புதன், 30 நவம்பர், 2016

டிசம்பர் 1 ( December 1)

டிசம்பர் 1 ( December 1)

கிரிகோரியன் ஆண்டின் 335 ஆம்
நாளாகும். நெட்டாண்டுகளில் 336
ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு
மேலும் 30 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1420 - இங்கிலாந்தின் ஐந்தாம்
ஹென்றி மன்னன் பாரிசை
முற்றுகையிட்டான்.
1640 - போர்த்துக்கல்
ஸ்பெயினிடம் இருந்து
விடுதலை பெற்றது. நான்காம்
ஜொவாவோ மன்னனானான்.
1768 - அடிமைகளை ஏற்றிச்
சென்ற கப்பல் ஒன்று
நோர்வேக்கருகில் மூழ்கியது.
1822 - முதலாம் பீட்டர்
பிரேசிலின் பேரரசன் ஆனான்.
1875 - வேல்ஸ் இளவரசர்
( இங்கிலாந்தின் ஏழாம் எட்வேர்ட்
மன்னர்) கொழும்பு வந்தார்.
1918 - ஐஸ்லாந்து டென்மார்க்
முடியாட்சியின் கீழ் சுயாட்சி
உரிமை பெற்றது.
1918 - சேர்பிய, குரொவேசிய,
சிலவேனிய இராச்சியம் (பின்னர்
யூகொஸ்லாவிய இராச்சியம் )
அமைக்கப்பட்டது.
1924 - எஸ்தோனியாவில்
கம்யூனிசப் புரட்சி தோல்வியில்
முடிந்தது.
1934 - சோவியத் ஒன்றியத்தில்
சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின்
உயர்பீட உறுப்பினர் செர்கே
கீரொவ் கட்சித் தலைமையகத்தில்
வைத்து லியொனீட்
நிக்கொலாயெவ் என்பவனால்
சுட்டுக் கொல்லப்பட்டார்.
1958 - பிரான்சிடம் இருந்து
மத்திய ஆபிரிக்கக் குடியரசு
விடுதலை பெற்றது.
1958 - சிக்காகோவில்
பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற
தீவிபத்தில் 92 மாணவர்கள் உட்பட 95
பேர் கொல்லப்பட்டனர்.
1959 - பனிப்போர் : அண்டார்டிக்கா
கண்டத்தில் இராணுவ
நடவடிக்கைகளை நிறுத்தவும்
அக்கண்டத்தை அறிவியல்
ஆராய்ச்சிக்கு மட்டுமே
பயன்படுத்த ஒப்பந்தம்
செய்யப்பட்டது.
1960 - கொங்கோ அதிபர்
பத்திரிசு லுமும்பா இராணுவத்
தளபதி மொபுட்டுவினால்
கைது செய்யப்பட்டார்.
1961 - இந்தோனீசியாவின்
மேற்கு நியூ கினியில் மேற்கு
பப்புவா குடியரசு
அறிவிக்கப்பட்டது.
1963 - நாகாலாந்து
இந்தியாவின் 16வது
மாநிலமானது.
1965 - இந்தியாவில் எல்லைக்
காவற்படை அமைக்கப்பட்டது.
1971 - இந்திய இராணுவம்
காஷ்மீரின் ஒரு பகுதியைப்
பிடித்தது.
1973 - பப்புவா நியூ கினி
ஆஸ்திரேலியாவிடம் இருந்து
சுயாட்சி பெற்றது.
1981 - யூகொஸ்லாவியாவின்
விமானம் ஒன்று கோர்சிக்காவில்
வீழ்ந்ததில் அதில் பயணஞ் செய்த 180
பேரும் கொல்லப்பட்டனர்.
1981 - எயிட்ஸ் நோக்கொல்லி
அதிகாரபூர்வமாக
கண்டறியப்பட்டது.
1982 - முதலாவது செயற்கை
இருதயம் யூட்டா
பல்கலைக்கழகத்தில் பார்னி
கிளார்க் என்பவருக்குப்
பொருத்தப்பட்டட்து.
1989 - பனிப்போர் : கம்யூனிஸ்ட்
கட்சியின் ஏகபோக அதிகாரத்தை
அகற்ற கிழக்கு ஜேர்மனி
நாடாளுமன்றம் அதன்
அரசியலமைப்பைத் திருத்தியது.
1989 - பிலிப்பீன்ஸ் அதிபர்
கொரசோன் அக்கீனோவை
பதவியில் இருந்து அகற்ற
எடுக்கப்பட்ட முயற்சி
தோல்வியடைந்தது.
1991 - பனிப்போர் : உக்ரேன்
வாக்காளர்கள் சோவியத்திடம்
இருந்து உக்ரேன் முற்றாக
வெளியேற வாக்களித்தனர்.
2006 - இலங்கையின்
பாதுகாப்புச் செயலாளர்
கோத்தபாய ராஜபக்ச மீது
கொழும்பில் நடத்தப்பட்ட குண்டுத்
தாக்குதலில் அவர்
காயமெதுவுமின்றி தப்பினார்.
பிறப்புகள்
1918 – யோகி ராம்சுரத்குமார் ,
இந்திய ஆன்மிக குரு (இ. 2001 )
1935 – வுடி ஆலன் , அமெரிக்க
நடிகர், தயாரிப்பாளர்
1949 – செபஸ்டியான் பினேரா ,
சிலியின் 35வது அரசுத்தலைவர்
1954 – மேதா பட்கர் , இந்திய சமூக
ஆர்வலர்
1960 – உதித் நாராயண் , இந்தியத்
திரைப்படப் பின்னனிப் பாடகர்.
1963 – அர்ஜுன றணதுங்க ,
இலங்கைத் துடுப்பாட்ட வீரர்,
அரசியல்வாதி
இறப்புகள்
1859 – ஜான் ஆஸ்டின், ஆங்கிலேய
சட்ட வல்லுநர், அரசியல்
சிந்தனையாளர் (பி. 1790)
1866 – ஜார்ஜ் எவரஸ்ட், உவெல்சிய
புவியியலாளர் (பி. 1790)
1916 – சார்லஸ் தெ ஃபூக்கோ ,
பிரான்சிய மதகுரு (பி. 1858)
1927 – பெருங்காவூர்
ராஜகோபாலாச்சாரி , இந்திய
நிருவாகி (பி. 1862 )
1947 – ஜி. எச். ஹார்டி ,
ஆங்கிலேயக் கணிதவியலாளர்
(பி. 1877 )
1973 – டேவிட் பென்-குரியன் ,
இசுரேலின் 1வது பிரதமர் (பி.
1886 )
1990 – விஜயலட்சுமி பண்டிட்,
இந்திய அரசியல்வாதி (பி. 1900 )
2001 – எல்லிஸ் ஆர். டங்கன் ,
அமெரிக்க இயக்குநர்,
தயாரிப்பாளர் (பி. 1909 )
2012 – தேவேந்திரலால், இந்திய
புவியியற்பியலாளர் (பி. 1929 )
2015 – விக்கிரமன் , தமிழகப்
பத்திரிகையாளர், எழுத்தாளர் (பி.
1928 )
சிறப்பு நாள்
குடியரசு நாள் ( மத்திய
ஆப்பிரிக்கக் குடியரசு
விடுதலை நாள்
(போர்த்துக்கல்]])
ஆசிரியர் நாள் ( பனாமா )
உலக எயிட்சு நாள்

செவ்வாய், 29 நவம்பர், 2016

நவம்பர் 30 ( November 30)

நவம்பர் 30 ( November 30)

கிரிகோரியன்
ஆண்டின் 334 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 335 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 31 நாட்கள்
உள்ளன.
நிகழ்வுகள்
1612 - பிரித்தானியக் கிழக்கிந்தியக்
கம்பனியின் படைகளுக்கும் போர்த்துக்கீசருக்கும்
இடையில் இந்தியக் கரையில் சுவாலி என்ற
இடத்தில் இடம்பெற்ற சமரில்
பிரித்தானியர் வென்றனர்.
1700 - சுவீடனின் பன்னிரண்டாம்
சார்ல்ஸ் தலைமையில் 8.500
இராணுவத்தினர் எஸ்தோனியாவில்
நார்வா என்ற இடத்தில் பெரும்
ரஷ்யப் படைகளை வென்றனர்.
1718 - நோர்வேயின் பிரெட்ரிக்ஸ்டன்
கோட்டை முற்றுகையின் போது சுவீடன் மன்னன்
பன்னிரண்டாம் சார்ல்ஸ் இறந்தான்.
1782 - அமெரிக்கப் புரட்சிப் போர்:
ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஐக்கிய
இராச்சியம் இரண்டுக்கும் இடையே ஆரம்ப
அமைதி உடன்பாடு பாரிசில்
கையெழுத்திடப்பட்டது.
1803 - ஸ்பானியர்கள் லூசியானாவை
பிரான்சுக்கு அதிகாரபூர்வமாகக்
கையளித்தனர். பிரான்ஸ் இப்பிரதேசத்தை 20
நாட்களின் பின்னர் ஐக்கிய
அமெரிக்காவுக்கு விற்றது.
1806 - நெப்போலியனின் படைகள்
போலந்து தலைநகர் வார்சாவைக்
கைப்பற்றினர்.
1853 - ரஷ்யப் பேரரசின் கடற்படை வட
துருக்கியில் உள்ள சினோப் என்ற இடத்தில்
ஓட்டோமான் பேரரசின் படைகளைத் தோற்கடித்தன.
1872 - உலகின் முதலாவது அனைத்துலக
காற்பந்துப் போட்டி கிளாஸ்கோவில்
ஸ்கொட்லாந்துக்கும்
இங்கிலாந்துக்கும் இடையில்
இடம்பெற்றது.
1908 - பென்சில்வேனியாவில்
மரியான்னா என்ற இடத்தில் சுரங்கம்
ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 154
பேர் கொல்லப்பட்டனர்.
1917 - முதலாம் உலகப் போர்:
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆர்.
ஐயாத்துரை என்ற லான்ஸ் கோப்ரல் போரில்
ஈடுபட்டு இறந்தார்.
1936 - லண்டனில் பளிங்கு அரண்மனை
தீயினால் சேதமடைந்தது.
1939 - சோவியத் படைகள் பின்லாந்தை
முற்றுகையிட்டு குண்டுகளை வீசீன.
1943 - இரண்டாம் உலகப் போர் :
டெஹ்ரானில் கூடிய அமெரிக்க
ஜனாதிபதி பிராங்கிளின்
ரூஸ்வெல்ட் , பிரித்தானியத் தலைமை
அமைச்சர் வின்ஸ்டன் சேர்ச்சில், ரஷ்ய அதிபர்
ஜோசப் ஸ்டாலின் ஆகியோர் ஜூன் 1944 இல்
ஐரோப்பாவைத் தாக்கும் தமது திட்டத்தை
ஆராய்ந்தனர்.
1962 - பர்மாவைச் சேர்ந்த யூ தாண்ட்
ஐக்கிய நாடுகள் சபையின் 3வது
பொதுச் செயலராகத்
தெரிவானார்.
1966 - ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து
பார்போடஸ் விடுதலை பெற்றது.
1967 - ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து
தெற்கு யேமன் விடுதலை பெற்றது.
1967 - சுல்பிகார் அலி பூட்டோ
பாகிஸ்தான் மக்கள் கட்சியை
ஆரம்பித்தார்.
1981 - பனிப்போர் : ஜெனீவாவில்
ஐக்கிய அமெரிக்கா மற்றும் சோவியத்
பிரதிநிதிகள் ஐரோப்பாவில்
நிலைகொண்டுள்ள நடுத்தர
ஏவுகணைகளைக் குறைக்க பேச்சுவார்த்தையை
ஆரம்பித்தனர்.
1995 - வளைகுடாப் போர் முடிவுக்கு வந்தது.
பிறப்புகள்
1667 – ஜோனதன் ஸ்விப்ட் , அயர்லாந்து
எழுத்தாளர் (இ. 1745 )
1825 – வில்லியம்-அடோல்ஃப் பூகுவேரோ,
பிரான்சிய ஓவியர் (இ. 1905 )
1835 – மார்க் டுவெய்ன் ,
அமெரிக்க எழுத்தாளர் (இ. 1910 )
1858 – ஜகதீஷ் சந்திர போஸ், இந்திய
இயற்பியலாளர் (இ. 1937 )
1869 – நில்சு குஸ்டாப் டேலன் , நோபல் பரிசு
பெற்ற சுவீடன் இயற்பியலாலர் (இ.
1937 )
1874 – வின்ஸ்டன் சர்ச்சில், ஐக்கிய
இராச்சியத்தின் பிரதமர் , நோபல் பரிசு
பெற்றவர் (இ. 1965 )
1943 – டெரன்சு மாலிக்,
அமெரிக்க இயக்குநர்
1948 – கே. ஆர். விஜயா இந்திய திரைப்பட
நடிகை
1950 – வாணி ஜெயராம் ,
இந்தியப் பாடகி
1965 – பென் ஸ்டில்லர் ,
அமெரிக்க நடிகர்
1982 – எலிஷா கத்பெர்ட் , கனடிய
நடிகை
1985 – கலே கியூகோ, அமெரிக்க நடிகை
1988 – பிலிப் ஹியூஸ், ஆத்திரேலியத்
துடுப்பாளர் (இ. 2014 )
1990 – மாக்னசு கார்ல்சன், நோர்வே
சதுரங்க வீரர்
இறப்புகள்
1900 – ஆஸ்கார் வைல்டு , ஐரிய
எழுத்தாளர் (பி. 1854 )
1930 – பொன்னம்பலம்
இராமநாதன், இலங்கைத் தமிழ்
அரசியல்வாதி (பி. 1851 )
1988 – எம். கே. றொக்சாமி ,
இலங்கை இசைக்கலைஞர், இசையமைப்பாளர் (பி.
1932 )
1990 – டி. ஆர். ராமச்சந்திரன் இந்தியத்
தமிழ்த் திரைப்பட நடிகர் (பி. 1917 )
2012 – ஐ. கே. குஜரால் , இந்தியாவின்
12வது பிரதமர் (பி. 1919 )
2013 – ரகுராம் , திரைப்பட நடன
இயக்குநர், நடிகர் (பி. 1948 )
2013 – பால் வாக்கர் , அமெரிக்க
நடிகர் (பி. 1973)
2014 – ஜார்பம் காம்லின் , இந்திய
அரசியல்வாதி (பி. 1961 )
சிறப்பு நாள்
தியாகிகள் தினம் (ஐக்கிய அரபு
அமீரகம்)
விடுதலை நாள் ( பார்படோசு, 1966)
விடுதலை நாள் ( தெற்கு யேமன் , 1967)
புனித அந்திரேயா விழா - கத்தோலிக்கர்
மற்றும் கிழக்கு மரபுவழித்
திருச்சபையார்களால்
கொண்டாடப்படுகிறது.
புனித அந்திரேயா தினம் -
இசுக்காட்லாந்து நாட்டில் தேசிய
தினமாகவும், வங்கி விடுமுறை தினமாகவும்
ஊள்ளது.

நவம்பர் 30 ( November 30)

நவம்பர் 30 ( November 30)

கிரிகோரியன்
ஆண்டின் 334 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 335 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 31 நாட்கள்
உள்ளன.
நிகழ்வுகள்
1612 - பிரித்தானியக் கிழக்கிந்தியக்
கம்பனியின் படைகளுக்கும் போர்த்துக்கீசருக்கும்
இடையில் இந்தியக் கரையில் சுவாலி என்ற
இடத்தில் இடம்பெற்ற சமரில்
பிரித்தானியர் வென்றனர்.
1700 - சுவீடனின் பன்னிரண்டாம்
சார்ல்ஸ் தலைமையில் 8.500
இராணுவத்தினர் எஸ்தோனியாவில்
நார்வா என்ற இடத்தில் பெரும்
ரஷ்யப் படைகளை வென்றனர்.
1718 - நோர்வேயின் பிரெட்ரிக்ஸ்டன்
கோட்டை முற்றுகையின் போது சுவீடன் மன்னன்
பன்னிரண்டாம் சார்ல்ஸ் இறந்தான்.
1782 - அமெரிக்கப் புரட்சிப் போர்:
ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஐக்கிய
இராச்சியம் இரண்டுக்கும் இடையே ஆரம்ப
அமைதி உடன்பாடு பாரிசில்
கையெழுத்திடப்பட்டது.
1803 - ஸ்பானியர்கள் லூசியானாவை
பிரான்சுக்கு அதிகாரபூர்வமாகக்
கையளித்தனர். பிரான்ஸ் இப்பிரதேசத்தை 20
நாட்களின் பின்னர் ஐக்கிய
அமெரிக்காவுக்கு விற்றது.
1806 - நெப்போலியனின் படைகள்
போலந்து தலைநகர் வார்சாவைக்
கைப்பற்றினர்.
1853 - ரஷ்யப் பேரரசின் கடற்படை வட
துருக்கியில் உள்ள சினோப் என்ற இடத்தில்
ஓட்டோமான் பேரரசின் படைகளைத் தோற்கடித்தன.
1872 - உலகின் முதலாவது அனைத்துலக
காற்பந்துப் போட்டி கிளாஸ்கோவில்
ஸ்கொட்லாந்துக்கும்
இங்கிலாந்துக்கும் இடையில்
இடம்பெற்றது.
1908 - பென்சில்வேனியாவில்
மரியான்னா என்ற இடத்தில் சுரங்கம்
ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 154
பேர் கொல்லப்பட்டனர்.
1917 - முதலாம் உலகப் போர்:
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆர்.
ஐயாத்துரை என்ற லான்ஸ் கோப்ரல் போரில்
ஈடுபட்டு இறந்தார்.
1936 - லண்டனில் பளிங்கு அரண்மனை
தீயினால் சேதமடைந்தது.
1939 - சோவியத் படைகள் பின்லாந்தை
முற்றுகையிட்டு குண்டுகளை வீசீன.
1943 - இரண்டாம் உலகப் போர் :
டெஹ்ரானில் கூடிய அமெரிக்க
ஜனாதிபதி பிராங்கிளின்
ரூஸ்வெல்ட் , பிரித்தானியத் தலைமை
அமைச்சர் வின்ஸ்டன் சேர்ச்சில், ரஷ்ய அதிபர்
ஜோசப் ஸ்டாலின் ஆகியோர் ஜூன் 1944 இல்
ஐரோப்பாவைத் தாக்கும் தமது திட்டத்தை
ஆராய்ந்தனர்.
1962 - பர்மாவைச் சேர்ந்த யூ தாண்ட்
ஐக்கிய நாடுகள் சபையின் 3வது
பொதுச் செயலராகத்
தெரிவானார்.
1966 - ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து
பார்போடஸ் விடுதலை பெற்றது.
1967 - ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து
தெற்கு யேமன் விடுதலை பெற்றது.
1967 - சுல்பிகார் அலி பூட்டோ
பாகிஸ்தான் மக்கள் கட்சியை
ஆரம்பித்தார்.
1981 - பனிப்போர் : ஜெனீவாவில்
ஐக்கிய அமெரிக்கா மற்றும் சோவியத்
பிரதிநிதிகள் ஐரோப்பாவில்
நிலைகொண்டுள்ள நடுத்தர
ஏவுகணைகளைக் குறைக்க பேச்சுவார்த்தையை
ஆரம்பித்தனர்.
1995 - வளைகுடாப் போர் முடிவுக்கு வந்தது.
பிறப்புகள்
1667 – ஜோனதன் ஸ்விப்ட் , அயர்லாந்து
எழுத்தாளர் (இ. 1745 )
1825 – வில்லியம்-அடோல்ஃப் பூகுவேரோ,
பிரான்சிய ஓவியர் (இ. 1905 )
1835 – மார்க் டுவெய்ன் ,
அமெரிக்க எழுத்தாளர் (இ. 1910 )
1858 – ஜகதீஷ் சந்திர போஸ், இந்திய
இயற்பியலாளர் (இ. 1937 )
1869 – நில்சு குஸ்டாப் டேலன் , நோபல் பரிசு
பெற்ற சுவீடன் இயற்பியலாலர் (இ.
1937 )
1874 – வின்ஸ்டன் சர்ச்சில், ஐக்கிய
இராச்சியத்தின் பிரதமர் , நோபல் பரிசு
பெற்றவர் (இ. 1965 )
1943 – டெரன்சு மாலிக்,
அமெரிக்க இயக்குநர்
1948 – கே. ஆர். விஜயா இந்திய திரைப்பட
நடிகை
1950 – வாணி ஜெயராம் ,
இந்தியப் பாடகி
1965 – பென் ஸ்டில்லர் ,
அமெரிக்க நடிகர்
1982 – எலிஷா கத்பெர்ட் , கனடிய
நடிகை
1985 – கலே கியூகோ, அமெரிக்க நடிகை
1988 – பிலிப் ஹியூஸ், ஆத்திரேலியத்
துடுப்பாளர் (இ. 2014 )
1990 – மாக்னசு கார்ல்சன், நோர்வே
சதுரங்க வீரர்
இறப்புகள்
1900 – ஆஸ்கார் வைல்டு , ஐரிய
எழுத்தாளர் (பி. 1854 )
1930 – பொன்னம்பலம்
இராமநாதன், இலங்கைத் தமிழ்
அரசியல்வாதி (பி. 1851 )
1988 – எம். கே. றொக்சாமி ,
இலங்கை இசைக்கலைஞர், இசையமைப்பாளர் (பி.
1932 )
1990 – டி. ஆர். ராமச்சந்திரன் இந்தியத்
தமிழ்த் திரைப்பட நடிகர் (பி. 1917 )
2012 – ஐ. கே. குஜரால் , இந்தியாவின்
12வது பிரதமர் (பி. 1919 )
2013 – ரகுராம் , திரைப்பட நடன
இயக்குநர், நடிகர் (பி. 1948 )
2013 – பால் வாக்கர் , அமெரிக்க
நடிகர் (பி. 1973)
2014 – ஜார்பம் காம்லின் , இந்திய
அரசியல்வாதி (பி. 1961 )
சிறப்பு நாள்
தியாகிகள் தினம் (ஐக்கிய அரபு
அமீரகம்)
விடுதலை நாள் ( பார்படோசு, 1966)
விடுதலை நாள் ( தெற்கு யேமன் , 1967)
புனித அந்திரேயா விழா - கத்தோலிக்கர்
மற்றும் கிழக்கு மரபுவழித்
திருச்சபையார்களால்
கொண்டாடப்படுகிறது.
புனித அந்திரேயா தினம் -
இசுக்காட்லாந்து நாட்டில் தேசிய
தினமாகவும், வங்கி விடுமுறை தினமாகவும்
ஊள்ளது.

திங்கள், 28 நவம்பர், 2016

நவம்பர் 29 ( November 29)

நவம்பர் 29 ( November 29)

கிரிகோரியன் ஆண்டின் 333 ஆம்
நாளாகும். நெட்டாண்டுகளில் 334
ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு
மேலும் 32 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1781 - கூலிகளை ஏற்றிச்சென்ற
சொங் (Zong) என்ற கப்பல்
மாலுமிகள் காப்புறுதிக்காக
133 ஆபிரிக்கர்களை கொன்று
கடலுக்குள் எறிந்தனர்.
1830 - போலந்தில் ரஷ்யாவின்
ஆட்சிக்கெதிராக புரட்சி
வெடித்தது.
1855 - துருக்கியில் தாதியர்
பயிற்சிக்காக புளோரன்ஸ்
நைட்டிங்கேல் நிதியம்
நிறுவப்பட்டது.
1877 - தோமஸ் அல்வா எடிசன்
போனோகிராஃப் என்ற
ஒலிப்பதிவுக் கருவியைக்
முதற்தடவையாகக்
காட்சிப்படுத்தினார்.
1915 - கலிபோர்னியாவில்
சாண்டா கட்டலீனா தீவின் பல
முக்கிய கட்டடங்கள் தீயில் எரிந்தன.
1922 - ஹவார்ட் கார்ட்டர் பண்டைய
எகிப்தின் துட்டன்காமுன்
மன்னனின் கல்லறையை
பொதுமக்களின் பார்வைக்கு
திறந்து விட்டார்.
1929 - ஐக்கிய அமெரிக்காவின்
ரிச்சார்ட் பயேர்ட் தென் முனை
மேல் பறந்த முதல் மனிதரானார்.
1945 - யூகொஸ்லாவிய சமஷ்டி
மக்கள் குடியரசு அமைக்கப்பட்டது.
1947 - பாலஸ்தீனத்தைப்
பிரிப்பதென ஐநா பொதுச் சபை
முடிவெடுத்தது.
1950 - வட கொரியா மற்றும் சீனப்
படைகள் ஐநா படைகளை வட
கொரியாவிலிருந்து
வெளியேறும்படி செய்தனர்.
1961 - நாசாவின் மேர்க்குரி-
அட்லஸ் 5 விண்கலம் சிம்பன்சி
ஒன்றை ஏற்றிக்கொண்டு
விண்ணுக்கு அனுப்பப்பட்டது.
இது பூமியை இரு தடவைகள்
சுற்றிவந்து புவேர்ட்டோ
ரிக்கோவில் இறங்கியது).
1963 - 118 பேருடன் சென்ற
கனடாவின் விமானம்
மொன்ட்ரியாலில்
விபத்துக்குள்ளாகியது.
1982 - ஐநா பொது அவை
சோவியத் படைகளை
ஆப்கானிஸ்தானில் இருந்து
உடனடியாக விலகும்படி
சோவியத் ஒன்றியத்தைக் கேட்டது.
1987 - கொரிய விமானம் தாய் -
பர்மிய எல்லைக்கருகில்
வெடித்துச் சிதறியதில் 155 பேர்
கொல்லப்பட்டனர்.
2006 - அணுவாயுதங்களை
எடுத்துச் சென்று 700 கிமீ தூரம்
உள்ள இலக்குகளைத்
தாக்கக்கூடிய ஷாகீன் 1 என்ற
ஏவுகணை சோதனையை
பாகிஸ்தான் வெற்றிகரமாக
நடத்தியது.
பிறப்புகள்
1803 – கிறிஸ்டியன் டாப்ளர் ,
ஆத்திரியக் கணிதவியலாலர்,
இயற்பியலாளர் (இ. 1853 )
1835 – டோவாகர் சிக்சி , சீனப்
பேரரசி (இ. 1908 )
1908 – என். எஸ். கிருஷ்ணன் ,
தமிழ்த் திரைப்பட நகைச்சுவை
நடிகர் (இ. 1957 )
1913 – எஸ். வி. சகஸ்ரநாமம்,
நாடகக் கலைஞர், திரைப்பட நடிகர்
(இ. 1988 )
1932 – ஜாக் சிராக் , பிரான்சின்
22வது அரசுத்தலைவர்
1936 – ஆ. வேலுப்பிள்ளை ,
ஈழத்துத் தமிழறிஞர், பேராசிரியர்
(இ. 2015 )
1963 – லலித் மோடி , இந்தியத்
தொழிலதிபர்
1977 – யூனுஸ் கான் ,
பாக்கித்தானியத் துடுப்பாளர்
1982 – ரம்யா, இந்திய நடிகை,
அரசியல்வாதி
இறப்புகள்
1530 – தாமஸ் வோல்சி,
இங்கிலாந்தின் உயராட்சித்
தலைவர் (பி. 1470 )
1694 – மார்செல்லோ மால்பிகி,
இத்தாலிய மருத்துவர் (பி. 1628 )
1924 – ஜாக்கோமோ புச்சீனி,
இத்தாலிய இசையமைப்பாளர் (பி.
1858 )
1989 – மருதகாசி, திரைப்படப்
பாடலாசிரியர் (பி. 1920)
1993 – ஜெ. ர. தா. டாட்டா,
பிரான்சிய-இந்தியத் தொழிலதிபர்
(பி. 1904 )
2008 – ஜோர்ன் உட்சன் ,
தென்மார்க்கு கட்டிடக்கலைஞர்
(பி. 1918 )
2010 – சுப்பிரமணியம்
சிவநாயகம் , இலங்கை
ஊடகவியலாளர் (பி. 1930 )
2013 – பாலகுமாரன் மகாதேவா ,
இலங்கைத் தமிழ்க் கல்வியாளர் (பி.
1921 )
சிறப்பு நாள்
விடுதலை நாள் ( அல்பேனியா )

ஞாயிறு, 27 நவம்பர், 2016

நவம்பர் 28 ( November 28)

நவம்பர் 28 ( November 28)

கிரிகோரியன்
ஆண்டின் 332 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 333 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 33 நாட்கள்
உள்ளன.
நிகழ்வுகள்
1520 - தென்னமெரிக்கா
ஊடாகப் பயணித்த போர்த்துகேய
நாடுகாண்பயணி மகலன் பசிபிக்
பெருங்கடலை அடைந்தான். இவனே
அட்லாண்டிக் கடலில் இருந்து பசிபிக் கடலை
அடைந்த முதலாவது ஐரோப்பியர் ஆவான்.
1729 - மிசிசிப்பியில் நட்சே இந்தியர்கள்
குழந்தைகள், பெண்கள் உட்பட 239
பிரெஞ்சு இனத்தவரைக்
கொன்றார்கள்.
1821 - பனாமா ஸ்பெயினிடம்
இருந்து பிரிந்து பாரிய
கொலம்பியாவுடன் இணைந்தது.
1843 - ஹவாய் இராச்சியத்தை ஐக்கிய
இராச்சியம் , பிரான்ஸ் ஆகியன விடுதலை
அடைந்த தனி நாடாக அங்கீகரித்தன.
1893 - நியூசிலாந்தில் முதற்தடவையாக
பெண்கள் வாக்களித்தனர்.
1905 - ஐரிஷ் தேசியவாதி ஆர்தர் கிறிபித்
அயர்லாந்தின் விடுதலைக்காக சின்
ஃபெயின் என்ற அரசியல் கட்சியை
உருவாக்கினார்.
1912 - அல்பேனியா ஒட்டோமான்
பேரரசிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1918 - புக்கோவினா ருமேனிய
இராச்சியத்துடன் இணைய முடிவு
செய்ததூ.
1942 - மசாசுசெட்ஸ் மாநிலத்தில்
பொஸ்டன் நகரில் இரவுவிடுதி
ஒன்றில் இடம்பெற்ற தீயினால் 491
பேர் இறந்தார்கள்.
1943 - இரண்டாம் உலகப் போர் :
ஜெர்மனியையும் , ஜப்பானையும்
ஒடுக்குவது பற்றி, அமெரிக்க
ஜனாதிபதி பிராங்கிளின்
ரூஸ்வெல்ட் , பிரித்தானியத் தலைமை
அமைச்சர் வின்ஸ்டன் சேர்ச்சில், ரஷ்ய அதிபர்
ஜோசப் ஸ்டாலின் ஆகிய மூவரும்
டெஹ்ரானில் சந்தித்துப்
பேசினார்கள்.
1944 - இரண்டாம் உலகப் போர் :
அல்பேனியா அல்பேனியப்
பார்ட்டிசான்களினால்
விடுவிக்கப்பட்டது.
1958 - சாட், கொங்கோ குடியரசு ,
காபோன் ஆகியன பிரெஞ்சு ஆட்சியின்
கீழ் சுயாட்சி பெற்றன.
1960 - மவுரித்தேனியா பிரான்சிடம்
இருந்து விடுதலை அடைந்தது.
1964 - நாசா செவ்வாய்க் கோளை
நோக்கி மரைனர் 4 விண்கலத்தை ஏவியது.
1975 - கிழக்குத் திமோர் போர்த்துக்கல்லிடம்
இருந்து விடுதலையை அறிவித்தது.
1979 - நியூசிலாந்து விமானம்
எரெபஸ் மலையில் மோதியதில் அதில்
பயணம் செய்த அனைத்து 257 பேரும்
கொல்லப்பட்டனர்.
1987 - தென்னாபிரிக்காவின்
விமானம் இந்தியப் பெருங்கடலில்
வீழ்ந்ததில் அதில் பயணஞ் செய்த
அனைத்து 159 பேரும்
கொல்லப்பட்டனர்.
1989 - பனிப்போர் :
செக்கொசிலவாக்கியாவி
ன் தனியாதிக்க உரிமையை விட்டுத்தருவதாக
அந்நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்தது.
1990 - ஐக்கிய இராச்சிய தலைமை அமைச்சர்
மார்கரெட் தாட்சர் தனது பதவியை
விட்டு விலகினார்.
1990 - லீ குவான் யூ சிங்கப்பூர் தலைமை
அமைச்சர் பதவையை விட்டு விலகினார். கோ
சொக் டொங் புதிய தலைமை
அமைச்சரானார்.
1991 - தெற்கு ஒசேத்தியா
ஜோர்ஜியாவிடம் இருந்து விடுதலையை
அறிவித்தது.
1994 - ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய
நோர்வே மக்கள் எதிர்த்து வாக்களித்தனர்.
2006 - நாசாவின் நியூ ஹரைசன்ஸ்
தானியங்கி விண்கலம் புளூட்டோவின்
முதலாவது படத்தை அனுப்பியது.
பிறப்புகள்
1757 – வில்லியம் பிளேக் , ஆங்கிலேயக்
கவிஞர், ஓவியர் (இ. 1827)
1820 – பிரெட்ரிக் எங்கெல்சு,
செருமானிய-ஆங்கிலேய மார்க்சிய
மெய்யியலாளர் (இ. 1895)
1961 – அல்போன்சா குயூரான் ,
மெக்சிக்கோ இயக்குநர்
1962 – யோன் சுருவாட் , அமெரிக்க
நடிகர்
1976 – ரயன் குவான்டென்,
ஆத்திரேலிய நடிகர்
1984 – மேரி எலிசபெத் வின்ச்டீத்,
அமெரிக்க நடிகை
இறப்புகள்
1694 – மட்சுவோ பாஷோ , சப்பானியக்
கவிஞர் (பி. 1644 )
1859 – வாசிங்டன் இர்விங்,
அமெரிக்க எழுத்தாளர் (பி. 1783)
1890 – ஜோதிராவ் புலே, இந்திய
மெய்யியலாளர்,
செயற்பாட்டாளர் (பி. 1827 )
1893 – அலெக்சாண்டர்
கன்னிங்காம் , பிரித்தானியத்
தொல்லியலாளர் (பி. 1814 )
1939 – ஜேம்ஸ் நெய்ஸ்மித் , கூடைப்பந்து
விளையாட்டைக் கண்டுபிடித்த கனடியர் (பி.
1861 )
1954 – என்ரிக்கோ பெர்மி , நோபல் பரிசு
பெற்ற இத்தாலிய-அமெரிக்க
இயற்பியலாளர் (பி. 1901 )
1968 – எனிட் பிளைட்டன், ஆங்கிலேய
எழுத்தாளர் (பி. 1897 )
சிறப்பு நாள்
விடுதலை நாள் ( மூரித்தானியா, 1960)
விடுதலை நாள் ( பனாமா, 1821)
குடியரசு நாள் ( புருண்டி )
குடியரசு நாள் ( சாட்)

நவம்பர் 28 ( November 28)

நவம்பர் 28 ( November 28)

கிரிகோரியன்
ஆண்டின் 332 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 333 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 33 நாட்கள்
உள்ளன.
நிகழ்வுகள்
1520 - தென்னமெரிக்கா
ஊடாகப் பயணித்த போர்த்துகேய
நாடுகாண்பயணி மகலன் பசிபிக்
பெருங்கடலை அடைந்தான். இவனே
அட்லாண்டிக் கடலில் இருந்து பசிபிக் கடலை
அடைந்த முதலாவது ஐரோப்பியர் ஆவான்.
1729 - மிசிசிப்பியில் நட்சே இந்தியர்கள்
குழந்தைகள், பெண்கள் உட்பட 239
பிரெஞ்சு இனத்தவரைக்
கொன்றார்கள்.
1821 - பனாமா ஸ்பெயினிடம்
இருந்து பிரிந்து பாரிய
கொலம்பியாவுடன் இணைந்தது.
1843 - ஹவாய் இராச்சியத்தை ஐக்கிய
இராச்சியம் , பிரான்ஸ் ஆகியன விடுதலை
அடைந்த தனி நாடாக அங்கீகரித்தன.
1893 - நியூசிலாந்தில் முதற்தடவையாக
பெண்கள் வாக்களித்தனர்.
1905 - ஐரிஷ் தேசியவாதி ஆர்தர் கிறிபித்
அயர்லாந்தின் விடுதலைக்காக சின்
ஃபெயின் என்ற அரசியல் கட்சியை
உருவாக்கினார்.
1912 - அல்பேனியா ஒட்டோமான்
பேரரசிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1918 - புக்கோவினா ருமேனிய
இராச்சியத்துடன் இணைய முடிவு
செய்ததூ.
1942 - மசாசுசெட்ஸ் மாநிலத்தில்
பொஸ்டன் நகரில் இரவுவிடுதி
ஒன்றில் இடம்பெற்ற தீயினால் 491
பேர் இறந்தார்கள்.
1943 - இரண்டாம் உலகப் போர் :
ஜெர்மனியையும் , ஜப்பானையும்
ஒடுக்குவது பற்றி, அமெரிக்க
ஜனாதிபதி பிராங்கிளின்
ரூஸ்வெல்ட் , பிரித்தானியத் தலைமை
அமைச்சர் வின்ஸ்டன் சேர்ச்சில், ரஷ்ய அதிபர்
ஜோசப் ஸ்டாலின் ஆகிய மூவரும்
டெஹ்ரானில் சந்தித்துப்
பேசினார்கள்.
1944 - இரண்டாம் உலகப் போர் :
அல்பேனியா அல்பேனியப்
பார்ட்டிசான்களினால்
விடுவிக்கப்பட்டது.
1958 - சாட், கொங்கோ குடியரசு ,
காபோன் ஆகியன பிரெஞ்சு ஆட்சியின்
கீழ் சுயாட்சி பெற்றன.
1960 - மவுரித்தேனியா பிரான்சிடம்
இருந்து விடுதலை அடைந்தது.
1964 - நாசா செவ்வாய்க் கோளை
நோக்கி மரைனர் 4 விண்கலத்தை ஏவியது.
1975 - கிழக்குத் திமோர் போர்த்துக்கல்லிடம்
இருந்து விடுதலையை அறிவித்தது.
1979 - நியூசிலாந்து விமானம்
எரெபஸ் மலையில் மோதியதில் அதில்
பயணம் செய்த அனைத்து 257 பேரும்
கொல்லப்பட்டனர்.
1987 - தென்னாபிரிக்காவின்
விமானம் இந்தியப் பெருங்கடலில்
வீழ்ந்ததில் அதில் பயணஞ் செய்த
அனைத்து 159 பேரும்
கொல்லப்பட்டனர்.
1989 - பனிப்போர் :
செக்கொசிலவாக்கியாவி
ன் தனியாதிக்க உரிமையை விட்டுத்தருவதாக
அந்நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்தது.
1990 - ஐக்கிய இராச்சிய தலைமை அமைச்சர்
மார்கரெட் தாட்சர் தனது பதவியை
விட்டு விலகினார்.
1990 - லீ குவான் யூ சிங்கப்பூர் தலைமை
அமைச்சர் பதவையை விட்டு விலகினார். கோ
சொக் டொங் புதிய தலைமை
அமைச்சரானார்.
1991 - தெற்கு ஒசேத்தியா
ஜோர்ஜியாவிடம் இருந்து விடுதலையை
அறிவித்தது.
1994 - ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய
நோர்வே மக்கள் எதிர்த்து வாக்களித்தனர்.
2006 - நாசாவின் நியூ ஹரைசன்ஸ்
தானியங்கி விண்கலம் புளூட்டோவின்
முதலாவது படத்தை அனுப்பியது.
பிறப்புகள்
1757 – வில்லியம் பிளேக் , ஆங்கிலேயக்
கவிஞர், ஓவியர் (இ. 1827)
1820 – பிரெட்ரிக் எங்கெல்சு,
செருமானிய-ஆங்கிலேய மார்க்சிய
மெய்யியலாளர் (இ. 1895)
1961 – அல்போன்சா குயூரான் ,
மெக்சிக்கோ இயக்குநர்
1962 – யோன் சுருவாட் , அமெரிக்க
நடிகர்
1976 – ரயன் குவான்டென்,
ஆத்திரேலிய நடிகர்
1984 – மேரி எலிசபெத் வின்ச்டீத்,
அமெரிக்க நடிகை
இறப்புகள்
1694 – மட்சுவோ பாஷோ , சப்பானியக்
கவிஞர் (பி. 1644 )
1859 – வாசிங்டன் இர்விங்,
அமெரிக்க எழுத்தாளர் (பி. 1783)
1890 – ஜோதிராவ் புலே, இந்திய
மெய்யியலாளர்,
செயற்பாட்டாளர் (பி. 1827 )
1893 – அலெக்சாண்டர்
கன்னிங்காம் , பிரித்தானியத்
தொல்லியலாளர் (பி. 1814 )
1939 – ஜேம்ஸ் நெய்ஸ்மித் , கூடைப்பந்து
விளையாட்டைக் கண்டுபிடித்த கனடியர் (பி.
1861 )
1954 – என்ரிக்கோ பெர்மி , நோபல் பரிசு
பெற்ற இத்தாலிய-அமெரிக்க
இயற்பியலாளர் (பி. 1901 )
1968 – எனிட் பிளைட்டன், ஆங்கிலேய
எழுத்தாளர் (பி. 1897 )
சிறப்பு நாள்
விடுதலை நாள் ( மூரித்தானியா, 1960)
விடுதலை நாள் ( பனாமா, 1821)
குடியரசு நாள் ( புருண்டி )
குடியரசு நாள் ( சாட்)