புதன், 2 நவம்பர், 2016

நவம்பர் 3 ( November 3)

நவம்பர் 3 ( November 3)

கிரிகோரியன்
ஆண்டின் 307 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 308 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 58 நாட்கள்
உள்ளன.
நிகழ்வுகள்
644 - இரண்டாவது முஸ்லிம் கலீபா
உமறு இப்னு அல்-கத்தாப் மதினாவில்
பாரசீக அடிமையினால்
கொல்லப்பட்டார்.
1493 - கரிபியன் கடலில்
டொமினிக்காத் தீவை முதன்
முதலில் கொலம்பஸ் கண்டார்.
1655 - பிரான்சும் இங்கிலாந்தும்
இராணுவப் பொருளாதார
ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.
1793 - பிரான்சின் நாடகாசிரியரும் ,
செய்தியாளரும்,
பெண்ணியவாதியுமான
ஒலிம்பியா டி கஸ் தலை துண்டிக்கப்பட்டு
மரணதண்டனைக்குள்ளாக்கப்பட்டார்.
1812 - நெப்போலியனின்
இராணுவத்தினர் வியாஸ்மா என்ற
இடத்தில் இடம்பெற்ற போரில் தோற்றனர்.
1838 - பாம்பே டைம்ஸ் முதன் முதலில்
வெளியிடப்பட்டது. இது பின்னர் 1861
இல் டைம்ஸ் ஆஃப் இந்தியா எனப்
பெயரிடப்பட்டது.
1903 - ஐக்கிய அமெரிக்காவின்
தூண்டுதலை அடுத்து பனாமா
கொலம்பியாவிடம் இருந்து தனது
விடுதலையை அறிவித்தது.
1905 - ரஷ்யாவின் இரண்டாம்
நிக்கலாஸ் அரசியல் கைதிகளுக்கு மன்னிப்பு
வழங்க உத்தரவிட்டான்.
1913 - ஐக்கிய அமெரிக்கா
வருமான வரியை அறிமுகப்படுத்தியது.
1918 - போலந்து ரஷ்யாவிடம் இருந்து
விடுதலையை அறிவித்தது.
1943 - இரண்டாம் உலகப் போர் :
ஜேர்மனியின்
வில்ஹெம்ஷாஃபென்
துறைமுகத்தை அமெரிக்காவின் சுமார்
500 போர் விமானங்கள் தாக்கி அழித்தன.
1957 - உலகில் முதன் முதலில் மிருகம்
ஒன்றை ( லைக்கா என்னும் நாயை) சோவியத்
ஒன்றியம் ஸ்புட்னிக் 2 விண்கப்பலில்
விண்வெளிக்கு அனுப்பியது.
1963 - தி.மு.க. செயற்குழு திராவிட
நாடு, தனிநாடு கோஷத்தைக் கைவிடுவதாக
அறிவித்தது.
1963 - ஜெய்ப்பூரில் நடைபெற்ற
இந்திய தேசிய காங்கிரசின் மாநாட்டில்
காமராசர் அதன் தலைவராகத்
தெரிவு செய்யப்பட்டார்.
1964 - வாஷிங்டன் டீசி மக்கள் முதன்
முறையாக அமெரிக்க அதிபர் தேர்தலில்
வாக்களிக்க அனுமதிக்கப்பட்டார்கள்.
1970 - சல்வடோர் அலெண்டே சிலியின்
அதிபரானார்.
1973 - நாசா மரைனர் 10 என்ற
விண்கப்பலை புதன் நோக்கி அனுப்பியது. 1974,
மார்ச் 29 இல் அக்கோளை அடைந்த
முதலாவது விண்கலம் இதுவாகும்.
1978 - டொமினிக்கா ஐக்கிய
இராச்சியத்திடம் இருந்து விடுதலை
பெற்றது.
1979 - கம்யூனிச பாட்டாளிகள்
கட்சியில் 5 உறுப்பினர்கள் வெள்ளையின
மேலாதிக்கவாதிகளால் சுட்டுக்
கொல்லப்பட்டனர்.
1982 - ஆப்கானிஸ்தானில் சலாங்
சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 2,000 பேர்
வரையில் கொல்லப்பட்டனர்.
1986 - மைக்குரோனீசியா கூட்டு நாடுகள்
ஐக்கிய அமெரிக்காவிடம் இருந்து
விடுதலை பெற்றது.
1988 - இலங்கையின் தமிழ்க் குழுவான
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினரால்
மாலை தீவுகள் அரசை அகற்ற எடுக்கப்பட்ட
முயற்சி இந்திய இராணுவத்தினரால் 24
மணி நேரத்தில் முறியடிக்கப்பட்டது.
பிறப்புகள்
1618 – ஔரங்கசீப் , இந்தியாவின்
மொகாலய சக்கரவர்த்தி, (இ.
1707 ).
1911 – ஏ. கே. செட்டியார் , தமிழில்
பயண இலக்கியத்தின் முன்னோடி (இ. 1983 )
1928 – ஒசாமு தெசூகா ,
சப்பானியத் திரைப்படத் தயாரிப்பாளர்
(இ. 1989 )
1930 – பெடரிக்கு இசுட்டால், டச்சு
மெய்யியலாளர் (இ. 2012)
1932 – அன்னை பூபதி , மட்டக்களப்பில்
இந்திய அமைதிப்படைக்கு எதிராக சாகும்வரை
உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்தவர் (இ.
1988 )
1933 – அமர்த்தியா சென் , நோபல்
பரிசு பெற்ற இந்தியப்
பொருளியலாளர்
இறப்புகள்
644 – உமறு இப்னு அல்-கத்தாப் , சவுதி
அரேபிய கலீபா (பி. 584 )
1584 – சார்லஸ்
பொரோமெயோ, இத்தாலியக்
கர்தினால், புனிதர் (பி. 1538 )
1639 – மார்டின் தெ போரஸ் ,
பெருவின் புனிதர் (பி. 1579)
1954 – ஆன்றி மட்டீசு, பிரான்சிய
ஓவியர், சிற்பி (பி. 1869 )
1989 – டிமோதி இம்பவன்றா , பிஜி
அரசியல்வாதி (பி. 1934 )
1998 – பாப் கார்னே , அமெரிக்க
எழுத்தாளர் (பி. 1915 )
2006 – ஈ. வி. சரோஜா , தமிழ்த் திரைப்பட
நடிகை, (பி. 1935).
சிறப்பு நாள்
கலாச்சார நாள் ( சப்பான்)
விடுதலை நாள் ( பனாமா, 1903)
விடுதலை நாள் ( டொமினிக்கா,
1978)
விடுதலை நாள் ( மைக்குரோனீசியக் கூட்டு
நாடுகள் , 1986)
வெற்றி நாள் ( மாலைத்தீவுகள் )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக