நவம்பர் 2 ( November 2)
கிரிகோரியன்
ஆண்டின் 306 ஆம் நாளாகும்.
நெட்டாண்டுகளில் 307 ஆம் நாள்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 59
நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1570 - வட கடலில் ஏற்பட்ட
சூறாவளி காரணமாக
ஒல்லாந்தில் 1,000 பேர் வரையில்
இறந்தனர்.
1834 - முதன்முதலாக
இந்தியாவில் இருந்து 75 ஒப்பந்தத்
தொழிலாளர்கள் மொரீசியஸ்
சென்றனர்.
1868 - நியூசிலாந்து சீர்
நேரத்தை நாடு முழுவதும்
அறிமுகப்படுத்தியது.
1889 - வடக்கு மற்றும் தெற்கு
டகோட்டா ஐக்கிய
அமெரிக்காவின் 39வது, 40வது
மாநிலங்களாக முறையே
இணைந்தன.
1899 - தென்னாபிரிக்காவில்
போவர்கள் பிரித்தானியர்கள் வசம்
இருந்த லேடிஸ்மித் பகுதியை 188
நாட்கள் பிடித்து வைத்திருந்தனர்.
1914 - ரஷ்யா ஓட்டோமான்
பேரரசு மீது போரை
அறிவித்தது.
1917 - பிரித்தானியாவின்
வெளிநாட்டு
விவகாரங்களுக்குப்
பொறுப்பான செயலாளராக
இருந்த ஆதர் பெல்ஃபர் வெளியிட்ட
பிரகடனத்தில் யூதர்களுக்கு
பாலஸ்தீனத்தில் ஒரு தேசியத்
தாயகம் ஏற்படுத்தப்பட வேண்டும்
என்பதை இங்கிலாந்து அரசு
ஆதரிக்கிறது எனக் கூறப்பட்டது.
1930 - ஹைலி செலாசி
எதியோப்பியாவின் பேரரசன்
ஆனான்.
1936 - இத்தாலியின்
சர்வாதிகாரி முசோலினி ரோம்-
பேர்லின் அச்சு என்ற அச்சு
அணியை அறிவித்தான்.
1936 - பிபிசி நிறுவனம்
தொலைக்காட்சி சேவையை
ஆரம்பித்தது.
1936 - கனடிய ஒலிபரப்பு
கூட்டுத்தாபனம் நிறுவப்பட்டது.
1953 - பாகிஸ்தான், பாகிஸ்தான்
இஸ்லாமியக் குடியரசு எனப்
பெயர் மாற்றம் பெற்றது.
1963 - தெற்கு வியட்நாம் அதிபர்
நியோ டின் டியெம் Ngo Dinh Diem
இராணுவப் புரட்சியை அடுத்து
கொலை செய்யப்பட்டார்.
1974 - தென் கொரியத் தலைநகர்
சியோலில் விடுதி ஒன்றில்
இடம்பெற்ற தீ விபத்தில் 78 பேர்
கொல்லப்பட்டனர்.
2000 - பன்னாட்டு விண்வெளி
நிலையத்துக்கு முதன் முதலாக
விண்வெளி வீரர்கள்
சென்றடைந்தனர்.
2006 - ஈழப்போர் : கிளிநொச்சி
வைத்தியசாலை சுற்றவுள்ள
பகுதிகளில் இலங்கை
விமானப்படையினர் நடத்திய
குண்டுத்தாக்குதலில் 4
பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
2007 - இலங்கை வான்படையின்
வான்குண்டுத் தாக்குதலில்
விடுதலைப் புலிகளின்
அரசியல்துறைப் பொறுப்பாளர்
சு. ப. தமிழ்ச்செல்வன் உட்பட ஆறு
விடுதலைப் புலிகள்
கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்
971 – கசினியின் மகுமூது (i.
1030 )
1795 – ஜேம்ஸ் போக் , ஐக்கிய
அமெரிக்காவின் 11வது
அரசுத்தலைவர் (இ. 1849)
1815 – ஜார்ஜ் பூல், ஆங்கிலேயக்
கணிதவியலாளர், மெய்யியலாளர்
(இ. 1864 )
1833 – மகேந்திரலால் சர்க்கார் ,
இந்திய மருத்துவர் (இ. 1904 )
1929 – அமர் கோ. போசு ,
அமெரிக்கப் பொறியியலாளர்,
தொழிலதிபர் (இ. 2013 )
1941 – அருண் சோரி, இந்திய
அரசியல்வாதி
1965 – ஷாருக்கான் , இந்திய
நடிகர்
1966 – டேவிட் சுவிம்மர்,
அமெரிக்க நடிகர்
1987 – பாலா சரவணன் , இந்தியத்
திரைப்பட நடிகர்
1990 – கெண்டல் ஸ்மித் ,
அமெரிக்கப் பாடகர், நடிகர்
இறப்புகள்
1903 – வி. கோ. சூரியநாராயண
சாஸ்திரிகள், தமிழறிஞர் (பி. 1870).
1917 – ஆ.
முத்துத்தம்பிப்பிள்ளை , ஈழத்துத்
தமிழ் எழுத்தாளர் (பி. 1858 ).
1950 – ஜார்ஜ் பெர்னாட் ஷா,
நோபல் பரிசு பெற்ற ஐரிய
எழுத்தாளர் (பி. 1856 )
1966 – பீட்டர் டெபாய், நோபல்
பரிசு பெற்ற டச்சு-அமெரிக்க
வேதியியலாளர் (பி. 1884 )
1978 – ஏ. பெரியதம்பிப்பிள்ளை ,
ஈழத்துத் தமிழறிஞர் (பி. 1899)
2004 – தியோ வன் கோ , டச்சு
நடிகர், இயக்குநர் (பி. 1957 )
2007 – சு. ப. தமிழ்ச்செல்வன் ,
விடுதலைப் புலிகளின் அரசியல்
துறைப் பொறுப்பாளர் (பி. 1967 )
2011 – சி. தர்மகுலசிங்கம் , ஈழத்து
எழுத்தாளர், பத்திரிகையாளர் (பி.
1947 )
சிறப்பு நாள்
இறந்த விசுவாசிகள்
அனைவரின் நினைவு நாள்
( கத்தோலிக்கம் , ஆங்கிலிக்கம் )
இந்தியர் வருகை நாள்
( மொரிசியசு )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக