திங்கள், 10 ஏப்ரல், 2017

ஏப்ரல் 11 ( April 11 )

ஏப்ரல் 11 ( April 11 )

ஏப்ரல் 11 ( April 11 ) கிரிகோரியன் ஆண்டின் 101 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 102 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 264 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1079 - போலந்து மன்னன் இரண்டாம் பொலேஸ்லாவ் என்பவனின் கட்டளைக்கிணங்க கிராக்கோவ் ஆயர் ஸ்டானிஸ்லாஸ் தூக்கிலிடப்பட்டார்.
1831 - உருகுவேயில் சல்சிபுதிஸ் என்ற இடத்தில் நூற்றுக்கணக்கான சருவா இனத்தவர் படுகொலை செய்யப்பட்டனர்.
1865 - ஆபிரகாம் லிங்கன் தனது கடைசி பேச்சை நிகழ்த்தினார்.
1899 - ஸ்பெயின் புவேர்ட்டோ ரிக்கோவை ஐக்கிய அமெரிக்காவுக்கு அளித்தது.
1905 - ஐன்ஸ்டீன் தனது சார்புக் கோட்பாட்டை வெளியிட்டார்.
1921 - விளையாட்டு வர்ணனை முதன் முறையாக வானொலியில் ஒலிபரப்பானது.
1955 - ஹாங்காங்கில் இருந்து புறப்பட்ட
ஏர் இந்தியாவின் காஷ்மீர் பிரின்செஸ் என்ற விமானம் குண்டுவெடிப்பின் காரணமாக
இந்தோனீசியாவில் கடலில் வீழ்ந்து மூழ்கியது. பல ஊடகவியலாளர்கள் உட்பட 16 பேர் கொல்லப்பட்டனர்.
1957 - பிரித்தானியா சிங்கப்பூரின் சுயாட்சிக்கு ஒத்துக்கொண்டது.
1965 - ஐக்கிய அமெரிக்காவில் ஆறு மத்திய மேற்கு மாகாணங்களில் ஏற்பட்ட
சூறாவளி காரணமாக 256 பேர் கொல்லப்பட்டனர்.
1970 - அப்போலோ 13 ஏவப்பட்டது.
1979 - தான்சானியப் படைகள்
உகண்டாவின் தலைநகரான கம்பாலாவை ஆக்கிரமித்தன. இடி அமீன் தப்பி ஓட்டம்.
1981 - தெற்கு லண்டனில் பிரான்க்ஸ்டன் நகரில் இடம்பெற்ற பெரும் கலவரத்தில் 300 காவற்துறையினரும் 65 பொதுமக்களும் காயமுற்றனர்.
1987 - இஸ்ரேலுக்கும் ஜோர்தானுக்கும் இடையே இரகசிய ஒப்பந்தம் லண்டனில் கைச்சாத்தானது.
2002 - வெனிசுவேலாவில் அதிபர்
ஹியூகோ சாவெஸ் இற்கெதிராக இராணுவப் புராட்சி இடம்பெற்றது.
2007 - அல்ஜீரியாவின் தாலைநகர்
அல்ஜியேர்ஸ் நகரில் இடம்பெற்ற இரு குண்டுவெடிப்புகளில் 33 பேர் கொல்லப்பட்டு 222 பேர் காயமுற்றனர்.
2012 - இந்தோனேசியாவில் சுமாத்ரா கடற்பகுதியில் 8.7 ரிக்டர் அளவு
நிலநடுக்கம் ஏற்பட்டது. இலங்கை, தமிழ்நாடு ஆகிய இடங்களில் இலேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.

பிறப்புகள்

1798 – மாசிடோனியோ மெலோனி , இத்தாலிய இயற்பியலாளர் (இ. 1854 )
1827 – ஜோதிராவ் புலே, இந்திய மெய்யியலாளர் (இ. 1890 )
1869 – கஸ்தூரிபாய் காந்தி , மகாத்மா காந்தியின் மனைவி (இ. 1944 )
1910 – ரெங்கநாதன் சீனிவாசன் , மொரிசியசு அரசியல்வாதி (இ. 1958 )
1952 – இந்திரா சமரசேகர, இலங்கை பொறியியலாளர்
1953 – ஆண்ட்ரூ வைல்சு , ஆங்கிலேய கணிதவியலாளர்
1963 – பில்லி பௌடன் , நியூசிலாந்து துடுப்பாட்ட வீரர், நடுவர்
1982 – இயன் பெல் , ஆங்கிலேயத் துடுப்பாட்ட வீரர்.

இறப்புகள்

1918 – ஓட்டோ வாக்னர் , ஆஸ்திரியக் கட்டிடக்கலைஞர் (பி. 1841 )
2007 – கர்ட் வானெகெட் , அமெரிக்க எழுத்தாளர் (பி. 1922 )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக