ஏப்ரல் 13 ( April 13 )
ஏப்ரல் 13 ( April 13 ) கிரிகோரியன் ஆண்டின் 103 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 104 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 262 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1111 - ஐந்தாம் ஹென்றி புனித ரோம் பேரரசின் மன்னனாக முடி சூடினான்.
1605 - ரஷ்யாவின் சார் மன்னன் பொரிஸ் குடுனோவ் மரணமானான். இரண்டாம் ஃபியோதர் சார் மன்னனானான்.
1829 - பிரித்தானிய நாடாளுமன்றம்
ரோமன் கத்தோலிக்கர்களுக்கு மத உரிமை அளித்தது.
1849 - ஹங்கேரி நாடு குடியரசானது .
1861 - அமெரிக்க உள்நாட்டுப் போர் : சம்ட்டர் கோட்டை அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்புப் படைகளிடம் சரணடைந்தது.
1868 - பிரித்தானிய மற்றும் இந்தியப் படைகள் மக்டாலாவைக் கைப்பற்றியதில்
அபினீசியப் போர் முடிவுக்கு வந்தது.
1873 - ஐக்கிய அமெரிக்காவில்
லூசியானாவில் கோல்ஃபாக்ஸ் என்ற இடத்தில் இடம்பெற்ற தேர்தல் வன்முறையில் 105 கறுப்பினத்தவரும் 3 வெள்ளையினத்தவரும் படுகொலை செய்யப்பட்டனர்.
1919 - ஜாலியன்வாலா பாக் படுகொலை :
அம்ரித்சரில் ஜாலியன்வாலா பாக் திடலில் கூடியிருந்த மக்களை நோக்கி
பிரித்தானியப் படையினர் சுட்டதில் 379 பேர் உயிரிழந்தனர்.
1930 - மகாத்மா காந்தியின் உப்புச் சத்தியாக்கிரகத்திற்கு ஆதரவாக
தென்னிந்தியாவில் ராஜாஜி தலைமையில் பாத யாத்திரை தொடங்கப்பட்டது.
1939 - இந்தியாவில் இந்திய செம்படை என்ற இராணுவ அமைப்பு
பிரித்தானியர்களுக்கு எதிரான ஆயுதப்போராட்ட அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.
1941 - ஜப்பானுக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையில் அணிசேரா உடன்பாடு எட்டப்பட்டது.
1943 – இரண்டாம் உலகப் போர் : போலந்தில் கட்டின் என்ற இடத்தில் சோவியத் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்ட போலந்து போர்க் கைதிகளின் புதைகுழிகளைத் தாம் கண்டுபிடித்ததாக ஜெர்மனி அறிவித்தது.
1945 - இரண்டாம் உலகப் போர் :
ஜெர்மனியில் கார்டெலகான் என்ற இடத்தில் ஆயிரம் போர் மற்றும் அரசியல் கைதிகள்
நாசிகளினால் படுகொலை செய்யப்பட்டனர்.
1953 - இயன் ஃபிளமிங் தனது முதலாவது
ஜேம்ஸ் பொண்ட் புதினத்தை வெளியிட்டார்.
1954 - காமராசர் சென்னை மாநிலத்தின் முதல்வரானார்.
1970 - அப்பல்லோ 13 விண்கலத்தில்
ஆக்சிஜன் தாங்கி வெடித்தது.
1974 - ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது வணிக செய்மதி வெஸ்டார் 1 ஏவப்பட்டது.
1975 - லெபனானில் 27 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதை அடுத்து அங்கு உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.
1979 - இலங்கையில் சுயாதீன தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்கப்பட்டது.
1984 - இந்தியா காஷ்மீரின் சியாச்சென் கிளேசியரை ஆக்கிரமித்தது.
1987 - மக்காவு தீவை மக்கள் சீனக் குடியரசிடம் 1999 இல் ஒப்படைக்கும் ஒப்பந்தம் போர்த்துக்கலுக்கும்
சீனாவுக்கும் இடையில் கைச்சாத்தானது.
1997 - டைகர் வூட்ஸ் கோல்ஃப் மாஸ்ரர்ஸ் வென்ற இளம் வீரரானார்.
2006 - கூகிள் காலண்டர் வெள்ளோட்டம் விடப்பட்டது.
2007 - பிரபல தமிழ் தொலைக்காட்சி நடிகை வைஷ்ணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
2012 - வட கொரியா ஏவிய ஊனா-3 என்ற
ஏவூர்தி வானில் வெடித்துச் சிதறியது.
பிறப்புகள்
1743 – தாமஸ் ஜெஃவ்வர்சன் , அமெரிக்காவின் 3வது அரசுத்தலைவர் (இ.
1826 )
1817 – ஜார்ஜ் ஜேக்கப் ஹோலியோக் , பிரித்தானிய மதசார்பின்மைக் கொள்கையாளர், ஊடகவியலாளர் (இ. 1906 )
1901 – எஸ். ஏ. விக்கிரமசிங்க , இலங்கை இடதுசாரி அரசியல்வாதி (இ. 1981 )
1905 – புருனோ ரோசி , இத்தாலிய அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1993 )
1913 – மே. ரா. மீ. சுந்தரம் , தமிழக எழுத்தாளர், கவிஞர் (இ. 1995 )
1930 – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், தமிழகத் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர் (இ. 1959 )
1930 – சு. முத்தையா, இந்திய ஊடகவியலாளர், வரலாற்றாளர்
1949 – கிறித்தபர் ஃகிச்சின்சு , ஆங்கிலேய-அமெரிக்க எழுத்தாளர், ஊடகவியலாளர் (இ. 2011 )
1960 – ரவூப் ஹக்கீம் , இலங்கை அரசியல்வாதி
1962 – நிருபமா ராஜபக்ச , இலங்கை அரசியல்வாதி
1963 – காரி காஸ்பரொவ் , உருசிய சதுரங்க ஆட்ட வீரர்
இறப்புகள்
1918 – இலாவர் கோர்னிலோவ் , உருசிய இராணுவத் தளபதி (பி. 1870 )
1941 – ஆன்னி ஜம்ப் கெனான் , அமெரிக்க வானியலாளர் (பி. 1863 )
1973 – டட்லி சேனாநாயக்க , இலங்கையின் அரசியல்வாதி, பிரதமர் (பி. 1911 )
1973 – பல்ராஜ் சாஹனீ, இந்திய திரைப்பட நடிகர் (பி. 1913 )
1990 – எஸ். பாலச்சந்தர் , தமிழக வீணைக் கலைஞர், திரைப்பட இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் (பி. 1927 )
2015 – எதுவார்தோ காலியானோ , உருகுவாய் ஊடகவியலாளர், எழுத்தாளர் (பி. 1940 )
2015 – கூன்டர் கிராசு , நோபல் பரிசு பெற்ற செருமானிய எழுத்தாளர் (பி. 1927 )
சிறப்பு நாள்
ஆசிரியர் நாள் ( எக்குவடோர் )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக