நவம்பர் 25 ( November 25)
கிரிகோரியன் ஆண்டின் 329 ஆம்
நாளாகும். நெட்டாண்டுகளில் 330
ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு
மேலும் 36 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1120 - இங்கிலாந்து மன்னன்
முதலாம் ஹென்றியின் மகன்
வில்லியம் அடெலின்
பயணஞ்செய்த கப்பல் ஆங்கிலக்
கால்வாயில் மூழ்கியதில்
கொல்லப்பட்டான்.
1542 - ஆங்கிலேயப் படைகள்
சொல்வே மொஸ் என்ற இடத்தில்
ஸ்கொட்லாந்துப் படைகளைத்
தோற்கடித்தன.
1667 - கவ்காசியாப் பகுதியில்
ஷெமாக்கா என்ற இடத்தில் நிகழ்ந்த
நிலநடுக்கத்தில் 80,000 பேர்
கொல்லப்பட்டனர்.
1703 - பிரித்தானியாவில் மிகப்
பெரும் சூறாவளி பதியப்பட்டது.
9,000 பேர் கொல்லப்பட்டனர்.
1758 - பிரித்தானியப் படைகள்
பிரெஞ்சு வசமிருந்த Fort Duquesne
( பென்சில்வேனியா ) ஐக்
கைப்பற்றினர்.
1783 - கடைசி பிரித்தானியப்
படைகள் நியூயோர்க் நகரை
விட்டுப் புறப்பட்டன.
1795 - சுதந்திரப் போலந்தின்
கடைசி மன்னன் ஸ்டனிஸ்லாஸ்
ஆகஸ்ட் பொனியாட்டோவ்ஸ்கி
பதவியில் இருந்து அகற்றப்பட்டு
ரஷ்யாவுக்கு நாடு
கடத்தப்பட்டான்.
1833 - சுமாத்திராவில் 8.7
நிலநடுக்கம் ஏற்பட்டது.
1839 - இந்தியாவில் பலத்த
சூறாவளி ஏற்பட்டது.
ஆந்திராவின் கொரிங்கா நகரம்
முற்றாக சேதமடைந்தது. 30,000
பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
1867 - அல்பிரட் நோபல்
டைனமைட்டுக்குக் காப்புரிமம்
பெற்றார்.
1905 - டென்மார்க் இளவரசன் கார்ல்
நோர்வே வந்து சேர்ந்தான். இவன்
பின்னர் "ஏழாம் ஹாக்கோன்" என்ற
பெயரில் நோர்வேயின்
மன்னனானான்.
1926 - ஐக்கிய அமெரிக்காவின்
ஆர்கன்சஸ் மாநிலத்தில் இடம்பெற்ற
சூறாவளியில் 76 பேர்
கொல்லப்பட்டு பலர் காயமுற்றனர்.
1936 - ஜப்பான், ஜேர்மனி ஆகியன
சோவியத் ஒன்றியம் தம் மீது
படையெடுத்தால் அதனை
கூட்டாக எதிர்கொள்ள பேர்லின்
நகரில் ஒப்பந்தம் செய்து கொண்டன.
1944 - இரண்டாம் உலகப் போர் :
ஐக்கிய இராச்சியம் , டெப்ட்ஃபோர்ட்
நகரில் வூல்வேர்த்
கடைத்தொகுதியில் ஜேர்மனிய
விமானங்கள் ஏவுகணை
வீசியதில் 160 பேர் கொல்லப்பட்டனர்.
1950 - ஐக்கிய அமெரிக்காவின்
வடகிழக்கில் ஏற்பட்ட
சூறாவளியினால் மேற்கு
வேர்ஜீனியாவில் 323 பேர்
கொல்லப்பட்டனர்.
1950 - மக்கள் சீனக் குடியரசு ஐநா
படைகளை எதிர்க்க கொரியப்
போரில் ஈடுபட்டது.
1952 - அகதா கிறிஸ்டியின்
மேடை நாடகமான த மௌஸ்ட்றப்
(The Mousetrap) திரைப்படமாக
வெளிவந்தது.
1960 – டொமினிக்கன்
குடியரசில் மிராபெல்
சகோதரிகள் படுகொலை
செய்யப்பட்டனர்.
1973 - கிரேக்கத் தலைவர் ஜோர்ஜ்
பாப்படபவுலொஸ் இராணுவப்
புரட்சி ஒன்றில் பதவி இழந்தார்.
1975 - சூரினாம் நெதர்லாந்திடம்
இருந்து விடுதலை பெற்றது.
1981 - ரொடீசியாவிலிருந்து
மும்பாய்க்குப் புறப்பட்ட ஏர்
இந்தியா விமானம் கடத்தப்பட்டு
தென்னாபிரிக்காவின் டர்பன்
நகருக்குச் செலுத்தப்பட்டது.
1987 - பிலிப்பீன்சில் நீனா என்ற
சூறாவளி தாக்கியதில் 1,036 பேர்
கொல்லப்பட்டனர்.
1992 -
செக்கொசிலவாக்கியாவின்
நாடாளுமன்றம் நாட்டை செக்
குடியரசு , சிலவாக்கியா என
இரண்டாக ஜனவரி 1 , 1993
இலிருந்து பிரிக்க
முடிவெடுத்தது.
2000 - அசர்பைஜான் தலைநகர்
பக்கு நகரில் இடம்பெற்ற 7.0
அளவை நிலநடுக்கத்தில் 26 பேர்
கொல்லப்பட்டனர்.
2006 - சீனாவின் தென்மேற்கு
மற்றும் வடகிழக்குப் பகுதிகளில்
ஏற்பட்ட நிலக்கரிச் சுரங்க விபத்தில்
53 பேர் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்
1835 – ஆண்ட்ரூ கார்னேகி ,
இசுக்கொட்டிய-அமெரிக்கத்
தொழிலதிபர் (இ. 1919 )
1844 – கார்ல் பென்ஸ் ,
செருமானியத் தொழிலதிபர் (இ.
1929 )
1881 – இருபத்திமூன்றாம்
யோவான் (திருத்தந்தை) (இ. 1963)
1915 – அகஸ்தோ பினோசெட் ,
சிலியின் 30வது அரசுத்தலைவர்
(இ. 2006 )
1952 – இம்ரான் கான் ,
பாக்கித்தான் துடுப்பாளர்
1956 – திருவாரூர் பக்தவத்சலம் ,
தென்னிந்திய மிருதங்க இசைக்
கலைஞர்
1965 – டக்ரே ஸ்காட்,
இசுக்கொட்டிய நடிகர்
இறப்புகள்
1950 – யொகான்னசு வி.
யென்சென் , நோபல் பரிசு பெற்ற
தென்மார்க்கு எழுத்தாளர் (பி.
1873 )
1964 – துவாரம் வேங்கடசுவாமி
நாயுடு கருநாடக இசை, வயலின்
இசைக் கலைஞர் (பி. 1893 )
1974 – ஊ தாண்ட் , 3வது ஐக்கிய
நாடுகள் சபையின் பொதுச்
செயலாளர் , பர்மியர் (பி. 1909 )
1984 – ஒய். பி. சவாண், இந்திய
அரசியல்வாதி (பி. 1913)
1997 – ஹேஸ்டிங்ஸ் கமுசு
பண்டா , மாலாவியின் 1வது
அரசுத்தலைவர் (பி. 1898 )
சிறப்பு நாள்
விடுதலை நாள், ( சுரிநாம் ,
1975)
பெண்களுக்கு எதிரான
அனைத்துலக வன்முறை ஒழிப்பு
நாள்
ஆசிரியர் நாள்
( இந்தோனேசியா)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக