ஏப்ரல் 15 ( April 15 )
ஏப்ரல் 15 ( April 15 ) கிரிகோரியன் ஆண்டின் 105 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 106 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 260 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1450 - பிரான்சின் போர்மிக்னி என்ற இடத்தில் ஆங்கிலேயரின் படைகளை
பிரெஞ்சுப் படைகள் தோற்கடித்ததன் மூலம் வடக்கு பிரான்சில் ஆங்கிலேயரின் அதிகாரம் முடிவுக்கு வந்தது.
1755 - சாமுவேல் ஜோன்சன் என்பவர் தனது ஆங்கில அகரமுதலி]யை வெளியிட்டார்.
1815 - சல்லி என்றழைக்கப்பட்ட டச்சு செப்பு நாணயம் இலங்கையில் அறிமுகமானது.
1865 - ஜோன் பூத் என்பவனால் முதல் நாள் சுடப்பட்ட ஐக்கிய அமெரிக்க அதிபர்
ஆபிரகாம் லிங்கன் இறந்தார். ஆன்ட்ரூ ஜோன்சன் அமெரிக்காவின் 17வது அதிபரானார்.
1892 - ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம் உருவாக்கப்பட்டது.
1912 - இரண்டு மணி 40 நிமிடங்களுக்கு முன்னர் பனிப்பாறை ஒன்றுடன் மோதிய
பிரித்தானியாவின் டைட்டானிக் பயணிகள் கப்பல் வட அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கியதில் 1503 பேர் பலியாயினர்.
1923 - இன்சுலின் முதன் முதலாக
நீரிழிவு நோய்க்கு மருந்தாகப் பாவிக்கப்பட்டது.
1940 - இரண்டாம் உலகப் போர் : நாசிப் படைகளினால் கைப்பற்றப்பட்டிருந்த
நோர்வேயின் நார்விக் நகர் மீது கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்தின.
1941 - இரண்டாம் உலகப் போர் :
ஜெர்மனியின் 200 போர் விமானங்கள் வட அயர்லாந்தின் பெல்பாஸ்ட் நகர் மீது குண்டுத்தாக்குதலை நடத்தியதில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
1943 - கூட்டுப் படைகளின் போர் விமானம் ஒன்றில் இருந்து மினேர்வா
தானுந்து தொழிற்சாலை மீது வீசப்பட்ட குண்டு குறி தவறி பெல்ஜியத்தின் மோர்ட்செல் நகர் மீது வீழ்ந்ததில் 936 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
1945 - இரண்டாம் உலகப் போர் :
ஜெர்மனியில் நாசிகளின் பேர்ஜேன்-பெல்சன் வதை முகாம் பிரித்தானியப் படையினரால் விடுவிக்கப்பட்டது.
1986 - லிபியா மீது ஐக்கிய அமெரிக்கா விமானத் தாக்குதலை நடத்தியது.
1989 - இங்கிலாந்தின் இல்சுபரோ
காற்பந்தாட்ட மைதானத்தில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 96 பேர் இறந்தனர்.
1989 - சீனாவில் தியனன்மென் சதுக்க ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது.
1997 - மக்காவில் ஹஜ் பயணிகளின் முகாம் ஒன்றில் தீப்பற்றியதில் 341 பேர் கொல்லப்பட்டனர்.
2002 - ஏர் சீனாவின் போயிங் விமானம்
தென் கொரியாவில் வீழ்ந்ததில் 128 பேர் கொல்லப்பட்டனர்.
1976 - தமிழ்நாட்டில் வள்ளுவர் கோட்டம் திறந்து வைக்கப்பட்டது.
பிறப்புகள்
1452 – லியொனார்டோ டா வின்சி, இத்தாலிய ஓவியர், சிற்பி, கட்டிடக் கலைஞர் (இ. 1519 )
1469 – குரு நானக் , 1வது சீக்கிய குரு (இ. 1539 )
1563 – குரு அர்ஜன் , 5வது சீக்கிய குரு (இ. 1606 )
1707 – லியோனார்டு ஆய்லர் , சுவிட்சர்லாந்து கணிதவியலாளர், இயற்பியலாளர் (இ. 1783 )
1793 – பிரீட்ரிக் வில்கெல்ம் வான் சுத்ரூவ , செருமானிய வானியலாளர் (இ.
1864 )
1858 – எமில் டேர்க்கேம் , பிரான்சிய சமூகவியலாளர், மெய்யியலாளர் (இ. 1917 )
1871 – சாக்கோட்டை கிருஷ்ணசாமி, இந்திய வரலாற்றாளர், திராவிடவியலாளர் (இ. 1947 )
1874 – ஜொகன்னஸ் ஸ்டார்க், நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளர் (இ.
1957 )
1894 – நிக்கிட்டா குருசேவ் , சோவியத் ஒன்றியத்தின் 7வது பிரதமர் (இ. 1971 )
1907 – நிக்கோ டின்பெர்ஜென், நோபல் பரிசு பெற்ற டச்சு-ஆங்கிலேய மருத்துவர் (இ. 1988 )
1915 – கா. கோவிந்தன் , தமிழக அரசியல்வாதி, எழுத்தாளர் (இ. 1991 )
1920 – கிருஷ்ணா வைகுந்தவாசன், இலங்கைத் தமிழ் செயற்பாட்டாளர், அரசியல்வாதி (இ. 2005 )
1924 – ம. கனகரத்தினம் , இலங்கை அரசியல்வாதி (இ. 1980 )
1931 – தோமசு திரான்சிட்ரோமர் , நோபல் பரிசு பெற்ற சுவீடியக் கவிஞர் (இ. 2015 )
1940 – ஜெஃப்ரி ஆர்ச்சர் , ஆங்கிலேய எழுத்தாளர், அரசியல்வாதி
1943 – இராபர்ட்டு இலெவுக்கோவித்ஃசு ,
நோபல் பரிசு பெற்ற அமெரிக்க உயிரிவேதியியலாளர்
1961 – கரோல் கிரெய்டர், அமெரிக்க மூலக்கூற்று உயிரியலாளர்
1977 – சுதர்சன் பட்நாயக் , இந்திய சிற்பி
1982 – சேத் ரோகன் , கனடிய-அமெரிக்க நடிகர், இயக்குநர்
இறப்புகள்
1704 – ஜொஹான்ஸ் வான் வாவெரேன் ஹூட், டச்சுக் கணிதவியலாளர், அரசியல்வாதி (பி. 1628 )
1765 – மிகைல் இலமனோசொவ் , உருசிய வேதியியலாளர், இயற்பியலாளர் (பி. 1711 )
1865 – ஆபிரகாம் லிங்கன் , அமெரிக்காவின் 16வது அரசுத்தலைவர் (பி. 1809 )
1872 – ஒகஸ்டஸ் சீபே , செருமானிய-பிரித்தானிய பொறியியளாளர் (பி. 1788 )
1889 – தந்தை தமியான் , பெல்ச்சிய மதகுரு, புனிதர் (பி. 1840 )
1980 – இழான் பவுல் சார்த்ர , நோபல் பரிசு பெற்ற பிரான்சிய மெய்யியலாளர் (பி. 1905 )
1998 – போல் போட் , கம்போடியாவின் 29வது பிரதமர் (பி. 1925 )
2005 – டி. எஸ். சந்தானம் , தமிழகத் தொழிலதிபர்(பி. 1912 )
2006 – எஸ். புண்ணியமூர்த்தி, இலங்கை வானொலி அறிவிப்பாளர்
2006 – நாவண்ணன் , ஈழத்துக் கவிஞர், ஓவியர், சிற்பி
சிறப்பு நாள்
பண்பாட்டிற்கான பன்னாட்டு நாள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக