நவம்பர் 8 ( November 8)
கிரிகோரியன்
ஆண்டின் 312 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 313 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 53 நாட்கள்
உள்ளன.
நிகழ்வுகள்
1520 - டென்மார்க் படைகள் சுவீடனை
முற்றுகையிட்டன. சுமார் 100 பேர் வரையில்
கொல்லப்பட்டனர்.
1811 - இலங்கையில் இயற்றப்பட்ட புதிய
நீதிமன்ற சட்டப்படி மேல் நீதிமன்றம்
இரண்டாகப் பிரிக்கப்பட்டது. ஒன்று
கொழும்பில் பிரதம நீதியரசரின்
நீதிமன்றமும், Puisne Justice என
அழைக்கப்படும் நீதிமன்றம்
யாழ்ப்பாணத்திலும் அமைக்கப்பட்டன.
கிரிமினல் வழக்குகளுக்கு ஜூரி முறையும்
அமுலுக்கு வந்தது.
1889 - மொன்டானா ஐக்கிய
அமெரிக்காவின் 41வது
மாநிலமாக இணைந்தது.
1895 - எதிர்மின் கதிர்களைச் சோதனையிடும் போது
வில்ஹெம்
ரொண்ட்ஜென் எக்ஸ்
கதிர்களைக் கண்டுபிடித்தார்.
1917 - ரஷ்யாவில் அக்டோபர் புரட்சியை
அடுத்து லெனின் , ட்ரொட்ஸ்கி ,
ஸ்டாலின் ஆகியோருக்கு முழு அதிகாரமும்
தரப்பட்டது.
1923 - மியூனிக் நகரில் ஹிட்லர் தலைமையில்
நாசிகள் ஜெர்மனிய அரசைக்
கவிழ்க்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது.
1938 - பாரிஸ் நகரில் ஜெர்மனிய
தூதுவர் கொலை செய்யப்பட்டதை
அடுத்து ஜெர்மனியிலும்
ஆஸ்திரியாவிலும் யூதர்களுக்கு எதிராக
வன்முறைகள் கிளம்பின.
1939 - மியூனிக் நகரில் ஹிட்லரைக்
கொலை செய்ய எடுக்கப்பட்ட
முயற்சி தோல்வியடைந்தது.
1942 - மேற்கு உக்ரேனின் தெர்னோப்பில்
நகரில் நாசி ஜேர்மனியினர் 2,400 யூதர்களை
பெல்செக் நகரில் இருந்த வதை
முகாமுக்கு அனுப்பினர்.
1950 - கொரியப் போர் : ஐக்கிய
அமெரிக்க வான்படையினர் வட
கொரிய மிக் விமானங்கள்
இரண்டை சுட்டு வீழ்த்தினர்.
1965 - பிரித்தானிய இந்தியப்
பெருங்கடல் மண்டலம் அமைக்கப்பட்டது.
1977 - கிமு 1ம் நூற்றாண்டைச் சேர்ந்த
கிரேக்க மன்னன் இரண்டாம் பிலிப்பு
என்பவனின் சமாதி மனோலிஸ்
அண்ட்ரோனிக்ஸ் என்பவரால்
கண்டுபிடிக்கப்பட்டது.
1987 - வடக்கு அயர்லாந்தில்
பிரித்தானிய இராணுவ நினைவு
நிகழ்வொன்றில் ஐரியக் குடியரசு
இராணுவத்தினரின் குண்டு
வெடித்ததில் 12 பேர்
கொல்லப்பட்டனர்.
2006 - வாகரை குண்டுத்தாக்குதல் :
மட்டக்களப்பு வாகரையில் இலங்கை
இராணுவத்தினர் ஏவிய பல்குழல் எறிகணை
வீச்சுத் தாக்குதலில் 40
பொதுமக்கள்
கொல்லப்பட்டனர். 125-க்கும்
மேற்பட்டோர் காயமடைந்தனர்.
2006 - பாகிஸ்தானில் தர்காய் என்ற
இடத்தில் இடம்பெற்ற
தற்கொலைக் குண்டுத்தாக்குதலில்
45 இராணுவத்தினர்
கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்
1656 – எட்மண்டு ஏலி , ஆங்கிலேய
வானியலாளர் (இ. 1742 )
1680 – வீரமா முனிவர் , இத்தாலியத்
தமிழறிஞர் (இ. 1742 )
1831 – லிட்டன் பிரபு, இந்தியாவின்
30வது பிரித்தானிய ஆளுநர் (இ. 1880 )
1875 – சியூ சின், சீனப் புரட்சியாளர்,
பெண்ணிய எழுத்தாளர் (இ. 1907 )
1893 – துவாரம் வேங்கடசுவாமி
நாயுடு , வயலின் இசைக் கலைஞர் (இ:
[[1964])
1900 – ந. பிச்சமூர்த்தி , தமிழ் இலக்கிய
முன்னோடிகளுள் ஒருவர் (இ. 1976 )
1902 – ஜி. ஜி. பொன்னம்பலம் ,
இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. 1977 )
1903 – அல்பிரட் தம்பையா , இலங்கைத்
தமிழ் தொழிலதிபர்,
அரசியல்வாதி
1912 – டி. எஸ். சந்தானம் , தமிழகத்
தொழிலதிபர் (இ. 2005)
1923 – ஜாக் கில்பி, நோபல் பரிசு
பெற்ற அமெரிக்க
இயற்பியலாளர் (இ. 2005 )
1926 – டார்லீன் சி. ஆப்மேன் ,
அமெரிக்க அணுக்கரு வேதியியலாளர்
1927 – லால் கிருஷ்ண அத்வானி ,
இந்திய அரசியல்வாதி
1969 – உபேந்திரா லிமாயி , இந்தியத்
திரைப்பட நடிகர்
1976 – பிறெட் லீ , ஆத்திரேலியத்
துடுப்பாளர்
1984 – நயன்தாரா ,
தென்னிந்தியத் திரைப்பட நடிகை
1986 – ஏரன் சுவோற்சு , அமெரிக்க
கணினியியலாளர் (இ. 2013 )
இறப்புகள்
955 – இரண்டாம்
அகாப்பெட்டஸ் (திருத்தந்தை)
1674 – ஜான் மில்டன், ஆங்கிலேயக்
கவிஞர் (பி. 1608 )
1958 – சி. கணேசையர், இலங்கைத்
தமிழறிஞர் (பி. 1878 )
2000 – சோ. சிவபாதசுந்தரம்,
வானொலி ஒலிபரப்பாளர்,
ஊடகவியலாளர், எழுத்தாளர் (பி. 1912)
2009 – வித்தாலி கீன்ஸ்புர்க் , நோபல் பரிசு
பெற்ற உருசிய இயற்பியலாளர் (பி.
1916 )
2013 – சிட்டிபாபு, இந்திய நடிகர் (பி.
1964 )
2014 – வி. சிவசாமி , ஈழத்துத் தமிழறிஞர்,
பேராசிரியர் (பி. 1933)
2014 – ஐ. எஸ். முருகேசன், தமிழக இசைக்
கலைஞர் (பி. 1930 )
2015 – மாதுலுவாவே சோபித்த தேரர் ,
இலங்கைப் பௌத்த துறவி, அரசியல்
செயற்பாட்டாளர் (பி. 1942 )
சிறப்பு நாள்
பன்னாட்டுக் கதிரியல் நாள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக