நவம்பர் 4 ( November 4)
கிரிகோரியன்
ஆண்டின் 308 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 309 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 57 நாட்கள்
உள்ளன.
நிகழ்வுகள்
1333 - ஆர்னோ ஆறு
பெருக்கெடுத்து வெள்ளம்
பரவியதில் இத்தாலியின் புளோரென்ஸ்
நகரில் பெரும் சேதம் ஏற்பட்டது.
1576 - ஸ்பானியப் படைகள்
பெல்ஜியத்தின் ஆண்ட்வேர்ப் நகரை
கைப்பற்றினர். மூன்று நாட்களில் இந்நகரம்
பெரிதும் சேதப்படுத்தப்பட்டது.
1861 - வாஷிங்டன் பல்கலைக்கழகம்
ஆரம்பிக்கப்பட்டது.
1869 - அறிவியல் இதழ் நேச்சர்
முதற்தடவையாக வெளியிடப்பட்டது.
1914 - பிரித்தானியாவும் பிரான்சும்
துருக்கியுடன் போரை அறிவித்தன.
1918 - முதலாம் உலகப் போர்:
இத்தாலியிடம் ஆஸ்திரியா-ஹங்கேரி அரசு
சரணடைந்தது.
1918 - 40,000 கடற்படையினர் கீல்
துறைமுகத்தைக் கைப்பற்றியதை அடுத்து
ஜெர்மானியப் புரட்சி
தொடங்கியது.
1921 - ஜப்பானியப் பிரதமர் ஹரா
தக்காஷி டோக்கியோவில் சுட்டுக்
கொல்லப்பட்டார்.
1956 - அக்டோபர் 23 இல் ஆரம்பமான
ஹங்கேரியப் புரட்சியை முறியடிக்க சோவியத்
படைகள் ஹங்கேரியை முற்றுகையிட்டன.
ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள்
கொல்லப்பட்டு
லட்சக்கணக்கானோர் நாட்டை விட்டு
வெளியேறினர்.
1966 - இத்தாலியின் புளோரென்ஸ்
நகரத்தின் மூன்றில் இரண்டு பகுதி
வெள்ளப் பெருக்கில் அழிந்தது.
113 பேர் கொல்லப்பட்டனர். பல
பெறுமதியான ஓவியங்களும்
நூல்களும் அழிந்தன.
1967 - எம்.ஜி.ஆர். கொலை
முயற்சி வழக்கு : நடிகர் எம். ஜி.
ராமச்சந்திரன் கொலை முயற்சி
வழக்கில் நடிகர் எம். ஆர். ராதாவுக்கு
ஏழு ஆண்டுக் கடுங்காவல் தண்டனை
விதிக்கப்பட்டது.
1979 - ஈரானியத் தீவிரவாதிகள்
டெஹ்ரானில் அமெரிக்கத்
தூதராலயத்தை முற்றுகையிட்டு 53
அமெரிக்கர்கள் உட்பட 90 பேரை
பணயக்கைதிகளாகப் பிடித்தனர்.
1984 - நிக்கராகுவாவில்
இடம்பெற்ற தேர்தல்களில்
சண்டினீஸ்டா முன்னணி வெற்றி
பெற்றது.
1995 - இஸ்ரேலியப் பிரதமர் இட்சாக்
ரபீன் தீவிரவாத வலதுசாரி
இஸ்ரேலியரால் சுட்டுக்
கொல்லப்பட்டார்.
2004 - ஐவரி கோஸ்டில் இடம்பெற்ற
உள்நாட்டுப் போரில் 12 பிரெஞ்சுப்
படையினர் மற்றும் 3 ஐநா கண்காணிப்புக்
குழு உறுப்பினர்கள் உட்பட
நூற்றுக்கணக்கானோர்
கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்
1650 – இங்கிலாந்தின் மூன்றாம்
வில்லியம் (இ. 1702 )
1845 – வாசுதேவ் பல்வந்த் பட்கே ,
இந்தியப் புரட்சியாளர் (இ. 1883 )
1897 – ஜானகி அம்மாள் , இந்தியத்
தாவரவியலாளர் (இ. 1984 )
1906 – ழான் ஃபில்லியொசா ,
பிரான்சியத் தமிழறிஞர் (இ. 1982 )
1929 – சகுந்தலா தேவி , இந்தியக்
கணிதவியலாளர், வானியலாளர் (இ.
2013 )
1957 – டோனி அபோட் , ஆத்திரேலியாவின்
28வது பிரதமர்
1969 – மேத்திவ் மெக்கானாகே ,
அமெரிக்க நடிகை
1972 – தபூ , இந்திய நடிகை
இறப்புகள்
1918 – வில்ஃபிரட் ஓவன் , ஆங்கிலேயக்
கவிஞர் (பி. 1893 )
1920 – உலூத்விக் சுத்ரூவ , உருசிய
வானியலாளர் (பி. 1858 )
1985 – டி. கே. இராமானுஜக்
கவிராயர் , தமிழறிஞர், புலவர் (பி. 1905 )
1988 – கி. வா. ஜகந்நாதன் , தமிழ்
இதழாளர், எழுத்தாளர் (பி. 1906 )
1988 – ஜேம்ஸ் இரத்தினம் , ஈழத்து
எழுத்தாளர். (பி. 1905 )
1994 – கு. மா. பாலசுப்பிரமணியம் ,
திரைப்பட பாடலாசிரியர் (பி. 1920 )
1995 – இட்சாக் ரபீன் , இசுரேலின் 5வது
பிரதமர், அமைதிக்கான நோபல் பரிசு
பெற்றவர் (பி. 1922)
1998 – மரியோன் தொனோவன் ,
அமெரிக்கப் புதுமைப்புனைவாளர்,
தொழிலதிபர் (பி. 1917 )
1999 – அப்துல் சமது , தமிழக
அரசியல்வாதி (பி. 1926 )
2008 – மைக்கேல் கிரைட்டன் , அமெரிக்க
மருத்துவர், இயக்குநர் (பி. 1942 )
2012 – ஜேக்கப் சகாயகுமார் அருணி,
தமிழக சமையல் கலை நிபுணர் (பி. 1974 )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக