ஏப்ரல் 10 ( April 10 )
ஏப்ரல் 10 ( April 10 ) கிரிகோரியன் ஆண்டின் 100 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 101 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 265 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1658 - ஊர்காவற்துறைக் கோட்டை
டச்சுக்காரரினால் கைப்பற்றப்பட்டது.
1710 - காப்புரிமை பற்றிய முதலாவது சட்ட விதிகள் பிரித்தானியாவில் வெளியிடப்பட்டன.
1741 - புரூசியா ஆஸ்திரியாவை மோல்விட்ஸ் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் வெற்றி கண்டது.
1790 - ஐக்கிய அமெரிக்காவில்
காப்புரிமம் ( Patent ) பற்றிய விதிகள் எழுதப்பட்டன.
1815 - இந்தோனீசியாவில் டம்போரா மலை தீக்கக்கியதில் பல தீவுகள் அழிந்தன. 71,000 பேர் கொல்லப்பட்டனர்.
1821 - கொன்ஸ்டண்டீனோபோலின் ஆயர் ஐந்தாம் கிரெகோரி துருக்கியர்களினால் தூக்கிலிடப்பட்டார்.
1826 - துருக்கியப் படைகளின் ஆக்கிரமிப்பை அடுத்து மெசோலோங்கி என்ற கிரேக்க நகரில் இருந்து 10,500 பேர் நகரை விட்டு வெளியேறினர். இவர்களில் மிகச்சிலரே தப்பினர்.
1848 - இங்கிலாந்தில் கிரேட் யார்மூத் நகரில் பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 250 பேர் கொல்லப்பட்டனர்.
1864 - முதலாம் மாக்சிமிலியன்
மெக்சிக்கோவின் மன்னனாக முடி சூடினான்.
1868 - அபிசீனியாவில் அரோகீ என்ற இடத்தில் பிரித்தானிய மற்றும் இந்தியக் கூட்டுப் படைகள் தியோடர் மன்னனின் படைகளை வெற்றி கண்டன. 700
எதியோப்பியப் படைவீரர்கள் கொல்லப்பட்டனர். இந்திய/பிரித்தானியப் படையினரில் இருவர் மாட்டுமே கொல்லப்பட்டனர்.
1869 - கியூபாவில் கியூபா புரட்சிக் கட்சி ஜொசே மார்ட்டீயினால் தொடங்கப்பட்டது.
1912 - டைட்டானிக் பயணிகள் கப்பல் தனது முதலாவதும் கடைசியுமான பயணத்தை
இங்கிலாந்தின் சௌதாப்ம்டன் துறையில் ஆரம்பித்தது.
1919 - மெக்சிக்கோ புரட்சித் தலைவர் எமிலியானோ சப்பாட்டா அரச படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1963 - ஐக்கிய அமெரிக்காவின் த்ரெஷர் என்ற நீர்மூழ்கி 129 பேருடன் காணாமல் போனது.
1972 - வியட்நாம் போர் : அமெரிக்க விமானங்கள் வடக்கு வியட்நாமில் குண்டுகளை வீசின.
1979 - டெக்சாஸ் மாநிலத்தில் விச்சிட்டா அருவியில் சுழற்காற்று தாக்கியதில் 42 பேர் கொல்லப்பட்டனர்.
1984 - ஈழப்போர் : பருத்தித்துறை காவல் நிலையம் விடுதலைப் புலிகளால் தகர்க்கப்பட்டது.
1985 - ஈழப்போர் : யாழ்ப்பாணம் காவல் நிலையம் விடுதலைப் புலிகளால் தகர்க்கப்பட்டது.
1991 - இத்தாலியின் மொபி பிரின்ஸ் என்ற பயணிகள் கப்பல் லிவோர்னோவில் எண்ணெய்த் தாங்கி கப்பல் ஒன்றுடன் மோதியதில் 140 பேர் கொல்லப்பட்டனர்.
1992 - லண்டனில் பால்ட்டிக் எக்ஸ்சேஞ்சு என்ற கட்டடம் ஐரிஷ் குடியரசு இராணுவத்தின் குண்டுவெடிப்பால் அழிந்தது.
1998 - அயர்லாந்து குடியரசுக்கும்
ஐக்கிய இராச்சியத்துக்கும் இடையில் வட அயர்லாந்து குறித்த பெல்பாஸ்ட் உடன்பாடு எட்டப்பட்டது.
2002 - விடுதலைப் புலிகளின் தலைவர்
வே. பிரபாகரன் கிளிநொச்சியில் சர்வதேச ஊடகவியலாளர் மகாநாட்டில் கலந்து கொண்டார்.
2006 - இந்தியாவில் உத்தரப் பிரதேசத்தில் மீரட் நகரில் வர்த்தகக் கண்காட்சி ஒன்றில் ஏற்பட்ட தீயில் 60 பேர் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்
1755 – சாமுவேல் ஹானிமன் , செருமானிய-பிரான்சிய மருத்துவர் (இ.
1843 )
1829 – வில்லியம் பூத் , இரட்சணிய சேனையை உருவாக்கிய ஆங்கிலேயர் (இ.
1912 )
1847 – ஜோசேப் புலிட்சர் , அங்கேரிய-அமெரிக்க ஊடகவியலாளர், பதிப்பாளர், அரசியல்வாதி (இ. 1911 )
1865 – ஜாக் மைனர் , அமெரிக்க-கனடிய சூழலியலாளர் (இ. 1944 )
1887 – பெர்னார்டோ ஊசே , நோபல் பரிசு பெற்ற அர்ச்செந்தீன மருத்துவர் (இ. 1971 )
1894 – கன்சியாம் தாசு பிர்லா , இந்தியத் தொழிலதிபர் (இ. 1983 )
1898 – ஆபிரகாம் கோவூர் , இலங்கை-மலையாள பகுத்தறிவாளர், உளவியலாளர், எழுத்தாளர் (இ. 1978 )
1927 – ஏ. சி. எஸ். ஹமீட் , இலங்கை அரசியல்வாதி (இ. 1999 )
1932 – உமர் சரீப் , எகிப்திய நடிகர் (இ. 2015 )
1950 – எடீ ஹேசல், அமெரிக்க கித்தார் கலைஞர் (இ. 1992 )
1952 – ஸ்டீவன் சீகல் , அமெரிக்க நடிகர்
1957 – அலிக்கோ டங்கோட்டே , நைஜீரியத் தொழிலதிபர்
1959 – இரா. கோபால் , தமிழக பத்திரிகையாளர், இதழாசிரியர்
1979 – இரேச்சல் கோரீ, அமெரிக்க எழுத்தாளர், செயற்பாட்டாளர் (இ. 2003 )
1980 – சார்லீ ஹூன்னம் , ஆங்கிலேய நடிகர்
1986 – நாமல் ராசபக்ச , இலங்கை அரசியல்வாதி
1986 – ஆயிஷா தாக்கியா, இந்திய நடிகை
1990 – அலெக்ஸ் பெட்டிஃபேர் , ஆங்கிலேய நடிகர்.
இறப்புகள்
1585 – பதின்மூன்றாம் கிரகோரி (திருத்தந்தை) (பி. 1502 )
1688 – பெர்னாவோ டி குவைறோஸ் , இந்தியாவில் சமய போதகராக வந்த போர்த்துக்கல் இயேசு சபை குருவானவர் (பி. 1617 )
1813 – ஜோசப் லூயி லாக்ராஞ்சி , இத்தாலியக் கணிதவியலாளர், வானியலாளர் (பி. 1736 )
1863 – ஜியோவன்னி பாட்டிசுட்டா அமிசி, இத்தாலிய வானியலாளர், நுண்ணோக்கியாளர் (பி. 1786 )
1922 – பிரம்மானந்தர் , சுவாமி இராமகிருஷ்ணரின் நேரடிச் சீடர் (பி. 1863 )
1931 – கலீல் ஜிப்ரான் , லெபனான்-அமெரிக்க கவிஞர், ஓவியர் (பி. 1883 )
1954 – அகுத்தே லூமியேர , பிரான்சிய இயக்குநர் (பி. 1862 )
1964 – நாச்சியார்கோயில் என். பி. இராகவப்பிள்ளை , தமிழ்நாட்டு தவில் கலைஞர் (பி. 1910 )
1993 – கிரிசு ஹானி, தென்னாப்பிரிக்க செயற்பாட்டாளர், அரசியல்வாதி (பி. 1942 )
1995 – மொரார்ஜி தேசாய் , இந்தியாவின் 6வது பிரதமர் (பி. 1896 )
1998 – அ. துரையரசன் , தமிழக அரசியல்வாதி (பி. 1922 )
1999 – தகழி சிவசங்கரப் பிள்ளை , மலையாள எழுத்தாளர் (பி. 1912 )
2010 – லேக் காச்சின்ஸ்கி, போலந்தின் 4வது அரசுத்தலைவர் (பி. 1949 )
2012 – என். வரதராஜன் , இந்திய இடதுசாரி அரசியல்வாதி
2013 – ராபர்ட் எட்வர்ட்சு, நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய மருத்துவர் (பி. 1925 )
2015 – ரிச்சி பெனோட் , ஆத்திரேலியத் துடுப்பாளர், தொலைக்காட்சித் தொகுப்பாளர் (பி. 1930 )
சிறப்பு நாள்
உடன்பிறப்புகள் நாள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக