நவம்பர் 18 ( November 18)
கிரிகோரியன்
ஆண்டின் 322 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 323 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 43 நாட்கள்
உள்ளன.
நிகழ்வுகள்
1421 - நெதர்லாந்தில் கடல்
தடுப்புச் சுவர் ஒன்று இடிந்து வெள்ளம்
பரவியதில் 10,000 பேர் வரையில்
உயிரிழந்தனர்,
1477 - இங்கிலாந்தில்
அச்சியந்திரசாலையில் அச்சிடப்பட்ட
முதலாவது நூலான "Dictes or Sayengis of
the Philosophres" வில்லியம் கக்ஸ்டன்
என்பவரால் வெளியிடப்படட்து.
1493 - கொலம்பஸ் புவேர்ட்டோ
ரிக்கோ என இன்றழைக்கப்படும் நாட்டை
முதன்முறையாகக் கண்ணுற்றார்.
1626 - புனித பீட்டர் பசிலிக்கா
தேவாலயம் ரோம் நகரில் திறந்து
வைக்கப்பட்டது.
1803 - எயிட்டி புரட்சியின் கடைசிப்
பெரும் போர் இடம்பெற்றது. இது
எயிட்டி குடியரசு என்ற மேற்கு அரைக்கோளத்தின்
முதலாவது கறுப்பினக் குடியரசு
அமைக்கப்பட வழிவகுத்தது.
1863 - டென்மார்க்கின் ஒன்பதாம்
கிறிஸ்டியன் ஷ்லெஸ்விக் நகரம்
டென்மார்க்குக்குச் சொந்தம்
என அறிவிக்கும் சட்டமூலத்துக்கு
ஒப்பமிட்டான். இது 1864 இல் ஜேர்மன் -
டென்மார்க் போர் ஏற்பட வழிவகுத்தது.
1883 கனடாவும் ஐக்கிய
அமெரிக்காவும் ஒரே நேர எல்லைகளை
வகுத்துக் கொண்டன.
1903 - பனாமா கால்வாய்க்கு
தனிப்பட்ட உரிமையை ஐக்கிய
அமெரிக்காவுக்கு வழங்கும்
உடன்பாடு பனாமாவுக்கும்
அமெரிக்காவுக்கும் இடையில்
கையெழுத்திடப்பட்டது.
1909 - நிக்கராகுவாவில் இரண்டு
அமெரிக்கர்கள் உட்பட 500
புரட்சியாளர்கள் அரசுப்படையினால்
கொல்லப்பட்டதை அடுத்து ஐக்கிய
அமெரிக்கா இரண்டு போர்க்கப்பல்களை
அந்நாட்டுக்கு அனுப்பியது.
1918 - லாத்வியா ரஷ்யாவிடம்
இருந்து விடுதலையை அறிவித்தது.
1926 - ஜோர்ஜ் பேர்னாட் ஷா தனக்கு
வழங்கப்பட்ட நோபல் பரிசுப் பணத்தை ஏற்க
மறுத்தார்.
1929 - அத்திலாந்திக் பெருங்கடலில்
நியூஃபின்லாந்துக் கரையில்
இடம்பெற்ற 7.2 ரிக்டர் நிலநடுக்கம்
மற்றும் ஆழிப்பேரலை காரணமாக பலத்த
சேத எற்பட்டது. 28 பேர்
கொல்லப்பட்டனர்.
1943 - இரண்டாம் உலகப் போர் :
பிரித்தானியப் படைகள் பேர்லின் நகரில்
குண்டுகளை வீசியதில் 131 பேர்
கொல்லப்பட்டனர். இச்சமரில் 9
பிரித்தானிய வான்கலங்கள்
அழிக்கப்பட்டன.
1943 - உக்ரேனில் லூவிவ் என்ற இடத்தில்
சிறை வைக்கப்பட்டிருந்த 6,000 யூதர்கள் நாசிப்
படைகளினால் கொல்லப்பட்டனர்.
1947 - நியூசிலாந்தில் கிறைஸ்ட்சேர்ச் என்ற
இடத்தில் வர்த்தகத் தொகுதி
ஒன்றில் இடம்பெற்ற தீயில் 41 பேர்
கொல்லப்பட்டனர்.
1978 - கயானாவில் ஜிம் ஜோன்ஸ்
என்பவரின் மக்கள் கோயிலில்
இடம்பெற்ற கொலை மற்றும்
தற்கொலை நிகழ்வுகளில் 270
குழந்தைகள் உட்பட 918 பேர் இறந்தனர்.
1987 - லண்டனில் கிங் க்ரொஸ்
சுரங்கத் தொடருந்து நிலையத்தில்
இடம்பெற்ற தீயில் 31 பேர்
கொல்லப்பட்டனர்.
1989 - கோபெ செயற்கைமதி
விண்வெளிக்கு ஏவப்பட்டது.
1991 - தமிழீழ காவல்துறையின்
முதலாவது அணி பயிற்சி முடிந்து
வெளியேறியது.
2002 - சென்னை புறநகர் பேருந்து
நிலையம் கோயம்பேட்டில் திறக்கப்பட்டது.
2006 - ஈழப்போர் : மன்னார்க்
கடற்பரப்பில் இடம்பெற்ற மோதலில்
இலங்கைக் கடற்படையினர் 10 பேர்
கொல்லப்பட்டு 3 விடுதலைப் புலிகள்
காயமடைந்தனர்.
பிறப்புகள்
1787 – லூயிசு டாகுவேரே , பிரான்சிய
இயற்பியலாளர், படப்பிடிப்பாளர் (இ.
1851 )
1836 – டபிள்யூ. எஸ். கில்பர்ட் ,
ஆங்கிலேயக் கவிஞர் (இ. 1911)
1882 – ஜாக் மாரித்தேன் , பிரான்சிய
மெய்யியலாளர் (இ. 1973)
1888 – பிரான்சஸ் மரியன் ,
அமெரிக்க எழுத்தாளர்,
ஊடகவியலாளர் (இ. 1973 )
1901 – வி. சாந்தாராம் , இந்திய
நடிகர், இயக்குநர் (இ. 1984)
1923 – அலன் ஷெப்பர்ட்,
அமெரிக்க விண்வெளி வீரர் (இ.
1998 )
1929 – பி. எஸ். சரோஜா, தமிழ்த் திரைப்பட
நடிகை
1939 – மார்கரெட் அட்வுட் , கனடிய
எழுத்தாளர், கவிஞர்
1945 – மகிந்த ராசபக்ச , இலங்கையின்
6வது அரசுத்தலைவர்
1956 – ஜிம் விரிச் , அமெரிக்கக்
கணினியாளர் (இ. 2014 )
1959 – ஜான் ஓ'கீஃப் , நோபல் பரிசு
பெற்ற அமெரிக்க-பிரித்தானிய
நரம்பணுவியல் அறிஞர்
1968 – ஓவன் வில்சன், அமெரிக்க
நடிகர்
1992 – நேத்தன் கிரெஸ்,
அமெரிக்க நடிகர், இயக்குநர்
இறப்புகள்
1887 – குஸ்டாவ் பெச்னர் ,
செருமானியக் கவிஞர்,
மெய்யியலாளர் (பி. 1801 )
1922 – மார்செல் புரூஸ்ட்,
பிரான்சிய எழுத்தாளர் (பி. 1871 )
1936 – வ. உ. சிதம்பரம்பிள்ளை , இந்திய
விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1872 )
1952 – போல் எல்யூவார் , பிரான்சியக்
கவிஞர் (பி. 1895 )
1962 – நீல்சு போர், நோபல் பரிசு பெற்ற
தென்மார்க்கு இயற்பியலாளர் (பி.
1885 )
2013 – செம்பனார்கோயில் எஸ்.
ஆர். டி. வைத்தியநாதன் , தமிழக
நாதசுவரக் கலைஞர் (பி. 1929)
2014 – சி. ருத்ரைய்யா , இந்திய இயக்குநர்,
தயாரிப்பாளர் (பி. 1947 )
2015 – கா. மீனாட்சிசுந்தரம் ,
தமிழறிஞர் (பி. 1925 )
சிறப்பு நாள்
விடுதலை நாள் ( லாத்வியா, 1918)
விடுதலை நாள் ( மொரோக்கோ, 1956)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக