வெள்ளி, 11 நவம்பர், 2016

நவம்பர் 11 ( November 11)

நவம்பர் 11 ( November 11)

கிரிகோரியன் ஆண்டின் 315 ஆம்
நாளாகும். நெட்டாண்டுகளில் 316
ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு
மேலும் 50 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1500 - பிரான்சின் பன்னிரண்டாம்
லூயி மன்னனுக்கும் அராகனின்
இரண்டாம் பேர்டினண்ட்
மன்னனுக்கும் இடையில்
நேபில்ஸ் பேரரசைத்
தமக்கிடையே பிரிக்க உடன்பாடு
எட்டப்பட்டது.
1673 - உக்ரேனின் கோட்டின் என்ற
இடத்தில் போலந்து-
லித்துவேனியாப் படைகள்
ஓட்டோமான் இராணுவத்தைத்
தோற்கடித்தன.
1675 - குரு கோவிந்த் சிங்
சீக்கியர்களின் 10வது
குருவானார்.
1675 - லெய்ப்னிட்ஸ் (Gottfried Leibniz)
என்பவர் y=f(x) என்ற செயலி ஒன்றின்
வரைபின் பரப்பைக் காணுவதற்கு
முதன் முறையாக தொகையீட்டு
நுண்கணிதத்தைப் பாவித்தார்.
1778 - மத்திய நியூ யோர்க்கில்
செனெக்கா இந்தியர்கள் 40
பேரைக் கொன்றனர்.
1831 - அடிமைப் புரட்சியில்
ஈடுபட்டமைக்காக கைது
செய்யப்பட்ட நாட் டர்னர்
வேர்ஜீனியாவில்
தூக்கிலிடப்பட்டான்.
1865 - டீஸ்ட்டா ஆற்றின் கிழக்குப்
பகுதிகளை பூட்டான்
பிரித்தானியக் கிழக்கிந்தியக்
கம்பனிக்குக் கொடுத்தது.
1880 - ஆஸ்திரேலியாவின்
Bushranger நெட் கெல்லி
மெல்பேர்னில்
தூக்கிலிடப்பட்டான்.
1887 - ஐக்கிய அமெரிக்காவின்
சிக்காகோ நகரில் தொழிலாளர்
தலைவர்கள் ஆகஸ்ட் ஸ்பைஸ்,
ஆல்பேர்ட் பார்சன்ஸ், அடொல்ஃப்
ஃபிஷர், ஜோர்ஜ் ஏங்கல் ஆகியோர்
தூக்கிலிடப்பட்டனர்.
1889 - வாஷிங்டன் ஐக்கிய
அமெரிக்காவின் 42வது
மாநிலமாகச் இணைக்கப்பட்டது.
1909 - ஹவாயில் பேர்ள்
துறைமுகத்தில் அமெரிக்கக்
கடற்படைத் தளம் அமைக்கப்பட்டது.
1918 - பிரான்சில் "கொம்பியேன்
காடு" என்ற இடத்தில்
தொடருந்துப் பெட்டி ஒன்றில்
ஜேர்மனிக்கும் கூட்டுப்
படைகளுக்கும் இடையில்
போர்நிறுத்த ஒப்பந்தம்
கையெழுத்திடப்பட்டது. முதலாம்
உலகப் போர் 11:00 மணிக்கு
முடிவுக்கு வந்தது.
1918 - ஜோசப் பித்சூத்ஸ்கி
வார்சாவுக்குத் திரும்பி
போலந்தின் உயர் இராணுவப்
பதவியைப் பெற்றான். போலந்து
விடுதலை பெற்றது.
1919 - இலங்கைத் தேசிய
காங்கிரஸ் அமைக்கப்பட்டது.
1930 - அல்பேர்ட் ஐன்ஸ்டைன் ,
லியோ சிலார்ட் ஆகியோர் தமது
கண்டுபிடிப்பான ஐன்ஸ்டைன்
குளிர்சாதனப்பெட்டிக்கான
காப்புரிமத்தைப் பெற்றனர்.
1933 - யாழ் பொது நூல்
நிலையம் அமைக்கப்பட்டது.
1940 - ஐக்கிய அமெரிக்காவின்
மிட்வெஸ்ட் நகரில் எதிர்பாராத
சூறாவளியினால் 144 பேர்
இறந்தனர்.
1942 - இரண்டாம் உலகப் போர் :
நாசி ஜேர்மனி பிரான்ஸ் மீதான
தனது முற்றுகையை
முடித்தது.
1960 - தெற்கு வியட்நாம் அதிபர்
நியோ டின் டியெம் மீதான
இராணுவப் புரட்சி தோல்வியில்
முடிந்தது.
1965 - ரொடீசியாவில் இயன்
ஸ்மித் தலைமையிலான
வெள்ளை இன சிறுபான்மை
அரசு விடுதலையை
அறிவித்தது.
1966 - நாசா ஜெமினி 12 கப்பலை
விண்ணுக்கு அனுப்பியது.
1968 - மாலைதீவுகளில்
இரண்டாவது குடியரசு
அறிவிக்கப்பட்டது.
1975 - ஆஸ்திரேலியப் பிரதமர்
கஃப் விட்லம் தலைமையிலான
அரசை அதன் ஆளுநர் கலைத்தார்.
1992 - இங்கிலாந்து திருச்சபை
பெண்களையும் சமயகுருக்களாக
சேர்ப்பதற்கு முடிவெடுத்தது.
2004 - யாசர் அரபாத் இறந்து
விட்டதாக பாலஸ்தீன விடுதலை
இயக்கம் அறிவித்தது. மஹ்மூத்
அப்பாஸ் தலைவரானார்.
பிறப்புகள்
1821 – பியோதர் தஸ்தயெவ்ஸ்கி ,
உருசிய எழுத்தாளர் (இ. 1881 )
1847 – பிரெட்ரிக் வில்லியம்
ஸ்டீவென்ஸ், பிரித்தானியக்
கட்டிடக் கலைஞர் (இ. 1900)
1888 – அபுல் கலாம் ஆசாத்,
இந்திய அரசியல்வாதி (இ. 1958 )
1888 – ஆச்சார்ய கிருபளானி ,
இந்திய அரசியல்வாதி (இ. 1982 )
1898 – கி. ஆ. பெ. விசுவநாதம் ,
தமிழறிஞர் (இ. 1994 )
1917 – மரகதம் சந்திரசேகர், இந்திய
அரசியல்வாதி (இ. 2001 )
1922 – கர்ட் வானெகெட் ,
அமெரிக்க எழுத்தாளர் (இ. 2007 )
1937 – ப. ஆப்டீன் , ஈழத்து
எழுத்தாளர்
1937 – இசுரீபன் லூவிசு ,
கனடிய அரசியல்வாதி
1945 – டானியல் ஒர்ட்டேகா ,
நிக்கராகுவா அரசுத்தலைவர்
1955 – ஜிக்மே சிங்கே வாங்சுக் ,
பூட்டான் மன்னர்
1957 – மிசேல் டி கிரெட்சர் ,
இலங்கை-ஆத்திரேலியப் புதின
எழுத்தாளர்
1962 – டெமி மூர் , அமெரிக்க
நடிகை
1974 – லியோனார்டோ
டிகாப்ரியோ , அமெரிக்க நடிகர்
இறப்புகள்
1831 – நாட் டர்னர், அமெரிக்கக்
கிளர்ச்சித் தலைவர் (பி. 1800)
1917 – லில்லியுகலானி , அவாய்
அரசி (பி. 1838 )
1982 – எஸ். ஏ. அசோகன், திரைப்பட
நடிகர் (பி. )
1993 – கப்டன் மயூரன் , தமிழீழ
விடுதலைப் புலிப் போராளி
(பி. 1970 )
1993 – கப்டன் ஈழமாறன், தமிழீழ
விடுதலைப் புலிப் போராளி
(பி. 1973 )
2004 – யாசிர் அரஃபாத் ,
பாலத்தீனத் தலைவர்,
அமைதிக்கான நோபல் பரிசு
பெற்றவர் (பி. 1929 )
2005 – பீட்டர் டிரக்கர், ஆத்திரிய-
அமெரிக்க எழுத்தாளர் (பி. 1909 )
சிறப்பு நாள்
குழந்தைகள் நாள்
( குரோவாசியா )
நினைவுறுத்தும் நாள்
விடுதலை நாள் ( அங்கோலா ,
1975)
தேசிய கல்வி தினம் (இந்தியா)
குடியரசு நாள்
( மாலைத்தீவுகள்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக