புதன், 9 நவம்பர், 2016

நவம்பர் 10 ( November 10)

நவம்பர் 10 ( November 10)

கிரிகோரியன் ஆண்டின் 314 ஆம்
நாளாகும். நெட்டாண்டுகளில் 315
ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு
மேலும் 51 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1444 - ஹங்கேரி, போலந்து
ஆகியவற்றின் அரசன் மூன்றாம்
விளாடிஸ்லாஸ் பல்கேரியாவின்
வர்னா என்ற இடத்தில் ஒட்டோமான்
பேரரசுடன் இடம்பெற்ற சமரில்
தோற்கடிக்கப்பட்டு கொலை
செய்யப்பட்டான்.
1520 - டென்மார்க் மன்னன்
இரண்டாம் கிறிஸ்டியான்
சுவீடனை முற்றுகையிட்டபோது
ஸ்டொக்ஹோம் நகரில் பலரைக்
கொன்றான்.
1580 - மூன்று நாள்
முற்றுகையை அடுத்து,
ஆங்கிலேய இராணுவம் கிட்டத்தட்ட
600 திருத்தந்தை நாடுகளின்
இராணுவத்தினரையும்,
பொதுமக்களையும் அயர்லாந்தில்
தலைகளைத் துண்டித்துப்
படுகொலை செய்தனர்.
1674 - ஆங்கிலேய-டச்சு போர்:
வெஸ்ட்மின்ஸ்டர் உடன்பாட்டின் படி
புதிய நெதர்லாந்தை
நெதர்லாந்து இங்கிலாந்திடம்
ஒப்படைத்தது.
1847 - ஸ்டீவன் விட்னி என்ற
பயணிகள் கப்பல் அயர்லாந்தின்
தெற்குக் கரையில் மூழ்கியதில்
92 பேர் கொல்லப்பட்டனர்.
1871 - காணாமல் போனதாகக்
கருதப்பட்ட ஸ்கொட்லாந்தின்
நாடுகாண் பயணியும்
மிஷனரியுமான டேவிட்
லிவிங்ஸ்டனைத்
தான்சானியாவில் தாம் கண்டதாக
நாடுகாண் பயணியும்
ஊடகவியலாளருமான ஹென்றி
மோர்ட்டன் ஸ்டான்லி அறிவித்தார்.
1887 - ஹே சந்தைக் கலவரத்தின்
போது மரண தண்டனை
விதிக்கப்பட்ட லூயிஸ் லிங் என்ற
தொழிலாளர் தலைவர் லண்டனில்
டைனமைட் வெடிக்கவைத்து
தற்கொலை செய்து கொண்டார்.
1918 - யாழ்ப்பாணம், சுன்னாகம் ,
பருத்தித்துறை ஆகிய நகரங்களில்
இடம்பெற்ற உள்ளூர்க் கலவரங்களில்
பல கடைகள் சூறையாடப்பட்டன.
1928 - ஹிரொஹீட்டோ ஜப்பானின்
124வது மன்னரானார்.
1970 - சோவியத்தின் லூனா 17
விண்கப்பல் சந்திரனுக்கு
"லூனாகோட்" எனப்படும்
தானியங்கி ஊர்தியைக்
கொண்டு சென்றது.
1971 - கம்போடியாவில் கெமர்
ரூச் படைகள் புனோம் பென்
நகரையும் விமான
நிலையத்தையும் தாக்கி 44
பேரைக் கொன்று பல
விமானங்களை அழித்தனர்.
1972 - பேர்மிங்ஹாமில் இருந்து
புறப்பட்ட விமானம் கடத்தப்பட்டு
ஹவானாவில் இறக்கப்பட்டது.
கடத்தல்காரர்கள் கியூபாவில்
கைது செய்யப்பட்டனர்.
1993 - தவளை நடவடிக்கை, 1993 :
யாழ்ப்பாணத்தில் பூநகரி ,
நாகதேவந்துறை இராணுவக்
கடற்படைக் கூட்டுத்தளம் மீது
விடுதலைப் புலிகள்
வெற்றிகரமான தாக்குதலை
ஆரம்பித்தனர்.
1995 - நைஜீரியாவில் சுற்றுச்
சூழல் ஆதரவாளர் கென் சரோ-
வீவா என்பவரும் அவரது 8
சகாக்களும் தூக்கிலிடப்பட்டனர்.
1999 - பாகிஸ்தானில் தேசத்
துரோகம் மற்றும் சதி
செயல்களில் ஈடுபட்டதாக
முன்னாள் பிரதமர் நவாஸ்
ஷெரீப்புக்கு எதிராக வழக்குத்
தொடரப்பட்டது.
2006 - தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பு நாடாளுமன்ற
உறுப்பினர் நடராஜா ரவிராஜ்
கொழும்பில் சுட்டுக் கொலை
செய்யப்பட்டார்.
2008 - செவ்வாய்க் கோளில்
தரையிறங்கிய ஐந்து மாதங்களில்
பீனிக்சு விண்கலத்துடனான
தொடர்புகள் அறுந்த நிலையில்
இத்திட்டம் முடிவுக்கு வந்ததாக
நாசா அறிவித்தது.
பிறப்புகள்
1483 - மார்ட்டின் லூதர்,
கிறித்தவச் சீர்திருத்த இயக்கத்
தலைவர் (இ. 1546 )
1697 - வில்லியம் ஹோகார்த்,
ஆங்கிலேய ஓவியர் (இ. 1764)
1910 - கொத்தமங்கலம் சுப்பு ,
எழுத்தாளர், நடிகர் (இ. 1974 )
1917 - சோ. தம்பிராஜா , இலங்கை
அரசியல்வாதி
1919 - மிக்கைல்
கலாசுனிக்கோவ் , ரஷ்யாவின்
ஏகே47 இயந்திரத் துப்பாக்கியை
வடிவமைத்தவர். (இ. 2013 )
1934 - அ. துரைராஜா ,
பேராசிரியர், யாழ்
பல்கலைக்கழகத் துணைவேந்தர்
(பி. 1994 )
1953 - எஸ். ஸ்ரீஸ்கந்தராஜா ,
இலங்கை மேன்முறையீட்டு
நீதிமன்றத் தலைமை நீதிபதி (இ.
2014 )
1957 - டக்ளஸ் தேவானந்தா , ஈழ
மக்கள் ஜனநாயகக் கட்சியின்
தலைவர்
1960 - நீல் கெய்மென் , ஆங்கிலேய
எழுத்தாளர்
இறப்புகள்
461 - முதலாம் லியோ ,
திருத்தந்தை (பி. 400)
1549 - மூன்றாம் பவுல் ,
திருத்தந்தை (பி. 1468)
1891 - ஆர்தர் ராம்போ , பிரெஞ்சுக்
கவிஞர் (பி. 1854 )
1938 - முஸ்தாபா கெமால்
அத்தாதுர்க் , துருக்கிய
அரசியல்வாதி (பி. 1881)
1977 - தமிழ்வாணன் தமிழக
எழுத்தாளர், இதழாசிரியர்.
(பி. 1926)
1982 - லியோனிட் பிரெஷ்னெவ் ,
சோவியத் யூனியன் தலைவர் (பி.
1906 )
2006 - நடராஜா ரவிராஜ்,
ஈழத்தமிழ் அரசியல்வாதி (பி. 1962)
2014 - எம். எஸ். எஸ். பாண்டியன் ,
சமூக ஆய்வாளர், பேராசிரியர்
சிறப்பு நாள்
உலக அறிவியல் நாள்
(யுனெஸ்கோ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக