திங்கள், 14 நவம்பர், 2016

நவம்பர் 15 ( November 15)

நவம்பர் 15 ( November 15)

கிரிகோரியன்
ஆண்டின் 319 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 320 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 46 நாட்கள்
உள்ளன.
நிகழ்வுகள்
1505 - போர்த்துக்கேய மாலுமியும்
நாடுகாண் பயணியுமான லோரன்ஸ் டி
அல்மெய்டா, கொழும்பை
வந்தடைந்து ஐரோப்பியக் குடியேற்றத்தை
ஆரம்பித்தார்.
1864 - அமெரிக்க உள்நாட்டுப் போர் :
கூட்டுப்படைத் தளபதி வில்லியம் ஷேர்மன்
அட்லாண்டா நகரைத் தீக்கிரையாக்கி
ஜோர்ஜியாவின் சவான்னா துறைமுகம்
நோக்கி நகர்ந்தார்.
1889 - பிரேசில் குடியரசாகியது.
இரண்டாம் பெதரோ ஆட்சியிழந்தான்.
1926 - என்பிசி வானொலி 24
நிலையங்களுதன் தனது வானொலி
சேவையைத் தொடங்கியது.
1941 - நாசி ஜெர்மனியில் சில
உயர் அதிகாரிகளைத் தவிர்த்து அனைத்து
ஓரினச்சேர்க்கையாளர்களையும்
வதைமுகாம்களுக்கு அனுப்ப
உத்தரவிடப்பட்டது.
1942 - இரண்டாம் உலகப் போர் :
சொலமன் தீவுகளில்
குவாடல்கனல் என்ற இடத்தில்
ஜப்பானியப் கடற்படையுடன்
இடம்பெற்ற மோதல்களில் கூட்டுப் படைகள்
வெற்றி பெற்றன.
1943 - நாசி ஜெர்மனியில் அனைத்து
ஜிப்சிகளையும் யூதர்களுக்கு இணையாக
வதமுகாம்களுக்கு அனுப்ப
உத்தரவிடப்பட்டது.
1948 - இலங்கையில் மலையகத் தமிழரின்
வாக்குரிமை பறிக்கப்பட்டது.
1949 - நாதுராம் கோட்சே , மற்றும்
நாராயண் ஆப்டே இருவரும் மகாத்மா
காந்தியைக் கொலை
செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு
தூக்கிலிடப்பட்டனர்.
1966 - ஜெமினி 12 விண்கலம்
அட்லாண்டிக் கடலில் பாதுகாப்பாக
இறங்கியது.
1969 - வியட்நாம் போர்: வாசிங்டன்
டிசியில் 250,000-500,000 பேர்
போருக்கெதிராக ஆர்ப்பாட்ட
ஊர்வலத்தில் பங்குபற்றினர்.
1970 - சோவியத்தின் லூனா தானூர்தி
சந்திரனில் தரையிறங்கியது.
1971 - இண்டெல் நிறுவனம் உலகின்
வர்த்தகரீதியிலான முதலாவது 4004
என்ற single-chip microprocessor ஐ
வெளியிட்டது.
1978 - டிசி-8 ரக தனியார் பயணிகள்
விமானம் கொழும்புக்கு அருகில்
விபத்துக்குள்ளாகியதில் 183 பேர்
கொல்லப்பட்டனர்.
1983 - வடக்கு சைப்பிரஸ் துருக்கியக் குடியரசு
நிறுவப்பட்டது. துருக்கி மட்டுமே இதனை
அங்கீகரித்தது.
1988 - சோவியத் ஒன்றியத்தின் ஆளற்ற
பூரான் விண்ணோடம் தனது முதலாவது
கடைசியுமான பயணத்தை ஆரம்பித்தது.
1988 - பாலஸ்தீன நாடு பாலஸ்தீன
தேசிய கவுன்சிலினால் அறிவிக்கப்பட்டது.
1990 - அட்லாண்டிஸ் விண்ணோடம்
STS-38 கப்பலை விண்ணுக்குக்
கொண்டு சென்றது.
2002 - ஹூ சிங்தாவ் சீனக் கம்யூனிஸ்ட்
கட்சியின் பொதுச்
செயலாளர் ஆனார்.
2000 - இந்தியாவில் ஜார்க்கண்ட்
தனிமாநிலமாக உருவாக்கப்பட்டது.
2007 - வங்க தேசத்தில் கிளம்பிய
பெரும் சூறாவளியினால் 5,000
பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்
1738 – வில்லியம் எர்செல் ,
செருமானிய-ஆங்கிலேய
வானியலாளர் (இ. 1822 )
1877 – அரிகேசநல்லூர் முத்தையா
பாகவதர் , கருநாடக இசைக் கலைஞர் (இ.
1945 )
1887 – ஜோர்ஜியா ஓ'கீஃப் ,
அமெரிக்க ஓவியர் (இ. 1986 )
1891 – இர்வின் ரோமெல் ,
செருமானிய இராணுவ அதிகாரி
(இ. 1944 )
1901 – பு. இரா. புருடோத்தமர், தமிழ்,
வைணவ அறிஞர் (இ. 1976 )
1914 – வி. ஆர். கிருஷ்ணய்யர் , இந்திய
உச்சநீதிமன்ற நீதிபதி (இ. 2014 )
1923 – ராதா பர்னியர் , சென்னை
பிரம்மஞானசபை தலைவி (இ. 2013 )
1933 – ஏ. எல். அப்துல் மஜீத் ,
கிழக்கிலங்கை அரசியல்வாதி (இ. 1987 )
1947 – மால்கம் ரஞ்சித், இலங்கை
கத்தோலிக்கக் கருதினால்
1986 – சானியா மிர்சா, இந்திய
டென்னிசு வீராங்கனை
1991 – சைலீன் வூட்லி , அமெரிக்க நடிகை
இறப்புகள்
1280 – பெரிய ஆல்பர்ட் ,
செருமானிய இறையியலாளர்,
மெய்யியலாலர் (பி. 1193)
1630 – யோகான்னசு கெப்லர்,
செருமானிய வானியலாளர் (பி.
1571 )
1908 – டோவாகர் சிக்சி , சீனப் பேரரசி (பி.
1835 )
1917 – எமில் டேர்க்கேம் , பிரான்சிய
மெய்யியலாளர் (பி. 1858 )
1937 – ஜெய்சங்கர் பிரசாத் ,
இந்திய எழுத்தாளர் (பி. 1889
1949 – நாராயண் ஆப்தே, மகாத்மா
காந்தியை சுட்டுக்கொன்ற
கொலையாளி (பி. 1911)
1949 – நாத்தூராம் கோட்சே , மகாத்மா
காந்தியை சுட்டுக்கொன்ற
கொலையாளி (பி. 1910)
1959 – சார்ல்ஸ் தாம்சன் ரீசு வில்சன்,
நோபல் பரிசு பெற்ற
இசுக்கொட்டிய இயற்பியலாளர்
(பி. 1869 )
1982 – வினோபா பாவே , இந்திய
காந்தியவாதி (பி. 1895 )
சிறப்பு நாள்
விடுதலை நாள் ( பாலத்தீனம்)
மர நாள் ( இலங்கை)
குடியரசு நாள் ( பிரேசில் )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக