நவம்பர் 23 ( November 23)
கிரிகோரியன் ஆண்டின் 327 ஆம்
நாளாகும். நெட்டாண்டுகளில் 328
ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு
மேலும் 38 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
800 - திருத்தந்தை மூன்றாம்
லியோ இழைத்தாகக் கருதப்படும்
குற்றங்களை விசாரணை செய்ய
மன்னன் ஷார்லெமான் ரோம் வந்து
சேர்ந்தான்.
1227 - போலந்து இளவரசன்
முதலாம் லெஸ்செக் படுகொலை
செய்யப்பட்டான்.
1248 - காஸ்டிலின் மூன்றாம்
பேர்டினண்ட் மன்னனின்
படையினர் செவில் நகரைக்
கைப்பற்றினர்.
1499 - இங்கிலாந்தின்
அரசாட்சிக்கு உரிமை கோரிய
பேர்க்கின் வோர்பெக் லண்டன்
கோபுரத்தில் இருந்து தப்பியோட
முயல்கையில் கைதாகி
தூக்கிலிடப்பட்டான். இவன் 1497 இல்
நான்காம் எட்வேர்ட்டின் மகன் என
உரிமை கோரி இங்கிலாந்தை
முற்றுகையிட்டான்.
1867 - இரண்டு ஐரியர்களைச்
சிறையிலிருந்து வெளியேற
உதவியமைக்காக மூன்று ஐரியத்
தேசியவாதிகள் இங்கிலாந்து,
மான்செஸ்டரில்
தூக்கிலிடப்பட்டனர்.
1890 - நெதர்லாந்து மன்னன்
மூன்றாம் வில்லியம் ஆண்
வாரிசு இல்லாமல் இறந்தான்.
அவனது மகள் இளவரசி
வில்ஹெல்மினா அரசியாவதற்கு
ஏதுவாக சிறப்புச் சட்டம்
இயற்றப்பட்டது.
1936 - முதலாவது லைஃப் இதழ்
வெளியிடப்பட்டது.
1940 - இரண்டாம் உலகப் போர் :
ருமேனியா அச்சு அணி
நாடுகளுடன் இணைந்தது.
1955 - கொக்கோஸ் தீவுகள்
ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து
ஆஸ்திரேலியாவுக்கு
கைமாறியது.
1971 - மக்கள் சீனக் குடியரசின்
பிரதிநிதிகள் முதற்தடவையாக
ஐக்கிய நாடுகள் அவையில்
சீனாவுக்காகப்
பிரதிநிதித்துவப்படுத்தினர்.
1978 - இலங்கையின் கிழக்கு
மாகாணத்தில் சூறாவளி தாக்கி
பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
1979 - மவுண்ட்பேட்டன்
பிரபுவைக் கொலை செய்த
குற்றத்துக்காக ஐரிஷ் குடியரசு
இராணுவத்தைச் சேர்ந்த தொமஸ்
மக்மாகன் என்பவருக்கு டப்ளினில்
ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
1980 - தெற்கு இத்தாலியில்
இடம்பெற்ற நிலநடுக்கத்தினால்
4,800 பேர் கொல்லப்பட்டனர்.
1985 - எகிப்திய பயணிகள்
விமானம் கிரேக்கத்தில் இருந்து
புறப்படும்போது கடத்தப்பட்டு
மால்ட்டாவில் தரையிறக்கப்பட்ட
போது எகிப்தியப் படைகள்
விமானத்தைச் சுற்றி வளைத்தனர்.
முடிவில் 60 பேர் கொல்லப்பட்டனர்.
1990 - ஈழப்போர் : தமிழீழ
விடுதலைப் புலிகள் மாங்குளம்
இராணுவ முகாம் மீது
தாக்குதலை நடத்தி அதனை
முழுமையாகக் கைப்பற்றினர்.
1996 - எதியோப்பிய விமானம்
கடத்தப்பட்டு எரிபொருள் முடிந்த
நிலையில் இந்து மாகடலில்
கொமொரோஸ் அருகில்
வீழ்ந்ததில் 123 பேர் கொல்லப்பட்டனர்.
1998 - கம்போடியத் தலைவர் ஹுன்
சென்னுக்கும் இளவரசர்
நொரொடோம் ரனாரிட்டுக்கும்
இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.
2003 - வாரக்கணக்கில் இடம்பெற்ற
ஆர்ப்பாட்டங்களை அடுத்து
ஜோர்ஜிய அதிபர் எடுவார்ட்
ஷெவர்நாட்செ பதவி விலகினார்.
2005 - லைபீரியாவின்
தலைவராக எலன் ஜான்சன் சர்லீஃப்
தெரிவு செய்யப்பட்டார். ஆபிரிக்க
நாடொன்றிண் முதலாவது பெண்
தலைவர் இவராவார்.
2007 - அரியலூர் மாவட்டம்
உருவாக்கப்பட்டது
2007 - ஆர்ஜெண்டீனாவுக்குத்
தெற்கோ பயணிகள் கப்பல் ஒன்று
மூழ்கியதில் 154 பெர்
கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்
1837 – யோகான்னசு வான் டெர்
வால்சு , நோபல் பரிசு பெற்ற
டச்சு இயற்பியலாளர் (இ. 1923 )
1869 – வால்டெமர் பவுல்சன் ,
தென்மார்க்குப் பொறியியலாளர்
(இ. 1942 )
1897 – நீரத் சந்திர சவுத்ரி ,
வங்காளதேச-ஆங்கிலேய
வரலாற்றாளர், எழுத்தாளர் (இ. 1999 )
1921 – சுரதா , கவிஞர் (இ. 2006 )
1923 – ஏ. எல். சீனிவாசன் , தமிழ்த்
திரைப்படத் தயாரிப்பாளர்.
1926 – சத்திய சாயி பாபா ,
தென்னிந்திய குரு (இ. 2011)
1926 – தி. சு. கிள்ளிவளவன் ,
தமிழக அரசியல்வாதி, எழுத்தாளர்,
இதழாளர் (இ. 2015 )
1953 – பிரான்சீஸ் காப்ரே ,
பிரான்சியப் பாடகர்
1962 – நிக்கோலசு மதுரோ,
வெனிசுவேலா அரசுத்தலைவர்
1979 – கெல்லி புரூக் ,
ஆங்கிலேய நடிகை
1992 – மைலே சைரஸ் , அமெரிக்க
நடிகை
இறப்புகள்
1937 – ஜகதீஷ் சந்திர போஸ் ,
வங்காளதேச-இந்திய
இயற்பியலாளர் (பி. 1858 )
1976 – மு. திருச்செல்வம்,
இலங்கைத் தமிழ் அரசியல்வாதி
(பி. 1907 )
1977 – பிரகாஷ் வீர் சாஸ்திரி ,
சமக்கிருத அறிஞர் (பி. 1923 )
1990 – ரூவால் டால் ,
பிரித்தானிய எழுத்தாளர் (பி.
1916 )
1990 – லெப்டினன்ட் கேணல்
போர்க் , விடுதலைப் புலிகளின்
மாவீரர் (பி. 1959 )
2012 – வீரபாண்டி எஸ். ஆறுமுகம்,
தமிழக அரசியல்வாதி (பி. 1937 )
2014 – செல்வா கனகநாயகம் ,
ஈழத்துப் பேராசிரியர், எழுத்தாளர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக