அதிபரின் செயலகத்தில் விடுதலைப் புலிகள் குண்டுத்தாக்குதல் நடத்தினர்.
1984 – ராகேஷ் சர்மா சோயூஸ் T-11
விண்கலத்தில் பயணித்து, விண்வெளி சென்ற முதலாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.
2007 – சொலமன் தீவுகளுக்கு அண்மையில் கடலின் அடியில் இடம்பெற்ற
நிலநடுக்கம் காரணமாக எழுந்த
ஆழிப்பேரலை இத்தீவுகளில் பலத்த சேதத்தை உண்டுபண்ணியது. 8 பேர் வரையில் உயிரிழந்தனர்.
2007 – ஆப்கானித்தானில் இடம்பெற்ற பெரும் வெள்ளப்பெருக்கினால் 512 பேர் கொல்லப்பட்டனர்.
2011 – மும்பையில் துடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதி ஆட்டத்தில் இந்திய அணி இலங்கையை 6 இலக்குகளால் வென்று கோப்பையைப் பெற்றது.
2015 – கென்யாவின் கரிசா பல்கலைக்கழகத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 148 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

742 – சார்லமேன் , புனித உரோமைப் பேரரசர் (இ. 814 )
1566 – மக்தலேனா தே பாசி , இத்தாலிய உரோமன் கத்தோலிக்க புனிதர் (இ. 1607 )
1618 – பிரான்சிஸ்கோ மரியா கிரிமால்டி , இத்தாலியக் கணிதவியலாளர், இயற்பியலாளர் (இ. 1663 )
1725 – கியாகோமோ காசநோவா , இத்தாலிய நாடுகாண் பயணி (இ. 1798 )
1788 – பிரான்சிஸ்கோ பலக்டாஸ் , பிலிப்பீனியக் கவிஞர் (இ. 1862 )
1805 – ஆன்சு கிறித்தியன் ஆன்டர்சன் , தென்மார்க்கு எழுத்தாளர் (இ. 1875 )
1842 – தோமினிக் சாவியோ , இத்தாலியப் புனிதர் (இ. 1857 )
1881 – வ. வே. சு. ஐயர் , இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ.
1925 )
1884 – ந. மு. வேங்கடசாமி நாட்டார், தமிழகத் தமிழறிஞர், சொற்பொழிவாளர் (இ. 1944 )
1891 – மக்ஸ் ஏர்ண்ஸ்ட் , செருமானிய ஓவியர், கவிஞர் (இ. 1976 )
1914 – அலெக் கின்னஸ், ஆங்கிலேய நடிகர் (இ. 2000 )
1924 – நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் , தமிழக நாதசுவரக் கலைஞர்
1942 – ரோஷன் சேத் , இந்திய-ஆங்கிலேய நடிகர்
1969 – அஜய் தேவ்கான் , இந்திய நடிகர்
1977 – மைக்கல் பாஸ்பெந்தர் , செருமானிய-ஐரிய நடிகர்
1981 – மைக்கல் கிளார்க் , ஆத்திரேலியத் துடுப்பாளர்.

இறப்புகள்

1672 – பேத்ரோ கலூங்சோத், பிலிப்பீனிய மதப்பரப்புனர், புனிதர் (பி. 1654 )
1872 – சாமுவெல் மோர்சு, அமெரிக்க ஓவியர், தந்திக்குறிப்பைக் கண்டுபிடித்தவர் (பி. 1791 )
1952 – பெர்னார்டு இலியோத், பிரான்சிய வானியலாளர் (பி. 1897 )
1973 – மு. தளையசிங்கம் , இலங்கை எழுத்தாளர் (பி. 1935 )
2005 – திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் (பி. 1920 )
2012 – எம். சரோஜா , தென்னிந்திய நகைச்சுவை நடிகை.

சிறப்பு நாள்

ஒடிசா நாள் ( ஒடிசா)
பன்னாட்டுக் குழந்தைகளின் புத்தக நாள்
உலக மதியிறுக்க விழிப்புணர்வு நாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக