நவம்பர் 16 ( November 16)
கிரிகோரியன் ஆண்டின் 320 ஆம்
நாளாகும். நெட்டாண்டுகளில் 321
ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு
மேலும் 45 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1384 - பெண்ணாக இருந்தாலும்
பத்து வயது "ஜாட்வீகா" என்பவள்
போலந்தின் மன்னனாக
முடிசூடினாள்.
1532 - ஸ்பானியத் தளபதி
பிரான்சிஸ்கோ பிசாரோ இன்கா
பேரரசின் மன்னன்
அட்டஹுவால்பாவைத்
தோற்கடித்து சிறைப்பிடித்தான்.
1632 - சுவீடனின் குஸ்டாவிஸ்
அடோல்பஸ் போரில்
கொல்லப்பட்டான்.
1846 - இலங்கையில் விதவைகள்
மற்றும் அனாதைகள் ஓய்வூதியத்
திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
1849 - அரசுக்கெதிராகப் புரட்சி
செய்ததாகக் குற்றம் சாட்டி ரஷ்ய
எழுத்தாளரான பியோதர்
தஸ்தயெவ்ஸ்கிக்கு மரண
தண்டனை விதிக்கப்பட்டது.
ஆனாலும் தண்டனை பின்னர்
கடைசி நேரத்தில்
நிறுத்தப்பட்டது.
1885 - கனடாவின் மேட்டிஸ்
பழங்குடித் தலைவர் லூயிஸ்
ரியெல் தூக்கிலிடப்பட்டார்.
1896 - முதற்தடவையாக
மின்சாரம் மின்னாக்கி
ஒன்றிலிருந்து நகருக்கு
அனுப்பப்பட்டது. இது நடந்தது
நியூ யோர்க் நகரில்.
1904 - ஜோன் பிளெமிங்
வெற்றிடக் குழாயைக்
கண்டுபிடித்தார்.
1907 - ஒக்லகோமா ஐக்கிய
அமெரிக்காவின் 46வது
மாநிலமாக இணைந்தது.
1920 - ஆஸ்திரேலியாவின்
தேசிய விமான சேவை
குவாண்டாஸ் ஆரம்பிக்கப்பட்டது.
1933 - ஐக்கிய அமெரிக்காவும்
சோவியத் ஒன்றியமும் தூதரக
உறவை ஆரம்பித்தன.
1940 - இரண்டாம் உலகப் போர் :
பிரித்தானியாவின் விமானப்
படைகள் ஜெர்மனியின்
ஹாம்பேர்க் நகரில் குண்டுகளை
வீசின.
1944 - இரண்டாம் உலகப் போர் :
ஜெர்மனியின் டியூரென் நகரம்
கூட்டுப் படைகளின் குண்டுத்
தாக்குதலில் முற்றாக அழிந்தது.
1945 - யுனெஸ்கோ நிறுவனம்
ஆரம்பிக்கப்பட்டது.
1945 - பனிப்போர் : ஐக்கிய
அமெரிக்காவின் இராணுவம்
ஜெர்மனியின் அறிவியலாளர்கள்
88 பேரை தனது வானியல்
தொழில்நுட்பத்தில்
உதவுவதற்காக இரகசியமாக
நாட்டுக்குள் அனுமதித்தது.
1965 - சோவியத்தின் வெனேரா 3
விண்கப்பல் வெள்ளி கோளுக்கு
செலுத்தப்பட்டது. வேறொரு
கோளின் தரையை அடைந்த
முதலாவது விண்கப்பல்
இதுவாகும்.
1973 - நாசா மூன்று
விண்வெளி வீரர்களுடன்
ஸ்கைலாப் 4 84-நாள் திட்டத்தில்
விண்ணுக்கு அனுப்பியது.
1988 - சுமார் 10 ஆண்டுகளுக்குப்
பின்னர் பாகிஸ்தானில்
இடம்பெற்ற தேர்தல்களில் பெனசீர்
பூட்டோ பிரதமராகத்
தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2002 - சார்ஸ் நோய் முதன்
முதலில் சீனாவின் குவாங்டோங்
என்ற இடத்தில் பதியப்பட்டது.
பிறப்புகள்
1717 – ழான் லி ராண்ட்
டெ'ஆலம்பர்ட் , பிரான்சியக்
கணிதவியலாளர், இயற்பியலாளர்
(இ. 1793 )
1922 – ஜோசே சரமாகூ, நோபல்
பரிசு பெற்ற போர்த்துக்கேய-
எசுப்பானிய எழுத்தாளர் (இ. 2010 )
1930 – சின்னுவ அச்செபே,
நைஜீரிய எழுத்தாளர் (இ. 2013 )
1938 – ரோபேர்ட் நோசிக் ,
அமெரிக்க மெய்யியலாளர்,
எழுத்தாளர் (இ. 2002 )
1971 – வக்கார் யூனிசு ,
பாக்கித்தானியத் துடுப்பாளர்
இறப்புகள்
1960 – கிளார்க் கேபிள் ,
அமெரிக்க நடிகர், பாடகர் (பி. 1901 )
2006 – மில்ட்டன் ஃப்ரீட்மன் , நோபல்
பரிசு பெற்ற அமெரிக்கப்
பொருளியலாளர் (பி. 1912 )
சிறப்பு நாள்
உலக சகிப்புத் தன்மை நாள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக