நவம்பர் 21 ( November 21)
கிரிகோரியன்
ஆண்டின் 325 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 326 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 40 நாட்கள்
உள்ளன.
நிகழ்வுகள்
1272 - மூன்றாம் ஹென்றி நவம்பர்
16 இல் இறந்ததையடுத்து அவனது மகன்
எட்வேர்ட் இங்கிலாந்தின் மன்னன்
ஆனான்.
1789 - வட கரொலைனா ஐக்கிய
அமெரிக்காவின் 12வது
மாநிலமாக இணைக்கப்பட்டது.
1791 - நெப்போலியன்
பொனபார்ட் பிரெஞ்சு
இராணுவத்தின் தளபதியானான்.
1877 - ஒலியைப் பதியவும் கேட்கவும்
உதவக்கூடிய போனோகிராஃப் என்ற கருவியைத்
தாம் கண்டுபிடித்ததாக தோமஸ் எடிசன்
அறிவித்தார்.
1894 - சீனாவின் மஞ்சூரியாவில்
ஆர்தர் துறைமுகத்தை ஜப்பான் கைப்பற்றியது.
1905 - ஆற்றலுக்கும் திணிவுக்கும்
இடையேயான தொடர்பை விளக்கும்
ஆய்வுக் கட்டுரையை அல்பேர்ட் ஐன்ஸ்டைன்
வெளியிட்டார்.
1916 - பிரித்தானியக் கப்பலான HMHS
பிரித்தானிக் கிரேக்கத்தில் ஏஜியன் கடலில்
வெடித்து மூழ்கியதில் 30 பேர்
கொல்லப்பட்டனர்.
1920 - டப்ளினில் காற்பந்துப் போட்டி
நிகழ்வொன்றில் பிரித்தானியப்
படையினர் சுட்டதில் 14 ஐரிஷ்
பொதுமக்கள்
கொல்லப்பட்டனர்.
1942 - அலாஸ்கா நெடுஞ்சாலை
திறக்கப்பட்டது.
1947 - இந்தியா விடுதலை அடைந்த பின்னர்
முதன் முறையாக அஞ்சல் தலை
வெளியிடப்பட்டது. "ஜெய்ஹிந்த்'
என்ற வார்த்தையுடன் வெளியிடப்பட்ட
முதல் அஞ்சல் தலையின் விலை மூன்றரை
அணா.
1962 - சீன மக்கள் விடுதலை இராணுவம்
இந்தோ-சீனப் போரில் போர் நிறுத்தம்
செய்வதாக ஒருதலைப் பட்சமாக
அறிவித்தது.
1963 - பாரதத்தின் முதலாவது ஈரடுக்கு
உளவு ஏவுகணை நைக்-அபாச்சி (Nike
Apache) ஏவப்பட்டது.
1969 - முதலாவது ஆர்ப்பநெட்
(ARPANET) தொடர்பு
ஏற்படுத்தப்பட்டது.
1969 - ஓக்கினாவா தீவை 1972 இல்
ஜப்பானியரிடம் ஒப்படைப்பதற்கான
ஒப்பந்தம் அமெரிக்க அதிபர் ரிச்சார்ட்
நிக்சனுக்கும் ஜப்பான் பிரதமர் ஐசாக்கு
சாட்டோவுக்கும் இடையில் வாஷிங்டனில்
கையெழுத்திடப்பட்டது.
1971 - வங்காள தீவிரவாதக்
குழுவான முக்தி பாஹினியின்
உதவியுடன் இந்திய படைகள் கரிப்பூர் என்ற
இடத்தில் பாகிஸ்தான் படைகளைத்
தோற்கடித்தன.
1974 - பேர்மிங்ஹாமில் ஐரிஷ் குடியரசு
இராணுவத்தினரின் குண்டுவெடிப்பில்
21 பேர் கொல்லப்பட்டனர்.
1980 - தமிழீழத் தேசியக்கொடி
உருவாக்கப்பட்டது.
1980 - நெவாடாவில் விடுதி
ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 87
பேர் கொல்லப்பட்டு 650 பேர்
காயமடைந்தனர்.
1990 - புலிகளின் குரல்
வானொலி
தொடங்கப்பட்டது.
1990 - மாங்குளம் இராணுவ முகாம்
மீதான தாக்குதல் ஆரம்பமானது.
1996 - புவேர்ட்டோ ரிக்கோவில் சான் ஜுவான்
நகரில் கடைத் தொகுதி ஒன்றில்
இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 33
பேர் கொல்லப்பட்டனர்.
2004 - டொமினிக்காத் தீவில்
இடம்பெற்ற நிலநடுக்கம் போர்ட்ஸ்மவுத்
நகரில் பலத்த சேதத்தை விளைவித்தது.
பிறப்புகள்
1694 – வோல்ட்டயர், பிரான்சிய
மெய்யியலாளர் (இ. 1778)
1854 – பதினைந்தாம் பெனடிக்ட்
(திருத்தந்தை) (இ. 1922)
1902 – ஐசக் பாஷவிஸ் சிங்கர் , நோபல்
பரிசு பெற்ற போலந்து-அமெரிக்க
எழுத்தாளர் (இ. 1991 )
1933 – த. இராசலிங்கம் , இலங்கைத்
தமிழ் அரசியல்வாதி
1938 – ஹெலன், ஆங்கிலோ-பர்மிய
இந்திய திரைப்பட நடிகை
1941 – ஆனந்திபென் படேல் ,
இந்தியாவின் குசராத் முதலமைச்சர்
1949 – கே. கோவிந்தராஜ், இலங்கையின்
மலையக எழுத்தாளர் (இ. 2009 )
இறப்புகள்
1970 – ச. வெ. இராமன், நோபல்
பரிசு பெற்ற இந்திய இயற்பியலாளர்
(பி. 1888 )
1996 – அப்துஸ் சலாம் , நோபல் பரிசு
பெற்ற பாக்கித்தானிய-ஆங்கிலேய
இயற்பியலாளர் (பி. 1926 )
2012 – அஜ்மல் கசாப் ,
பாக்கித்தானிய தீவிரவாதி (பி. 1987)
சிறப்பு நாள்
மரியாவைக் காணிக்கையாக
அர்ப்பணித்தல் (கிறித்தவம்)
இராணுவத்தினர் நாள்
( வங்காளதேசம்)
உலகத் தொலைக்காட்சி நாள்
தேசிய மாவீரர் வாரம் ஆரம்பம்
( தமிழீழம் )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக