நவம்பர் 13 ( November 13)
கிரிகோரியன்
ஆண்டின் 317 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 318 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 48 நாட்கள்
உள்ளன.
நிகழ்வுகள்
1002 - இங்கிலாந்தில் வசிக்கும் அனைத்து
டேன் பழங்குடிகளையும் கொல்லும்படி
ஆங்கிலேய மன்னன் எத்தல்ரெட்
உத்தரவிட்டான் (இது சென் பிறைஸ்
நாள் படுகொலைகள் என
அழைக்கப்பட்டது).
1795 - கப்டன் புவுசர் என்பவனின்
தலைமையில் பிரித்தானியப் படையினர்
இலங்கையின் கற்பிட்டி பிரதேசத்தை
ஒல்லாந்தரிடம் இருந்து கைப்பற்றினர்.
1851 - வாஷிங்டனின் சியாட்டில்
நகரில் முதல் ஐரோப்பியக்
குடியேற்றக்காரர்களான, ஆர்தர் ஏ.
டென்னி என்பவரும் அவரது
குழுவினரும் வந்திறங்கினர்.
1887 - மத்திய லண்டன் பகுதியில்
அயர்லாந்து விடுதலைப் போராட்ட
ஆதரவாளர்களுக்கும்
காவற்துறையினருக்கும் இடையில் மோதல்
வெடித்தது.
1887 - நவம்பர் 11 இல் சிக்காகோவில்
தூக்கிலிடப்பட்ட நான்கு
தொழிலாளர் தலைவர்களின்
இறுதி ஊர்வலத்தில் சுமார் 5,000 பேர்
கலந்து கொண்டனர்.
1918 - ஒட்டோமான் பேரரசின் தலைநகர்
கொன்ஸ்டண்டீனப்போல் நகரை
கூட்டுப் படைகள் கைப்பற்றினர்.
1950 - வெனிசுவேலாவின் அதிபர்
ஜெனரல் கார்லொஸ்
டெல்காடோ சால்போட்
படுகொலை செய்யப்பட்டார்.
1957 - கோர்டன் கூல்ட் என்பவரால் லேசர்
கண்டுபிடிக்கப்பட்டது.
1965 - அமெரிக்காவின் யார்மூத்
காசில் என்ற பயணிகள் கப்பல்
பகாமசில் மூழ்கியதில் 90 பேர்
கொல்லப்பட்டானர்.
1970 - போலா சூறாவளி : கிழக்குப்
பாகிஸ்தானில் இடம்பெற்ற மிகப்
பெரும் சூறாவளியில் 500,000 பேர்
வரையில் உயிரிழந்தனர். இது 20ம்
நூற்றாண்டின் மிகப் பெரும் இயற்கை
அழிவு எனக் கருதப்படுகிறது).
1971 - ஐக்கிய அமெரிக்காவின்
மரைனர் 9 விண்கப்பல் செவ்வாய்க்
கோளை சுற்றி வந்தது. இதுவே பூமியை விட
வேறொரு கோளைச் சுற்றிவந்த
முதலாவது விண்கப்பலாகும்.
1985 - கொலம்பியாவில்
நெவாடோ டெல் ரூஸ் என்ற
எரிமலை வெடித்ததில் ஏற்பட்ட
மண்சரிவினால் ஆர்மேரோ நகரம் அழிந்தது.
23,000 பேர் கொல்லபட்டனர்.
1989 - இலங்கையின் மக்கள் விடுதலை
முன்னணியின் தலைவர் ரோகண விஜேவீர
இராணுவத்தினரால் முதல் நாள் கைது
செய்யப்பட்டுச் சுட்டுக்
கொல்லப்பட்டார்.
1990 - உலக வலைப் பின்னல் ( WWW)
ஆரம்பிக்கப்பட்டது.
1993 - யாழ்ப்பாணம் புனித ஜேம்ஸ்
தேவாலயத்தின் மீது இலங்கை
விமானங்கள் நடத்திய
குண்டுத்தாக்குதலில் வணக்கத்தில்
ஈடுபட்டிருந்த 9 பொதுமக்கள்
கொல்லப்பட்டனர். பலர்
படுகாயமடைந்தனர்.
1993 - தவளை நடவடிக்கை :
யாழ்ப்பாணம், பூநகரி மற்றும்
நாகதேவன்துறை இராணுவ, கடற்படைக்
கூட்டுத்தளங்களை விடுதலைப் புலிகள் தாக்கி
அழித்து பல தாங்கிகளையும்
விசைப்படகுகளையும் கைப்பற்றினர்.
மொத்தம் 4 நாட்கள்
இடம்பெற்ற இத்தாக்குதலில் 469
புலிகள் இறந்தனர்.
1994 - ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய
சுவீடன் மக்கள் முடிவு செய்தனர்.
1995 - சவுதி அரேபியாவில் ரியாத்
நகரில் இடம்பெற்ற
குண்டுத்தாக்குதலில் ஐந்து
அமெரிக்கர்களும் இரண்டு
இந்தியர்களும் உயிரிழந்தனர்.
பிறப்புகள்
354 – ஹிப்போவின் அகஸ்டீன் , உரோமை
இறையியலாளர் (இ. 430)
1780 – ரஞ்சித் சிங் , சீக்கியப் பேரரசர் (இ.
1839 )
1850 – ஆர். எல். இசுட்டீவன்சன் ,
இசுக்கொட்டியக் கவிஞர் (இ. 1894 )
1899 – ஹுவாங் சியான் புயான், சீன
வரலாற்றாளர், மானிடவியலாளர்
(இ. 1982 )
1923 – ஆல்பர்ட் ராமசாமி ,
இரீயூனியன் அரசியல்வாதி
1926 – மு. ச. செல்லச்சாமி ,
இலங்கை அரசியல்வாதி
1934 – கமால் கமலேஸ்வரன் ,
ஆத்திரேலிய இசைக் கலைஞர்
1935 – பி. சுசீலா , தென்னிந்தியத்
திரைப்படப் பின்னணிப் பாடகர்
1940 – சவுல் கிரிப்கே , அமெரிக்க
மெய்யியலாளர்
1942 – அம்பிகா சோனி , இந்திய
அரசியல்வாதி
1947 – அனில் அகர்வால் , இந்திய
சுற்றுச்சூழலியலாளர் (இ. 2002 )
1947 – அமோரி லோவின்சு, அமெரிக்க
இயற்பியலாளர்
1967 – ஜூஹி சாவ்லா , இந்திய நடிகை
1969 – அயான் கேர்சி அலி , சோமாலிய-
அமெரிக்க எழுத்தாளர்,
பெண்ணியவாதி
இறப்புகள்
1916 – சாகி , ஆங்கிலேய எழுத்தாளர்
(பி. 1870 )
1987 – ஏ. எல். அப்துல் மஜீத் ,
கிழக்கிலங்கை அரசியல்வாதி (பி. 1933 )
1989 – ரோகண விஜேவீர , இலங்கையின்
கிளர்ச்சித் தலைவர், அரசியல்வாதி (பி.
1943 )
2002 – கணபதி கணேசன், மலேசிய
இதழாசிரியர் (பி. 1955 )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக