நவம்பர் 7 ( November 7)
கிரிகோரியன்
ஆண்டின் 311 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 312 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 54 நாட்கள்
உள்ளன.
நிகழ்வுகள்
1492 - உலகின் மிகப் பழமையான
விண்கல் மோதல் பிரான்சில்
இடம்பெற்றது.
1502 - கொலம்பஸ்
ஹொண்டூராஸ் கரையை
அடைந்தார்.
1665 - உலகின் பழமையானதும் இப்போதும்
வெளிவரும் த லண்டன் கசெட்
( The London Gazette) முதலாவது இதழ்
வெளியானது.
1893 - கொலராடோ
மாநிலத்தில் பெண்களுக்கு
வாக்குரிமை வழங்கப்பட்டது.
1910 - உலகின் முதலாவது விமானத்
தபால் பொதிச் சேவை ரைட்
சகோதரர்களால் ஒகையோவில்
ஆரம்பிக்கப்பட்டது.
1917 - அக்டோபர் புரட்சி: விளாடிமிர்
லெனின் தலைமையில் கம்யூனிசப்
புரட்சியாளர்கள் ரஷ்யாவின்
இடைக்கால அரசாங்கத்தைக் கவிழ்த்தனர்.
(பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது
அக்டோபர் 25 இல் இடம்பெற்றது).
1917 - முதலாம் உலகப் போர்:
பிரித்தானியப் படைகள் ஓட்டோமான்
பேரரசிடம் இருந்து காசாப் பகுதியைக்
கைப்பற்றின.
1918 - மேற்கு சமோவாவில் பரவிய ஒரு வித
நச்சு (வைரஸ்) நோய் காரணமாக 7,542 பேர்
(20% மக்கள் தொகை) ஆண்டு
முடிவிற்குள் இறந்தனர்.
1931 - மா சே துங் சீன சோவியத் குடியரசை
அக்டோபர் புரட்சியின் நினைவு நாளில்
அறிவித்தார்.
1941 - இரண்டாம் உலகப் போர் :
"ஆர்மேனியா" என்ற சோவியத் மருத்துவக்
கப்பல் ஜேர்மனிய விமானங்களின்
குண்டுவீச்சில் மூழ்கியது. 5,000 பேர் வரையில்
இதில் கொல்லப்பட்டனர்.
1941 - நாசி ஜெர்மனியர் உக்ரேனில்
நெமிடீவ் என்ற இடத்தில் 2580
யூதர்களைக் கொன்றனர்.
1956 - சூயஸ் கால்வாய் பிரச்சினை:
எகிப்தில் இருந்து இடனடியாக ஐக்கிய
இராச்சியம் , பிரான்ஸ் , இஸ்ரேல் படைகளை
வெளியேறுமாறு ஐநா
பொதுச் சபைக் கூட்டத்தில்
கேட்கப்பட்டது.
1983 - ஐக்கிய அமெரிக்காவின்
செனட் கட்டடத்தில் குண்டு
வெடித்தது.
1991 - மேஜிக் ஜான்சன் தாம் எச்.ஐ.வி.
நுண்மத்தை பெற்றுள்ளதாக அறிவித்து
என். பி. ஏ. -இல் இருந்து
வெளியேறினார்.
1996 - நைஜீரிய விமானம் ஒன்று
லாகோஸ் அருகே வீழ்ந்ததில் 143 பேர்
கொல்லப்பட்டனர்.
2002 - அமெரிக்கப்
பொருட்களின் விளம்பரங்களை
அறிவிக்க ஈரான் தடை செய்தது.
பிறப்புகள்
1186 – ஒகோடி கான், மங்கோலியப் பேரரசர்
(இ. 1241 )
1728 – ஜேம்ஸ் குக், ஆங்கிலேயக் கடற்படைத்
தலைவர், நாடுகாண் பயணி (இ. 1779 )
1858 – பிபின் சந்திர பால் , இந்திய
செயற்பாட்டாளர், கல்வியாளர்
(இ. 1932 )
1867 – மேரி கியூரி, நோபல் பரிசு பெற்ற
போலந்து இயற்பியலாளர், வேதியியலாளர்
(இ. 1934 )
1879 – லியோன் திரொட்ஸ்கி ,
செஞ்சேனையைத் தோற்றுவித்த உருசியப்
புரட்ட்சியாளர் (இ. 1940 )
1888 – ச. வெ. இராமன், நோபல்
பரிசு பெற்ற இந்திய இயற்பியலாளர்
(இ. 1970 )
1913 – அல்பேர்ட் காம்யு, நோபல் பரிசு
பெற்ற பிரான்சிய எழுத்தாளர் (இ.
1960 )
1918 – பில்லி கிரஹாம் , அமெரிக்க
எழுத்தாளர்
1929 – எரிக் காண்டல் , நோபல் பரிசு
பெற்ற ஆத்திரிய-அமெரிக்க
மருத்துபர்
1943 – சில்வியா கார்ட்ரைட் ,
நியூசிலாந்து அரசியல்வாதி
1954 – கமல்ஹாசன், தமிழக நடிகர்.
1959 – சிறிநிவாஸ் , இந்தியப் பாடகர்
1969 – நந்திதா தாஸ் , இந்திய நடிகர்.
1975 – வெங்கட் பிரபு , இந்திய நடிகர்
1980 – கார்த்திக், இந்தியப் பாடகர்
1981 – அனுசுக்கா செட்டி ,இந்திய
நடிகை
இறப்புகள்
644 – உமறு இப்னு அல்-கத்தாப் ,
இசுலாமியக் கலீபா (பி. 590)
1627 – ஜஹாங்கீர், முகலாயப் பேரரசர்
(பி. 1569 )
1862 – பகதூர் சா சஃபார், முகலாயப்
பேரரசர் (பி. 1775 )
1913 – ஆல்ஃவிரடு அரசல் வாலேசு ,
பிரித்தானிய உயிரியலாளர் (பி. 1823 )
1947 – கோ. நடேசையர் , இந்திய-இலங்கை
ஊடகவியலாளர், அரசியல்வாதி (பி.
1887 )
1951 – என். சி. வசந்தகோகிலம், கருநாடக
இசைப் பாடகி, நடிகை
1962 – எலினோர் ரூசுவெல்ட்,
அமெரிக்காவின் 39வது முதல்
சீமாட்டி (பி. 1884 )
1981 – வில்லியம் ஜேம்ஸ் டியூரண்ட் ,
அமெரிக்க வரலாற்றாளர் (பி. 1885 )
1993 – திருமுருக கிருபானந்த
வாரியார் , இந்திய ஆன்மீக
சொற்பொழிவாளர் (பி.
1906 ).
2000 – நிமலன் சௌந்தரநாயகம், இலங்கை
அரசியல்வாதி (பி. 1950 )
2000 – சி. சுப்பிரமணியம், இந்திய
அரசியல்வாதி (பி. 1910 )
2011 – ஜோ பிரேசியர் , அமெரிக்கக்
குத்துச்சண்டை வீரர் (பி. 1944 )
2014 – தோர்ப்சான் சிக்கிலேண்டு, நார்வே
வேதியியலாளர் (பி. 1923 )
சிறப்பு நாள்
அக்டோபர் புரட்சி நாள் ( பெலருஸ்,
கிர்கிசுத்தான் )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக