நவம்பர் 14 ( November 14)
கிரிகோரியன்
ஆண்டின் 318 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 319 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 47 நாட்கள்
உள்ளன.
நிகழ்வுகள்
1885 - செர்பியா பல்கேரியா மீது
போர் தொடுத்தது.
1889 - நெல்லி பிளை என்ற
பெண் ஊடகவியலாளர் 80
நாட்களுக்குள் உலகைச் சுற்றி வரும் தனது
திட்டத்தை 72 நாட்களுக்குள்
வெற்றிகரமாக முடித்தார்.
1918 -
செக்கொஸ்லவாக்கியா
குடியரசாகியது.
1922 - பிபிசி தனது வானொலி
சேவையை ஐக்கிய இராச்சியத்தில்
தொடக்கியது.
1940 - இரண்டாம் உலகப் போர் :
இங்கிலாந்தில் கவெண்ட்ரி நகரம்
ஜேர்மனியரின் குண்டுவீச்சில் பலத்த
சேதமடைந்தது. கவெண்ட்ரி தேவாலயம்
முற்றாக அழிந்தது.
1956 - ஹங்கேரியில் போர் முடிவுக்கு வந்தது.
1963 - ஐஸ்லாந்து தீவின் அருகில் உள்ள
சூர்ட்ஸி என்னும் தீவு வட அட்லாண்டிக்
கடலில் எழுந்த எரிமலையால் புதிதாகத்
தோன்றியது.
1965 - வியட்நாம் போர்: லா ட்ராங்
என்ற இடத்தில் அமெரிக்கப்
படைகளுக்கும் வடக்கு வியட்நாம்
படைகளுக்கும் இடையில் பெரும் போர்
வெடித்தது.
1969 - அப்பல்லோ திட்டம் : அப்போலோ 12
விண்கப்பல் மூன்று விண்வெளி
வீரர்களுடன் சந்திரனை நோக்கிச் சென்றது.
1970 - மேற்கு வேர்ஜீனியாவில்
அமெரிக்க விமானம் ஒன்று வீழ்ந்து
விபத்துக்குள்ளாகியதில் 75 பேர்
கொல்லப்பட்டனர்.
1971 - மரைனர் 9 செவ்வாய் கோளை
சென்றடைந்தது. இதுவே பூமியில் இருந்து
வேறொரு கோளின் செயற்கைச்
செய்மதியாகச் செயற்பட்ட
முதலாவது விண்கலமாகும்.
1975 - மேற்கு சகாராவை விட்டு
ஸ்பெயின் விலகியது.
1990 - கிழக்கு ஜெர்மனி மற்றும்
மேற்கு ஜெர்மனிகளின் இணைப்பிற்குப்
பின்னர் போலந்துக்கும் ஜெர்மனிக்கும்
இடையிலான எல்லைகள் வரையறுக்கப்பட்டன.
1991 - நாடு கடந்த நிலையில் வாழ்ந்த
கம்போடியாவின் இளவரசர்
நொரொடோம் சிஹானூக்
13 ஆண்டுகளின் பின்னர் புனோம் பென்
திரும்பினார்.
1996 - டாக்டர் அம்பேத்கர் சட்டப்
பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
2001 - ஆப்கானிஸ்தானின் தலைநகர்
காபூலை ஆப்கான் கூட்டுப் படைகள் தமது
கட்டுப்பாட்டில் கொண்டு வந்தன.
பிறப்புகள்
1840 - கிளாடு மோனெ , பிரெஞ்சு
ஓவியர் (இ. 1926 )
1889 - ஜவகர்லால் நேரு, 1வது இந்தியப்
பிரதமர், அரசியல்வாதி (இ. 1964 )
1904 - ஹரால்ட் லார்வூட் , ஆங்கிலேய-
ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர் (இ. 1995 )
1907 - ஆஸ்ட்ரிட் லிண்ட்கிரென் ,
சுவீடிய எழுத்தாளர் (இ. 2002 )
1930 - எட்வேர்ட் வைட் , நாசா
விண்வெளி வீரர் (இ. 1967 )
1931 - இரா. பெருமாள் ராசு ,
இந்தியக் கவிஞர்
1947 - பி. ஜெ. ஓரூக், அமெரிக்க
ஊடகவியலாளர், எழுத்தாளர்
1948 - சார்லசு, வேல்சு இளவரசர்
1954 - காண்டலீசா ரைஸ், ஐக்கிய
அமெரிக்காவின் 66வது
செயலாளர்
1971 - அடம் கில்கிறிஸ்ற் , ஆத்திரேலியத்
துடுப்பாட்ட வீரர்
1972 - ஜோஷ் டுஹாமெல் ,
அமெரிக்க விளம்பர நடிகை
இறப்புகள்
565 - முதலாம் ஜஸ்டினியன்,
பைசாந்தியப் பேரரசன் (பி. 482 )
683 - முதலாம் யசீத் , உமையா கலீபா
(பி. 647 )
1716 - கோட்பிரீட் லைப்னிட்ஸ் ,
செருமானியக் கணிதவியலர்,
மெய்யியலாளர் (பி. 1646 )
1831 - எகல், ஜெர்மன் நாட்டு
மெய்யியல் அறிஞர் (பி. 1770 )
1977 - பிரபுபாதா , இந்திய மதகுரு,
அகில உலக கிருஷ்ண பக்திக் கழகம்
நிறுவனர் (பி. 1896 )
2015 - கே. எஸ். கோபாலகிருஷ்ணன் தமிழ்
திரைப்பட இயக்குனர் (பி. 1929
சிறப்பு நாள்
இந்தியா: குழந்தைகள் நாள்.
உலக நீரிழிவு நாள்
கூட்டுறவு வார விழா (இந்தியா) -
(நவம்பர் 14 முதல் 20 முடிய)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக