ஏப்ரல் 27 ( April 27 )
ஏப்ரல் 27 ( April 27 ) கிரிகோரியன் ஆண்டின் 117 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 118 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 248 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1124 - முதலாம் டேவிட் ஸ்கொட்லாந்து மன்னனானான்.
1296 - இங்கிலாந்தின் முதலாம் எட்வேர்ட் மன்னன் டன்பார் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் ஸ்கொட்லாந்தரைத் தோற்கடித்தான்.
1521 - நாடுகாண் பயணி பேர்டினண்ட் மகலன் பிலிப்பீன்சில் பழங்குடியினரால் கொல்லப்பட்டார்.
1522 - மிலான் நகரைக் கைப்பற்ற இடம்பெற்ற போரில் பிரெஞ்சு மற்றும்
சுவிட்சர்லாந்துப் படையினரை
ஸ்பானியப் படையினர் தோற்கடித்தனர்.
1565 - பிலிப்பீன்சின் முதலாவது
ஸ்பானியக் குடியேற்ற நாடு சேபு (Cebu) அமைக்கப்பட்டது.
1667 - பார்வையற்ற ஜோன் மில்ட்டன் தான் எழுதிய பரடைஸ் லொஸ்ட் என்ற காவியத்தின் காப்புரிமையை £10க்கு விற்றார்.
1813 - 1812 போர் : ஐக்கிய அமெரிக்கப் படைகள் ஒண்டாரியோவின் தலைநகர்
யோர்க்கை கைப்பற்றினர்.
1840 - லண்டனில் புதிய வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையின் அடிக்கல் நாட்டப்பட்டது.
1865 - 2,400 பேரை ஏற்றிச் சென்ற ஐக்கிய அமெரிக்காவின் சுல்டானா என்ற நீராவிக்கப்பல் டென்னசிக்கருகில் வெடித்து மூழ்கியதில் 1,700 பேர் கொல்லபட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் அமெரிக்க உள்நாட்டுப் போரில் சிறைப்பிடிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட கூட்டணிப் படையினராவார்.
1904 - அவுஸ்திரேலியாவின் முதலாவது தேசிய அரசை
அவுஸ்திரேலியத் தொழிற் கட்சி அமைத்தது.
1909 - துருக்கியின் சுல்த்தான் இரண்டாம் அப்துல் ஹமீட் பதவியில் இருந்து அகற்றப்பட்டு அவனது சகோதரன் ஐந்தாம் மெஹ்மெட் ஆட்சிக்கு வந்தான்.
1941 - இரண்டாம் உலகப் போர் : ஜெர்மனியப் படைகள் கிரேக்கத் தலைநகர் ஏத்தன்ஸ் நகரை அடைந்தனர்.
1945 - இரண்டாம் உலகப் போர் : கடைசி
நாசி ஜெர்மன் படைகள் பின்லாந்தில் இருந்து வெளியேறினர்.
1945 - இரண்டாம் உலகப் போர் : நாசிக் கட்சியின் அதிகார பூர்வ பத்திரிகையான வோல்கிஷெர் பியோபாக்டர் நிறுத்தப்பட்டது.
1959 - மக்கள் சீனக் குடியரசில் இருந்து கடைசி கனேடிய மதபரப்புனர் வெளியேறினர்.
1960 - பிரெஞ்சு நிர்வாகத்தின் கீழ்
ஐநாவின் நேரடி ஆட்சியின் கீழிருந்த
டோகோ விடுதலை அடைந்தது.
1961 - சியேரா லியோனி ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
1967 - கனடாவின் மொன்ட்ரியால் நகரில்
எக்ஸோ 67 கண்காட்சி ஆரம்பமானது.
1974 - அமெரிக்க அதிபர் ரிச்சார்ட் நிக்சனுக்கெதிராக வாஷிங்டன் டிசியில் 10,000ற்கு மேற்பட்டோர் ஆர்ப்பாட்ட ஊர்வலம் சென்றனர்.
1978 - இராணுவப் புரட்சியை அடுத்து ஆப்கானித்தான் மக்கள் சனநாயகக் கட்சி
ஆப்கானித்தானின் ஆட்சியைக் கைப்பற்றியதுடன் ஆப்கானித்தானில் போர் தொடங்கியது.
1981 - Xerox PARC முதன் முறையாக கணினி mouse ஐ அறிமுகப்படுத்தியது.
1992 - சேர்பியா மற்றும்
மொண்டெனேகிரோவை உள்ளடக்கிய
யூகொஸ்லாவிய கூட்டுக் குடியரசு அமைக்கப்பட்டது.
1993 - காபோனில் இடம்பெற்ற விமான விபத்தில் காம்பியாவின் தேசிய
காற்பந்தாட்ட அணியினர் அனைவரும் கொல்லப்பட்டனர்.
1994 - தென்னாபிரிக்காவில் முதற்தடவையாக கறுப்பினத்தவரும் வாக்களித்த மக்களாட்சி முறையிலான தேர்தல் இடம்பெற்றது.
2001 - தீச்சுவாலை இராணுவ நடவடிக்கை ( ஹீனி கல) விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது. 600-ற்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டனர்.
2002 - நாசாவின் பயனியர் 10 விண்கலத்துடன் கடைசித் தடவையாக தொடர்புகள் கிடைத்தது.
2007 - எஸ்தோனியாவின் தலைநகர்
தாலின் நகரில் இருந்த சோவியத்தின் செம்படையின் நினைவுச் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டது.
பிறப்புகள்
1723 – பிலிப்பு தெ மெல்லோ , கொழும்பில் பிறந்த கிறித்தவத் தமிழறிஞர் (இ. 1790 )
1737 – எட்வார்ட் கிப்பன் , ஆங்கிலேய வரலாற்றாளர், அரசியல்வாதி (இ. 1794 )
1759 – மேரி உல்சுடன்கிராஃப்ட் , ஆங்கிலேய மெய்யியலாளர், எழுத்தாளர் (இ. 1797 )
1791 – சாமுவெல் மோர்சு, அமெரிக்க ஓவியர், மோர்சு தந்திக்குறிப்பை கண்டுபிடித்தவர் (இ. 1872 )
1822 – யுலிசீஸ் கிராண்ட், அமெரிக்காவின் 18வது அரசுத்தலைவர் (இ. 1885 )
1852 – பிட்டி தியாகராயர் , தமிழக அரசியல் தலைவர் (இ. 1925 )
1878 – மரிய குவாதலூபே கார்சிய சவாலா , மெக்சிக்கோ கத்தோலிக்கப் புனிதர் (இ. 1963 )
1902 – கந்த முருகேசனார் , ஈழத்துப்பெரியார், மூதறிஞர் (இ. 1965 )
1912 – சோரா சேகல் , இந்திய நடிகை, நடனக் கலைஞர் (இ. 2014 )
1914 – எஸ். சி. சி. அந்தோனிப்பிள்ளை, இந்தியத் தொழிற்சங்கவாதி, அரசியல்வாதி (இ. 2000 )
1939 – ஜொவாவோ பேர்னார்டோ வியெய்ரா, கினி-பிசாவு அரசுத்தலைவர் (இ. 2009 )
1941 – அலெக்சாண்டர் துபியான்சுகி , உருசியத் தமிழ்ப் பேராசிரியர், தமிழறிஞர்
1941 – பத்ஹுல்லா குலன், துருக்கிய இறையியலாளர்
1942 – வலேரி பொல்யாக்கொவ், உருசிய விண்வெளி வீரர்
1945 – பிரபஞ்சன் , தமிழக எழுத்தாளர், விமர்சகர்
1955 – எரிக் ஷ்மிட், அமெரிக்கப் பொறியியலாளர், தொழிலதிபர்
1962 – எட்வர்டு மோசர் , நோபல் பரிசு பெற்ற நோர்வே உளவியலாளர், நரம்பணுவியலாளர்.
இறப்புகள்
1521 – பெர்டினென்ட் மகலன், போர்த்துக்கீச மாலுமி, நாடுகாண் பயணி (பி. 1480 )
1605 – பதினொன்றாம் லியோ (திருத்தந்தை) (பி. 1535 )
1882 – ரால்ப் வால்டோ எமேர்சன் , அமெரிக்கக் கவிஞர், மெய்யியலாளர் (பி.
1803 )
1883 – ஏதவார்து உரோச்சே , பிரான்சிய வானியலாளர், கணிதவியலாளர் (பி. 1820 )
1886 – என்றி ஆப்சன் ரிச்சார்ட்சன் , அமெரிக்கக் கட்டிடக்கலைஞர் (பி. 1838 )
1937 – அண்டோனியோ கிராம்ஷி , இத்தாலிய சமூகவியலாளர், மொழியியலாளர், அரசியல்வாதி (பி. 1891 )
1944 – கு. ப. ராஜகோபாலன் , தமிழக எழுத்தாளர் (பி. 1902 )
1995 – ஆட்டோ சங்கர் , தமிழகக் கொலைக்குற்றவாளி (பி. 1954 )
1962 – ஏ. கே. பசுலுல் ஹக், பாக்கித்தான் அரசியல்வாதி (பி. 1873 )
1969 – என். ஆர். தியாகராஜன் , தமிழக அரசியல்வாதி, விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1913 )
1972 – குவாமே நிக்ரூமா , கானாவின் 1வது அரசுத்தலைவர் (பி. 1909 )
1974 – ஸ்ரீரஞ்சனி , தென்னிந்தியத் திரைப்பட நடிகை (பி. 1927 )
1984 – எம். டி. இராமநாதன் , கேரளக் கருநாடக இசைப்பாடகர் (பி. 1923 )
2009 – ஃபெரோஸ் கான் , இந்தியத் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர் (பி. 1939 )
2015 – க. அருணாசலம் , ஈழத்து தமிழறிஞர், பேராசிரியர் (பி. 1946 )
சிறப்பு நாள்
விடுதலை நாள் ( தென்னாப்பிரிக்கா )
விடுதலை நாள் ( சியேரா லியோனி , 1961)
விடுதலை நாள் ( டோகோ , 1960)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக