நவம்பர் 19 ( November 19)
கிரிகோரியன் ஆண்டின் 323 ஆம்
நாளாகும். நெட்டாண்டுகளில் 324
ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு
மேலும் 42 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1493 - கொலம்பஸ் முதல் நாள்
தான் கண்ட தீவின் கரையை
அடைந்து அதற்கு சான் ஜுவான்
பட்டீஸ்டா எனப் பெயர் சூட்டினார்.
1794 - அமெரிக்கப் புரட்சிப்
போரின் பின்னர் எழுந்த சில
பிரச்சினைகளைத் தீர்க்கும்
பொருட்டு ஐக்கிய
அமெரிக்காவுக்கும்
பிரித்தானியாவுக்கும்
இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.
1816 - வார்சா பல்கலைக்கழகம்
அமைக்கப்பட்டது.
1881 - உக்ரேனில் ஒடீசா நகரில்
விண்கல் ஒன்று வீழ்ந்தது.
1932 - சோவியத் தலைவர் ஜோசப்
ஸ்டாலினின் இரண்டாவது
மனைவி தனது வீட்டில் மர்மமான
முறையில் இறந்து கிடக்கக்
காணப்பட்டார்.
1941 - இரண்டாம் உலகப் போர் :
மேற்கு ஆஸ்திரேலியாவில் HMAS
சிட்னி, மற்றும் HSK கோர்மொரன்
என்ற போர்க்கப்பல்களுக்கிடையில்
நிழந்த மோதலில் இரண்டும்
மூழ்கின. இதில் 645
அவுஸ்திரேலியக்
கடற்படையினரும் 77 நாசி
ஜெர்மனியக் கடற்படையினரும்
கொல்லப்பட்டனர்.
1942 - இரண்டாம் உலகப் போர் :
ஸ்டாலின்கிராட் சண்டை -
சோவியத் படையினர்
ஸ்டாலின்கிராட் நகர் மீது மீள்
தாக்குதலை ஆரம்பித்தனர். இது
பின்னர் அவர்களுக்கு வெற்றியை
அளித்தது.
1946 - ஆப்கானிஸ்தான் ,
ஐஸ்லாந்து , சுவீடன் ஆகியன
ஐநாவில் இணைந்தன.
1969 - அப்போலோ 12
விண்கலத்தில் சென்ற சார்ள்ஸ்
கொன்ராட் , அலன் பீன் ஆகியோர்
சந்திரனில் இறங்கி நடந்த
மூன்றாவது, நான்காவது
மனிதர்கள் என்ற பெயரினைப்
பெற்றனர்.
1969 - பிரேசில் உதைப்பந்தாட்ட
வீரர் பெலே தனது 1,000வது
கோலைப் பெற்றார்.
1977 - எகிப்திய அதிபர் அன்வர்
சதாத் அமைதிப்
பேச்சுக்களுக்காக இஸ்ரேல்
சென்றடைந்தார். இஸ்ரேல் சென்ற
முதல் அரபுத் தலைவர் இவரே.
1977 - போர்த்துக்கல் போயிங்
விமானம் ஒன்று மெடெய்ரா என்ற
இடத்தில்
விபத்துக்குள்ளாகியதில் 130 பேர்
கொல்லப்பட்டனர்.
1984 - இலங்கை இராணுவத்தின்
வட மாகாணத் தளபதி
பிரிகேடியர் ஆரியப்பெரும
யாழ்ப்பாணம் , கட்டுவன் என்ற
இடத்தில் கண்ணிவெடித்
தாக்குதலில் கொல்லப்பட்டார்.
1984 - மெக்சிக்கோ நகரில்
எண்ணெய்க்குதங்களில் ஏற்பட்ட
பெரும் வெடிப்புகளினால்
ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 500 பேர்
கொல்லப்பட்டனர்.
1985 - பனிப்போர் : அமெரிக்க
அதிபர் ரொனால்ட் ரேகன்,
சோவியத் அதிபர் மிக்கைல்
கொர்பச்சோவ் இருவரும்
ஜெனீவாவில் முதன் முறையாகச்
சந்தித்தனர்.
1991 - தமிழீழ காவல்துறை
நிறுவப்பட்டது.
1999 - மக்கள் சீனக் குடியரசு
தனது முதலாவது சென்ஷோ
விண்கலத்தை ஏவியது.
2005 - மகிந்த ராஜபக்ச
இலங்கையின் 5வது
நிறைவேற்று ஜனாதிபதியாகப்
பதவியேற்றார்.
பிறப்புகள்
1600 – இங்கிலாந்தின் முதலாம்
சார்லசு (இ. 1649 )
1828 – இராணி இலட்சுமிபாய் ,
இந்திய அரசி (இ. 1858 )
1831 – சேம்சு கார்ஃபீல்டு ,
அமெரிக்காவின் 20வது
அரசுத்தலைவர் (இ. 1881)
1907 – மு. திருச்செல்வம்,
இலங்கைத் தமிழ் அரசியல்வாதி
(இ. 1976 )
1909 – பீட்டர் டிரக்கர், ஆத்திரிய-
அமெரிக்கக் கல்வியாளர்,
நூலாசிரியர் (இ. 2005 )
1917 – இந்திரா காந்தி, 3வது
இந்தியப் பிரதமர் (இ. 1984 )
1918 – தேவிபிரசாத்
சட்டோபாத்தியாயா , இந்திய
மார்க்சியப் புலமையாளர் (இ. 1993 )
1922 – சலில் சௌதுரி , இந்திய
இயக்குநர், இசையமைப்பாளர் (இ.
1995 )
1928 – தாரா சிங் , இந்திய
மற்போர் வீரர், நடிகர், அரசியல்வாதி
(இ. 2012 )
1933 – ஜேக் வெல்ச் , அமெரிக்கப்
பொறியியலாளர், தொழிலதிபர்
1938 – டெட் டேர்னர் , அமெரிக்கத்
தொழிலதிபர்
1939 – எஸ். எம். கார்மேகம் ,
இலங்கை எழுத்தாளர் (இ. 2005 )
1951 – சீனத் அமான் , இந்திய
நடிகை
1954 – அப்துல் பத்தா அல்-சிசி ,
எகிப்தின் 6வது அரசுத்தலைவர்
1961 – மெக் ரையன் , அமெரிக்க
நடிகை
1973 – சகீலா, இந்திய நடிகை
1974 – அருண் விஜய், இந்திய
நடிகர், பாடகர்
1976 – ஜேக் டோர்சி , அமெரிக்கத்
தொழிலதிபர், டுவிட்டரை
ஆரம்பித்தவர்களில் ஒருவர்
இறப்புகள்
498 – இரண்டாம் அனஸ்தாசியுஸ்
(திருத்தந்தை)
1665 – நிக்கோலா போசின் ,
பிரான்சிய-இத்தாலிய ஓவியர் (பி.
1594 )
1828 – பிராண்ஸ் சூபேர்ட் ,
ஆத்திரிய இசையமைப்பாளர் (பி.
1797 )
1998 – புச்சியித்தா
தெத்துசுயா , சப்பானிய-
அமெரிக்கக் கல்வியாளர் (பி. 1920)
2008 – எம். என். நம்பியார்,
தென்னிந்திய நடிகர் (பி. 1919 )
2011 – பேசில் ட'ஒலிவேரா ,
தென்னாப்பிரிக்கத் துடுப்பாளர்
(பி. 1931 )
2013 – பிரடெரிக் சேனர் , நோபல்
பரிசு பெற்ற ஆங்கிலேய
வேதியியலாளர் (பி. 1918 )
சிறப்பு நாள்
அனைத்துலக ஆண்கள் நாள்
விடுதலை நாள் ( மாலி )
உலகக் கழிவறை நாள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக